என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deer Hunt"

    • சிங்கம், புலி போன்ற விலங்குகள் கூட காண்டாமிருகத்திடம் சண்டை போட பயப்படும்.
    • காண்டாமிருகத்திடம் குட்டி மான் துணிச்சலுடன் சண்டை போட்ட நிகழ்வு போலந்து நாட்டில் நடந்துள்ளது.

    காடுகளில் வாழும் உயிரிளங்களில் மிக பலம் வாய்ந்த உயிரிளங்களில் காண்டாமிருகமும் ஒன்று. சிங்கம், புலி போன்ற விலங்குகள் கூட காண்டாமிருகத்திடம் சண்டை போட பயப்படும். அந்த அளவிற்கு பலம் கொண்ட காண்டாமிருகத்திடம் குட்டி மான் துணிச்சலுடன் சண்டை போட்ட நிகழ்வு போலந்து நாட்டில் நடந்துள்ளது.

    போலந்து - வ்ரோக்லாவ் உயிரியல் பூங்காவில் தான் காண்டாமிருகத்தை எதிர்த்து மான் குட்டி இன்று துணிச்சலாக சண்டை போட்டுள்ளது. குட்டியை மானின் துணிச்சலை மதித்து காண்டாமிருகமும் மான்குட்டிக்கு அடி படாதவாறு அதனுடன் செல்ல சண்டை போட்டுள்ளது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. பலரும் மான்குட்டியின் துணிச்சலை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகினறனர்.

    உளுந்தூர்பேட்டை அருகே மான் வேட்டையாடிய 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் அந்த பகுதியில் நேற்று இரவு ரோந்து சென்றனர்.

    எறையூர் பகுதியில் 2 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நாட்டு துப்பாக்கி ஒன்றும் வைத்திருந்தனர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    உடனே அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, எறையூர் பகுதியை சேர்ந்த டேவிட் (வயது 38), குழந்தைசாமி (28) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் எறையூர் காப்புக்காட்டு பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் மான் வேட்டையாட சென்றது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து டேவிட், குழந்தைசாமி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×