search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2023"

    • இறுதியில் கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.
    • தொடர்ந்து 4 பந்துகள் மோகித் சர்மா யார்க்கராக வீசினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி 3 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

    பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடின இலக்கை துரத்தியது. முதல் ஓவரிலயே மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி சென்னையின் வெற்றிக்கு 171 ரன்கள் தேவைப்பட்டது.

    இறுதியில் கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மோகித் சர்மா வீசினார். தொடர்ந்து 4 பந்துகள் யார்க்கராக வீசினார். 5-வது பந்தில் அவருக்கு கூல்டிரிங்ஸ் மற்றும் அறிவுரை கூறுகிறேன் என்ற பெயரில் ஏதோ அட்வைஸ் கொடுத்திருக்கிறார் பவுலிங் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா. அந்தப் பந்தில் ஜடேஜா சிக்சர் விளாசிவிட்டார்.

    இறுதியாக கடைசி பந்தை லெக் சைடில் கொஞ்சம் வைடாக வீசிவிட்டார். இதனை எளிதாக தட்டி விடவே பந்து பவுண்டரிக்கு சென்றது. இதன் காரணமாக சிஎஸ்கே வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில், அறிவுரை வழங்குகிறேன் என்ற பெயரில் நன்றாக பந்து வீசிய மோகித் சர்மாவை குழப்பத்தில் ஆழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி தோற்பதற்கு ஆசிஷ் நெஹ்ராவே காரணமாக அமைந்துவிட்டார் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.
    • வெற்றி பெற்றதையடுத்து சிஎஸ்கே வீரர்கள் அவர்களது மனைவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    பரபரப்பான ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது. 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. 

    இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்றதையடுத்து சிஎஸ்கே வீரர்கள் அவர்களது மனைவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






     



    • போட்டி முடிந்த பின்னர் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
    • ஜடேஜாவின் வின்னிங் ஷாட்டை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

    16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார்.

    கடைசி 2 பந்தில் 10 ரன் தேவை என்ற நிலையில், 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார். போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஜடேஜாவின் வின்னிங் ஷாட்டை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஜடேஜாவை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

    அதில், கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி திருமதி. ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர்! பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார்

    இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

    • ஜெயித்த உடன் உணர்ச்சி பெருக்கில் சிஎஸ்கே ரசிகர் கத்தினார்.
    • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நேற்றைய பரப்பரப்பான ஆட்டத்தில் கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை ஜடேஜா சிக்சர் அடித்தார். அதனால் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அந்த போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் ஒருவர் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது டிவி முன்பு சென்று சக்தி உள்ள தெய்வமா இருந்தா இந்த ஒரு பால்ல ஜெயிக்கனுமா..ஓம் சக்தி...ஓம் சக்தி சமயபுரத்து மகமாயி.. மகமாயி டோனியோட கடைசி கேம்மா... என்று உருக்கமாக வேண்டிக்கொண்டார்.

    ஜெயித்த உடன் உணர்ச்சி பெருக்கில் அவர் கத்தினார். இதை பார்த்த அந்த சென்னை ரசிகர், உற்சாக மிகுதியில் கத்தி கூச்சலிட்டார். சாமிக்கு அருள் வந்தது போல் ஆத்தா...ஆத்தா...ஆத்தா என கத்தினார். அவரை சமாதானம் செய்யவே ஒருவர் ஓடிவந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • சென்னை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
    • போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    அகமதாபாத்:

    16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. முடிவில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    இந்த போட்டியில் 'டாஸ்' ஜெயித்த சென்னை கேப்டன் டோனி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது.

    அடுத்து விளையாடிய சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் நெருக்கடி அதிகரித்தது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார்.



    சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்ததோடு கோப்பையை உச்சிமுகர்ந்தது. போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இந்நிலையில் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் profile-யை மாற்றியுள்ளார். அதில் ஜடேஜாவை டோனி தூக்கியது போல உள்ள புகைப்படத்தை தனது profile-லில் வைத்துள்ளார். லீக் போட்டிகளில் ஜடேஜா அவுட் ஆக வேண்டும் என குரல் கொடுத்த ரசிகர்களை கையெடுத்து கும்பிட வைத்து விட்டார் ஜடேஜா என்றால் மிகையாகாது.

    • வெற்றிக்கான பவுண்டரியை ஜடேஜா அடித்த போது வெளியே கேப்டன் டோனி கண்ணை மூடி அமைதியாக இருந்தார்.
    • பின்னர் தான் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு ஜடேஜா மிகவும் முக்கிய காரணமாக திகழ்ந்தார். கடைசி 2 பந்தில் சிக்சர், பவுண்டரி அடித்து ஐ.பி.எல். கோப்பையை 5-வது முறையாக பெற்றுக் கொடுத்தார்.

