search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐபிஎல் வரலாற்றில் ரன்கள் வாரி வழங்கியதில் முதல் இடம் பிடித்தார் மோகித் சர்மா
    X

    ஐபிஎல் வரலாற்றில் ரன்கள் வாரி வழங்கியதில் முதல் இடம் பிடித்தார் மோகித் சர்மா

    • 2018-ல் ஆர்சிபிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய பாசில் தம்பி 70 ரன்கள் விட்டுக்கொடுத்ததுதான் இதுவரை அதிகபட்ச ரன்னாக இருந்தது.
    • 2023-ல் கேகேஆர் அணிக்கெதிராக யாஷ் தயாள் 69 ரன்கள் விட்டுக்கொடுத்து 3-வது இடத்தில் உள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.

    முதல் ஏழு ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்களும், 12-வது ஓவரை வரை 105 ரன்களும், 15 ஓவரில் 127 ரன்களும் எடுத்திருந்தது. கடைசி ஐந்து ஓவரில் மட்டும் 97 ரன்கள் குவித்தது.

    கடைசி ஓவரை மோகித் சர்மா வீசினார். இந்த ஓவரில் ரிஷப் பண்ட் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். ஒரு வைடு உடன் 31 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மேலும் மொத்தமாக 4 ஓவரில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் மோகித் சர்மா.

    2018-ல் ஆர்சிபிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய பாசில் தம்பி 70 ரன்கள் விட்டுக்கொடுத்ததுதான் இதுவரை அதிகபட்ச ரன்னாக இருந்தது.

    2023-ல் கேகேஆர் அணிக்கெதிராக யாஷ் தயாள் 69 ரன்கள் விட்டுக்கொடுத்து 3-வது இடத்தில் உள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக ஆர்சிபியின் ரீஸ் டாப்லே 68 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

    Next Story
    ×