search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohit sharma"

    • 2018-ல் ஆர்சிபிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய பாசில் தம்பி 70 ரன்கள் விட்டுக்கொடுத்ததுதான் இதுவரை அதிகபட்ச ரன்னாக இருந்தது.
    • 2023-ல் கேகேஆர் அணிக்கெதிராக யாஷ் தயாள் 69 ரன்கள் விட்டுக்கொடுத்து 3-வது இடத்தில் உள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.

    முதல் ஏழு ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்களும், 12-வது ஓவரை வரை 105 ரன்களும், 15 ஓவரில் 127 ரன்களும் எடுத்திருந்தது. கடைசி ஐந்து ஓவரில் மட்டும் 97 ரன்கள் குவித்தது.

    கடைசி ஓவரை மோகித் சர்மா வீசினார். இந்த ஓவரில் ரிஷப் பண்ட் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். ஒரு வைடு உடன் 31 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மேலும் மொத்தமாக 4 ஓவரில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் மோகித் சர்மா.

    2018-ல் ஆர்சிபிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய பாசில் தம்பி 70 ரன்கள் விட்டுக்கொடுத்ததுதான் இதுவரை அதிகபட்ச ரன்னாக இருந்தது.

    2023-ல் கேகேஆர் அணிக்கெதிராக யாஷ் தயாள் 69 ரன்கள் விட்டுக்கொடுத்து 3-வது இடத்தில் உள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக ஆர்சிபியின் ரீஸ் டாப்லே 68 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

    • வெயின் பிராவோ 33 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
    • அஸ்வின் 26 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சாஹல் 25 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 169 ரன்கள் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் அணியால் 162 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 12-வது முறையாக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

    இந்த போட்டியின் கடைசி கட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா சிறப்பாக பந்து வீசினார். அவர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 33 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இதற்கு முன்னதாக வெயின் பிராவோ 33 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தற்போது மோகித் சர்மா பிராவோ உடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை பகிர்ந்தள்ளார்.

    அஸ்வின் 26 விக்கெட்டுகளும், சாஹல், சாவ்லா, அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 25 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

    • நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் என் மனம் மிகவும் தெளிவாக இருந்தேன்.
    • வலை பயிற்சியின் போதும், இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன்.

    ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறையாக கோப்பை வென்று சாதித்தது.

    இந்த வெற்றியை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடினர். இது குறித்து வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் நேற்று வரை வைரலானது.

    இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த போட்டியில் கடைசி ஓவரை வீசிய மோகித் சர்மா மிகுந்த வேதனையடைந்ததாக கூறினார்.

    இது குறித்து மோகித் சர்மா கூறியதாவது:-

    நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் என் மனம் மிகவும் தெளிவாக இருந்தேன். வலை பயிற்சியின் போதும், இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன். எனவே நான் அனைத்து பந்துகளையும் யார்க்கர்களாக வீச வேண்டும் நினைத்தேன். எனது உள்ளுணர்வின்படியே நான் நடந்தேன்.

    என்னுடைய செயல் திட்டம் என்னவாக இருக்கும் என்பதை பாண்ட்யா அறிந்து கொள்ள விரும்பினார். மீண்டும் யார்க்கர் வீச முயற்சிப்பேன் என்று கூறினேன். மக்கள் இப்படியும் சொல்லுவாங்க அப்படியும் சொல்லுவாங்க. ஆனால் அதில் எந்த அர்த்தமுமில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

    கடைசி ஓவரில் நான் மீண்டும் யார்க்கர் வீச முயற்சித்தேன். நான் மிகவும் கவனமாக செயல்பட விரும்பினேன். ஐபிஎல் தொடர் முழுக்க நான் இதைத்தான் செய்தேன். ஆனால் பந்து சென்று விழக் கூடாத இடத்தில் விழுந்தது. என்னால் முடிந்தவரை நான் சிறப்பாகவே செயல்பட்டேன்.

    என்னால் தூங்க முடியவில்லை. நான் பந்தை இப்படியோ அல்லது அப்படியோ வீசியிருந்தால் என்னவாகியிருக்கும்? போட்டியில் வென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அது ஒரு இனிமையான உணர்வாக இல்லை. எங்கோ ஏதோவொன்று இல்லாததைப் போல உணர்கிறேன். எனினும் இதனை கடந்து போக முயற்சிக்கிறேன்.

    இவ்வாறு மோகித் சர்மா கூறியுள்ளார்.

    • இறுதியில் கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.
    • தொடர்ந்து 4 பந்துகள் மோகித் சர்மா யார்க்கராக வீசினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி 3 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

    பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடின இலக்கை துரத்தியது. முதல் ஓவரிலயே மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி சென்னையின் வெற்றிக்கு 171 ரன்கள் தேவைப்பட்டது.

    இறுதியில் கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மோகித் சர்மா வீசினார். தொடர்ந்து 4 பந்துகள் யார்க்கராக வீசினார். 5-வது பந்தில் அவருக்கு கூல்டிரிங்ஸ் மற்றும் அறிவுரை கூறுகிறேன் என்ற பெயரில் ஏதோ அட்வைஸ் கொடுத்திருக்கிறார் பவுலிங் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா. அந்தப் பந்தில் ஜடேஜா சிக்சர் விளாசிவிட்டார்.

    இறுதியாக கடைசி பந்தை லெக் சைடில் கொஞ்சம் வைடாக வீசிவிட்டார். இதனை எளிதாக தட்டி விடவே பந்து பவுண்டரிக்கு சென்றது. இதன் காரணமாக சிஎஸ்கே வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில், அறிவுரை வழங்குகிறேன் என்ற பெயரில் நன்றாக பந்து வீசிய மோகித் சர்மாவை குழப்பத்தில் ஆழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி தோற்பதற்கு ஆசிஷ் நெஹ்ராவே காரணமாக அமைந்துவிட்டார் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    ×