என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மீண்டும் மழையால் குறுவை அறுவடை பாதிக்கும் அபாயம்
  X

  மீண்டும் மழையால் குறுவை அறுவடை பாதிக்கும் அபாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தொடர்ந்து இடி- மின்னலுடன் மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
  • இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பகலில் வெயில் சுட்டெரித்தது.

  தஞ்சாவூர்:

  தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது.

  இந்த மாதம் தொடக்கத்திலும் கனமழை பெய்தது. பகலில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை, இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக உள்ளது. கடந்த 2 நாட்களாக மழை இன்றி வெயில் அடித்தது. ஆனால் மீண்டும் நேற்று மழை பெய்தது. தஞ்சையில் நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. மாலை 5 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இரவு போல் காட்சியளித்தது.

  தொடர்ந்து இடி- மின்னலுடன் மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

  பின்னர் மழை இன்றி காணப்பட்டாலும் தொடர்ந்து இடி- மின்னலுடன் குளிர்ந்த காற்று வீசியபடி இருந்தது.

  இந்த மழையால் தஞ்சை சாந்தபிள்ளைகேட் ரெயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கியது.

  இதனால் அந்த வழியாக பூக்காரதெரு, விளார் சாலைக்கு செல்பவர்கள் மாற்று வழியில் சென்றனர்.

  இதேப்போல் நாஞ்சிக்கோட்டை, கொல்லாங்கரை, வேங்கைராயன்குடிகாடு, வல்லம், பூதலூர், பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது.

  ஆலங்குடி பறவழிச்சாலை பாலம் அருகே மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பகலில் வெயில் சுட்டெரித்தது.

  மாலை அல்லது இரவு நேரங்களில் மீண்டும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஏற்கனவே கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து பெய்த மழையால்அறுவ டைக்கு தயாரான குறுவை பயிர்கள் பாதிக்கப்ப ட்டிருந்தன.

  2 நாட்களாக மழை இன்றி வெயில் அடித்ததால் அறுவடை பணியை தொடங்கலாம் என விவசாயிகள் நினைத்திருந்தனர்.

  ஆனால் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

  இந்த ஆண்டு குறுவை முன் பருவத்தில் சாகுபடி செய்த விவசாயிகள் தொடர் மழையால் பாதிக்கப்ப ட்டுள்ளதால் தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×