search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மான்"

    • மானை கைப்பற்றி சீர்காழி கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • நாய் துரத்தியதில் மான் முள்வேலியில் சிக்கி இறந்ததா?

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவின் பல்வேறு இடங்களில் மான்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.

    இதுபோல செம்பியன் வேலங்குடி பகுதியில் உள்ள கருவேலங்காட்டிலும் மான்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

    இந்நிலையில் செம்பியன் வேலங்குடி பொறை வாய்க்கால் அருகே சுமார் 2 வயது உடைய பெண் புள்ளிமான் ஒன்று முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி வனச்சரகர் ஜோசப் டேனியல் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் புள்ளி மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த புள்ளிமான் நாய் துரத்தியதில் முள்வேலியில் மோதிய அதிர்ச்சியில் இறந்ததா, அல்லது வேறு காரணமா என தெரியவில்லை.

    பிரேத பரிசோதனையின் முடிவிலேயே மான் இறப்பிற்கான முழுமையான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • நேற்று அதிகாலை 2 மான்கள் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது.
    • 2 வயதுடைய ஒரு ஆண் மான், ஒரு பெண் மான் ஆகும்.

    திருப்பூர்:

    திருப்பூர் வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையம் அருகே நேற்று அதிகாலை 2 மான்கள் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது. இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மானின் உடலை கைப்பற்றினார்கள்.

    பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினரிடம் மான்களின் உடலை போலீசார் ஒப்படைத்தனர். ரெயிலில் அடிபட்டு இறந்தது 2 வயதுடைய ஒரு ஆண் மான், ஒரு பெண் மான் ஆகும். இரை தேடி வந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்ததாக தெரிவித்தனர்.

    • திருச்சி மணிகண்டம் அருகே கம்பி வேலியில் சிக்கி புள்ளிமான் உயிரிழப்பு
    • வனத்துறையினரிடம் இறந்து போன மானை ஒப்படைத்தனர்.

    ராம்ஜி நகர் 

    திருச்சி மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூர் கிராமத்திம் இந்திரா நகர் பகுதியில் புள்ளி மான் ஒன்று கம்பி வேலியில் மாட்டி இறந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற மணிகண்டம் போலிசார் மான் இறந்து போன தகவலை வனத்துறையினருக்கு தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினரிடம் இறந்து போன மானை ஒப்படைத்தனர். அளுந்தூர் கிராமத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் விராலிமலை இருப்பதால் அதனை ஒட்டியுள்ள வனப் பகுதியில் இருந்து வழி தவறி இந்த புள்ளிமான் வந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பது பார்த்தா அப்பகுதி மக்கள் பரிதாபத்துடன் ஆச்சரியத்துடனும் பார்த்து சென்றனர். 

    • சங்கமகுளம் அருகே 2 வயதுடைய ஆண் மான் ஒன்று உணவுத் தேடி வந்துள்ளது.
    • தெரு நாய்கள் மானை பார்த்ததும் அதை துரத்தி சுற்றி வளைத்து கடித்து குதறி உள்ளது.

    அவினாசி:

    அவினாசி, புதுப்பாளையம், தெக்கலூர், கோதப்பாளையம், ராயபாளையம் , சங்கமகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இவை மான்கள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் அடிக்கடி அவினாசி நகர்ப்புறங்களுக்கு அவ்வப்போது வருகின்றன. இந்த நிலையில் நேற்று அவினாசியை அடுத்து ராயம்பாளையம் சங்கமகுளம் அருகே 2 வயதுடைய ஆண் மான் ஒன்று உணவுத் தேடி வந்துள்ளது.

    அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் மானை பார்த்ததும் அதை துரத்தி சுற்றி வளைத்து கடித்து குதறி உள்ளது.இதில் மானின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து மானை மீட்டு சிகிச்சைக்காக அவினாசி கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் . ஆனால் சிகிச்சை பலனின்றி மான் பரிதாபமாக உயிரிழந்தது. எனவே அச்சுறுத்தும் வகையில் சுற்றிக் கொண்டிருக்கும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீர்வரத்து பகுதியான உப்பாறு ஓடையில் அதிக அளவில் மான்கள் காணப்படுகின்றன.
    • மான்களை அதன் இறைச்சிக்காக ஒரு சிலா் வேட்டையாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

    திருப்பூர்:

    பல்லடத்தை அடுத்துள்ள பொங்கலூா் பகுதியில் உப்பாறு அணை உள்ளது. இதன் நீா்வரத்து பகுதியான உப்பாறு ஓடையில் அதிக அளவில் மான்கள் காணப்படுகின்றன. தற்போது மான்களின் இனப்பெருக்கக் காலமாக உள்ளது.

