search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மான் மயில்"

    • மயில்கள் பெருகியதால் சிறுதானியங்கள், நிலக்கடலை, பயறு வகைகள் போன்றவற்றை பயிரிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • மான்களிடம் இருந்து தப்ப, அதிக பொருட்செலவில் கம்பி வேலி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    ஒரு காலத்தில் வனத்தில் மட்டுமே மான்கள் வாழ்ந்தது. வனத்தை சிறிது சிறிதாக மனிதர்கள் ஆக்கிரமிக்க துவங்கிய பின்விலங்குகளின் வாழ்விடம் பறிபோனது. இதனால் மான், யானை, கரடி உட்பட பல விலங்குகள் கூட்டம் உணவு தேடி சமவெளிப் பகுதிக்கு வரத் துவங்கியுள்ளன.குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மான்கள் உணவு தேட வந்த இடத்தையே தங்கள் வாழ்விடமாக மாற்றி விடுகின்றன.

    அவிநாசி அருகே புதுப்பாளையம் குளத்தில் மான்கள் பெருகியதால் விவசாயிகள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தற்போது பொங்கலூர் அருகே உப்புக்கரை நதியை சுற்றியுள்ள சின்னாரியபட்டி, தங்காய்புதுார், பெரியாரியபட்டி போன்ற பகுதிகளில் மான்கள் கூட்டம் பெருகி வருகிறது. இவை பயிர்களை தின்று விடுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    மயில்கள் பெருகியதால் சிறுதானியங்கள், நிலக்கடலை, பயறு வகைகள் போன்றவற்றை பயிரிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மான்கள் பெருகி வருவதால் மாட்டுத்தீவனம் பயிர்கள், காய்கறி பயிர்கள் போன்றவற்றை சாப்பிட்டு விடுகின்றன.இரவு நேரத்தில் அவை மேய்ச்சலுக்கு வருவதால் கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. மழைக்காலங்களில் பெரிய அளவில் பாதிப்பில்லை.வறட்சி காலங்களில் கால் ஏக்கர், அரை ஏக்கர் மட்டுமே விவசாயம் செய்கிறோம். அவற்றையும் மான்கள் முடித்து விடுகின்றன. மான்களிடம் இருந்து தப்ப, அதிக பொருட்செலவில் கம்பி வேலி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அனைத்து விவசாயிகளாலும் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க முடியாது.பெருகிவரும் மான் கூட்டம் விவசாயிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×