    வெற்றிக்கான பவுண்டரியை ஜடேஜா அடித்த போது வெளியே கேப்டன் டோனி கண்ணை மூடி அமைதியாக இருந்தார். பின்னர் தான் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    ஜடேஜா அருகில் வந்த போது டோனி அவரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது பார்ப்பதற்கு மெய்சிலிர்க்க வைத்தது.

    கோப்பையை வாங்கும் தருணத்தில் ஜடேஜாவையும், அம்பதிராயுடுவையும் அழைத்து சென்று வாங்க வைத்து டோனி ரசித்தார். இந்த வீடியோ மற்றும் இரண்டு புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

    • ஐ.பி.எல். கோப்பையை சென்னை அணி வெல்வது இது 5-வது முறையாகும்.
    • சென்னை அணிக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    அகமதாபாத்:

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று முத்திரை பதித்தது. அகமதாபாத்தில் நள்ளிரவில் முடிந்த இறுதிப் போட்டியில் அந்த அணி கடைசி பந்தில் குஜராத் டைட்டன்சை தோற்கடித்தது.

    ஐ.பி.எல். கோப்பையை சென்னை அணி வெல்வது இது 5-வது முறையாகும். இதன் மூலம் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சமன் செய்தது. ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை அணிக்கு முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சிஎஸ்கே அணிக்கு வாழ்த்துக்கள். ! 1 ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினம். 5 கோப்பையை வெல்வது நம்பமுடியாதது. என தெரிவித்துள்ளார்.

    மேலும் மும்பை இந்தியன்ஸ் டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தது. அதில் சென்னை அணி கோப்பையை வென்றது முற்றிலும் தகுதியானது என அந்த அணி கூறியுள்ளது.

    • மும்பை இந்தியன்ஸ் அணி தான் அதிகபட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை (2013, 2015, 2017, 2019, 2020) வென்று இருந்தது.
    • 10-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.

    அகமதாபாத்:

    பரபரப்பான ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது.

    தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 47 பந்தில் 96 ரன்னும் (8 பவுண்டரி, 6 சிக்சர் ), விர்த்திமான் சஹா 39 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), சுப்மன் கில் 20 பந்தில் 39 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர். பதிரனா 2 விக்கெட்டும், ஜடேஜா , தீபக்சாஹர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    215 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது.

    முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் பவுண்டரி அடித்தார். அதோடு மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

    மழையால் ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி ஈரமாக இருந்தது. இதனால் போட்டியை தொடர்வதில் தாமதம் ஏற்பட்டது. 2 முறை ஆடுகளத்தை பார்வையிட்ட பிறகு போட்டி நள்ளிரவு 12.10 மணிக்கு தொடங்கும் என்று நடுவர்கள் 11.30 மணிக்கு அறிவித்தனர்.

    நள்ளிரவு 12.10 மணியளவில் சென்னை அணி பேட்டிங்கை தொடர்ந்தது. சி.எஸ்.கே.வுக்கு 15 ஓவர்களில் 171 ரன் என்ற இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.

    ஆட்டத்தின் கடைசி பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

    கான்வே 25 பந்தில் 47 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிவம் துபே 21 பந்தில் 32 ரன்னும் (2 சிக்சர்), ரகானே 13 பந்தில் 27 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), ருதுராஜ் கெய்க்வாட் 16 பந்தில் 26 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), அம்பதி ராயுடு 8 பந்தில் 19 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) ஜடேஜா 6 பந்தில் 15 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். மோகித்சர்மா 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் கைப்பற்றி னர்.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் (15-வது ஓவர்) சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட் இருந்தது.

    மோகித் சர்மா வீசிய ஓவரின் முதல் பந்தில் ஷிவம்துபே ரன் எடுக்கவில்லை. 2-வது பந்தில் அவர் ஒரு ரன்னும் 3-வது பந்தில் ஜடேஜா 1 ரன்னும் எடுத்தனர். 4-வது பந்திலும் துபே 1 ரன்னே எடுத்தார். இதனால் கடைசி 2 பந்தில் 10 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

    இதனால் குஜராத் அணி தான் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 5-வது பந்தில் ஜடேஜா 'லாங் ஆன்' திசையில் சிக்சர் அடித்து அசத்தினார். கடைசி பந்தில் 4 ரன் தேவை என்ற உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. ஜடேஜா கடைசி பந்தில் அபாரமாக பவுண்டரி அடித்து சி.எஸ்.கே. அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.

    10-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்பு 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

    2 ஆண்டு தடை காரணமாக இதுவரை 14 சீசனில் மட்டுமே பங்கேற்று இருந்தது. இதில் 5 முறை சாம்பியன் என்பது அபாரமான ஒன்றாகும். மும்பை இந்தியன்ஸ் அணி தான் அதிகபட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை (2013, 2015, 2017, 2019, 2020) வென்று இருந்தது. அந்த சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் சமன் செய்தது.

    ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ரோஜர்பின்னி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் இதை வழங்கினார்கள்.

    2-வது இடத்தை பிடித்த குஜராத் அணிக்கு ரூ.13 கோடி கிடைத்தது. 3-வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ், 4-வது இடத்தை பிடித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு முறையாக ரூ.7 கோடி, ரூ.6.5 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.

    • 2023 ஐ.பி.எல். தொடரில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அனைத்து வீரர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    2023 ஐ.பி.எல். தொடரில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வீரர் மகேந்திர சிங் டோனி தலைமையில் மிகச் சிறப்பாக விளையாடி குறிப்பாக நேற்றைய போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 6-ரன்கள் மற்றும் 4-ரன்கள் அடித்து வெற்றி பெற காரணமாக இருந்த வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அனைத்து வீரர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின.
    • போட்டியின் போது மழை குறுக்கிட்டதால், போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு நள்ளிரவில் மீண்டும் தொடங்கப்பட்டது.

    டாடா ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதி போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. இந்த போட்டி மூலம் புதிய உலக சாதனை படைத்து இருப்பதாக ஜியோசினிமா தெரிவித்து உள்ளது.

    ஜியோசினிமா செயலியில் டாடா ஐபிஎல் 2023 இறுதி போட்டியை சுமார் 3.2 கோடி பேர் பார்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருக்கிறது. எனினும், இடையில் மழை குறுக்கிட்டதால், போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு நள்ளிரவில் மீண்டும் தொடங்கப்பட்டது.

    நள்ளிரவு 1 மணி அளவிலும் ஐபிஎல் 2023 இறுதி போட்டியை சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர். இதன் மூலம் ஜியோசினிமா, நேரலை பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற 2019 ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியினை அதிகம் பேர் பார்த்தனர்.

    கடந்த மே 23-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற குவாலிஃபயர் போட்டியினை 2.5 கோடி பேர் பார்வையிட்டது அதிகமாக இருந்தது. தற்போது நேற்றைய போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டு இருக்கிறது. 

    • எனது சொந்த ஊரில் சொந்த மக்கள் முன்னிலையில் சென்னை அணிக்காக ஐந்தாவது முறை கோப்பையை வெல்வது மகிழ்ச்சியாக உள்ளது.
    • உண்மையில் இங்கு எங்களுக்கான ஆதரவு ஆச்சர்யத்தை கொடுத்தது.

    அகமதாபாத்:

    ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடந்தன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    கடைசி பந்தில் சி.எஸ்.கே. அணியை வெற்றி பெற வைத்தது குறித்து ஜடேஜா கூறியதாவது:-

    எனது சொந்த ஊரில் சொந்த மக்கள் முன்னிலையில் சி.எஸ்.கே. அணிக்காக 5-வது ஐ.பி.எல். கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அற்புதமான உணர்வு. எனது சொந்த ஊரில் பலர் சி.எஸ்.கே.வுக்கு ஆதரவாக வந்துள்ளனர். உண்மையில் இங்கு எங்களுக்கான ஆதரவு ஆச்சரியத்தை கொடுத்தது.

    இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான டோனிக்கு அர்ப்பணிக்கிறேன்.

    கடைசி நேரத்தில் எதுவாக இருந்தாலும் நான் அதிரடியாக ஆட வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தேன். மோகித்சர்மா மெதுவான பந்துகளை அதிகம் வீசக் கூடியவர். மெதுவான யார்க்கர் பந்து வீசக்கூடியவர் என்பதால் நேராக அடிக்க நினைத்தேன். அப்படியே செய்தேன்.

    இந்த வெற்றி தருணத்தில் சி.எஸ்.கே.வின் ஒவ்வொரு ரசிகருக்கும் வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எப்படி உற்சாகப்படுத்துகிறீர்களோ அதை தொடருங்கள்.

    இவ்வாறு ஜடேஜா கூறினார்.

    • ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே 5-வது முறையாக வென்று சாதனை படைத்தது.
    • சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 5-வது முறையாக வென்று சாதனை படைத்தது.

    இந்த போட்டி முடிந்த பிறகு டோனியிடம் வீரர்கள் ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது சிஎஸ்கே வீரரான தீபக் சாஹர் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு வந்தார். உடனே டோனி உனக்கு ஆட்டோகிராப் போட முடியாது என்று விலகினார். அப்போது அருகில் இருந்தவரிடம் கேட்ச் பிடிக்க தெரியல இவனுக்கு எப்படி ஆட்டோகிராப் போட முடியும் என fun-ஆக டோனி பேசினார்.

    முடிவில் தீபக் சாஹர் அணிந்திருந்த சிஎஸ்கே ஜெர்சியில் டோனி ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நேற்றைய போட்டியில் சுப்மன் கில் கேட்சை தீபக் சாஹர் மிஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×