    இந்நிலையில், உப்பாறு ஓடையில் காணப்படும் மான்களை அதன் இறைச்சிக்காக ஒரு சிலா் வேட்டையாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.மேலும் இப்பகுதியில் காணப்படும் மான்களை பாதுகாக்க மான் வேட்டையில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

    • வழி தெரியாமல் ஊருக்குள் புகுந்த மானை தெருநாய்கள் கடித்தன.
    • கடப்போகத்தி காட்டுப் பகுதியில் அதிகளவில் மான்கள் உள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வழி தெரியாமல் ஊருக்குள் புகுந்த மான் ஒன்றை தெருநாய்கள் கடித்து குதறிக்கொண்டிருந்தன.

    அதனை கண்ட பொதுமக்கள் நாய்களை அங்கிருந்து துரத்தி விட்டு வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அலுவலர் நேரில் வந்து பார்த்தபோது நாய்கள் கடித்ததில் மான் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த மான் பெண் மான் என்றும், அதற்கு 3 வயது இருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கடப்போகத்தி பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் அதிகளவில் மான்கள் உள்ளது. அங்கிருந்து தப்பி ஊருக்குள் வந்த மானை நாய்கள் துரத்தி கடித்துள்ளதாக வனத்துறை அலுவலர் தெரிவித்தார்.

    • மான் தொடர்ந்து பாம்பை கடித்து சாப்பிடுவதை பார்க்க முடிகிறது
    • ஒருவர் தாவரங்களை மட்டும் சாப்பிடுவதில் மானுக்கு சலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

    சைவ உண்ணியான மான் புல் போன்ற தாவர வகைகளை சாப்பிடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வன பகுதியில் உலாவும் மான் ஒன்று தனது அன்றாட உணவை போல் பாம்பை கடித்து விழுங்குவதை காணமுடிகிறது.

    வனத்துறை அதிகாரியான பர்வின் கஸ்வான் என்பவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், வனப்பகுதியில் சாலையோரத்தில் நிற்கும் ஒரு மானின் வாயில் பாம்பு தொங்குகிறது. அந்த மான் தொடர்ந்து பாம்பை கடித்து சாப்பிடுவதை பார்க்க முடிகிறது. பிகேன் என்பவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை வன அதிகாரியான பர்வின் கஸ்வான் ரீடுவிட் செய்துள்ளார். வீடியோவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் தாவரங்களை மட்டும் சாப்பிடுவதில் மானுக்கு சலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பதிவிட்டுள்ளார். இதே போல ஏராளமான பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • சில சமூக விரோதிகள் காட்டுக்குள் சட்ட விரோதமாக புகுந்து மான்களை வேட்டை யாடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
    • சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய 6 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் மான் உள்ளிட்ட அரிய வன விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. சில சமூக விரோதிகள் காட்டுக் குள் சட்ட விரோதமாக புகுந்து மான்களை வேட்டை யாடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதன் காரணமாக வனத்துறையினரும் ராஜபாளையம் வனப்பகுதியில் கண்கா ணிப்பை தீவிரப்படுத்தி யுள்ளனர்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று வனச்சரக அலுவலர்கள் சக்தி பிரசாத், கதிர்காமன், வனவர் இள வரசன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ஆவாரம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

    உடனே வனத்துறையினர் அந்த வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர். அப்போது அங்கிருந்த கும்பல் ஓட்டம் பிடித்தது. உடனே வனத்துறையினர் அவர்களை விரட்டிச் சென்றனர். இதில் 6 பேர் தப்பிவிட, காளிராஜ் (வயது21) என்பவர் மட்டும் சிக்கினார். தொடர்ந்து வீட்டில் இருந்த 10 கிலோ மான் இறைச்சி, அரிவாள், கத்தி, எடை எந்திரம் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக காளிராஜை கைது செய்து விசாரித்தபோது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான வாழைக்குளம் பகுதியில் இரவு நேரங்களில் கும்பலாக சென்று மான்களை வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய 6 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    உணவுக்காக மலையில் இருந்து வெளியேறி அருகிலுள்ள தோட்டங்களுக்கு மான்கள் செல்கின்றன.

    காங்கயம்:

    காங்கயம் அடுத்துள்ள ஊதியூா் மலையில் 100 க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன. கோடை காலங்களில் மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால் குடிநீா் மற்றும் உணவுக்காக மலையில் இருந்து வெளியேறி அருகிலுள்ள தோட்டங்களுக்கு செல்வது வழக்கம்.

    இந்நிலையில், சனிக்கிழமை இரவு மலையிலிருந்து கீழிறங்கி, குண்டடம் சாலையைக் கடக்க முயன்ற ஒரு புள்ளிமான், ஒரம்பபுதூா் பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி உயிரிழந்தது. இது குறித்த தகவலறிந்த காங்கயம் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று மானின் உடலை கைப்பற்றினா். இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா். 

