என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
காங்கயம் அருகே வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழப்பு
- கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வருகின்றன.
- மானின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பீலிக்காம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
காங்கயம் :
காங்கயம்-தாராபுரம் சாலையில் உள்ள ஊதியூா் மலையில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வருகின்றன. இந்நிலையில் ஊதியூா் வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு வெளியேறிய புள்ளிமான் குண்டடம் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மானின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பீலிக்காம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குடிநீர் தேடி வனங்களில் இருந்து வெளியேறும் விலங்குகள் வாகனங்களில் மோதி உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. எனவே வனங்களில் குடிநீா்த் தொட்டி அமைத்து தண்ணீா் நிரப்ப வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.