    • புள்ளிமானை நாய்கள் துரத்தி வந்த நிலையில் பள்ளி வகுப்பறையில் புகுந்த மானை பத்திரமாக அப்பகுதி மக்கள் மீட்டனர்.
    • மாதவரம் வனத்துறையினர் மானை மீட்டு வனபகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த வேன்பாக்கம் அரசு மேல் நிலைப் பள்ளி அருகே காட்டுப்பள்ளி வனப்பகுதியில் இருந்து தண்ணீருக்காக வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தி வந்த நிலையில் பள்ளி வகுப்பறையில் புகுந்த மானை பத்திரமாக அப்பகுதி மக்கள் மீட்டனர்.

    கும்முடிப்பூண்டி அடுத்த மாதவரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மாதவரம் வனத்துறையினர் மானை மீட்டு வனபகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    • அந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் திடீரென துரத்தி துரத்தி கடித்தது.
    • பின்னர், அந்த மான் கோடியக்கரை சரணாலய பகுதியில் விடப்பட்டது

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த நாலுவேதபதி கடற்கரை பகுதியில் 2 வயதுடைய புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிந்தது.

    வழக்கம்போல் சுற்றித்திரிந்த அந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் திடீரென துரத்தி துரத்தி கடித்தது.

    இதனால் காயங்களுடன் கிடந்த அந்த மானை அவ்வழியாக வந்த பிரபுகுமார் என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே, கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கானுக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலறிந்தவர்கள் வனவர் பெரியசாமி, வனக்காவலர் நாகூரான், வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ், வேதமூர்த்தி, நவநீதகிருஷ்ணன் ஆகியோர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மானை மீட்டு கோடியக்கரை உதவி கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    பின்னர், அந்த மான் கோடியக்கரை சரணாலய பகுதியில் விடப்பட்டது.

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சாலையோரம் வரும் மான், யானைகளை போட்டோ எடுத்தால் வழக்குப்பதிவு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • மனிதர்களின் தேவையற்ற செயல்களால் மனித-விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாவும் ஆபத்து நிகழும் முன் நடவடிக்கையாக வனத்தில் அத்துமீறுவோர் மீது அபராதம், வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது 1435 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இந்த புலிகள் காப்பகம் 2013-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி தமிழகத்தின் 4-வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

    இங்கு யானைகள் புலி,சிறுத்தை, கரடி, செந்நாய்கள், கடமான்கள், புள்ளிமான்கள், கழுதைபுலி என ஆயிரக்கணக்கான வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது.

    இந்த சரணாலயத்தின் மேற்கு கிழக்கு தொடர்ச்சி மலை சந்திக்கும் தலமலை வனப்பகுதி யானைகள் இடம்பெறும் முக்கிய வழித்தடமாக உள்ளது. அண்மையில் நடந்த கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 1200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    தற்போது ஊட்டி, கொடைக்கானல் போல இதமான கால நிலை நிலவுவதால் திம்பம், ஆசனூர் கேர்மாளம் வனச்சாலையில் ஆயிரக்கணக்கானோர் முகாமிட்டு இயற்கையின் அழகை ரசிக்கின்றனர். யானை, புள்ளிமான்கள் போன்ற விலங்குகள் சாாலையோரம் துளிர்விட்டு பச்சைபசேல் என படர்ந்திருக்கும் புற்களை சாப்பிட அடிக்கடி வருவது வழக்கம்.

    அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவே தேசிய நெடுஞ்சாலை செல்வதால் இரு மாநிலங்களிடையே பயணிக்கும் வாகன ஓட்டிகள்,சுற்றுலா பயணிகள் யானை, புள்ளிமான்களை பார்த்து மெய்சிலிர்க்கின்றனர். சிலர் வாகனத்தை நிறுத்தி புகைப்படம் எடுப்பது, சப்தமிடுவதும் வனவிலங்குகளின் நேர்மறையான எண்ணங்களை உருவாக்குகின்றன.

    சில வாகன ஓட்டிகள் ஆர்வம் காரணமாக யானைகள் அருகே நின்று செல்பி எடுக்கின்றனர். இதனால் யானை அவர்களை துரத்தி தாக்க முற்படுவதும் அவர்கள் தப்பிப்பதும் வாடிக்கையாகி விட்டது. ஆபத்தை உணராத இளைஞர்கள் மலை உச்சியில் நின்று மலைகளின் பின்னணியில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    சல சலவென ஓடும் நீரோடைகளில் உள்ள பாறைகள் மீது அமர்ந்து மது அருந்துவதும் எல்லையை மீறிய செயலாககாணமுடிகிறது. இயற்கையான சூழல் கொண்ட விலங்குகள் வாழும் வாழ்விடத்தில் மனிதர்கள் அத்துமீறி நுழைந்து யானை, சிறுத்தை. புள்ளிமான்களின் வாழ்விடத்தில் இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை கள இயக்குநர் கிருபா சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    மனிதர்களின் தேவையற்ற செயல்களால் மனித-விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாவும் ஆபத்து நிகழும் முன் நடவடிக்கையாக வனத்தில் அத்துமீறுவோர் மீது அபராதம், வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

    ×