search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL Final"

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.
    • வெற்றி பெற்றதையடுத்து சிஎஸ்கே வீரர்கள் அவர்களது மனைவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    பரபரப்பான ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது. 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. 

    இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்றதையடுத்து சிஎஸ்கே வீரர்கள் அவர்களது மனைவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






     



    • மும்பை இந்தியன்ஸ் அணி தான் அதிகபட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை (2013, 2015, 2017, 2019, 2020) வென்று இருந்தது.
    • 10-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.

    அகமதாபாத்:

    பரபரப்பான ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது.

    தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 47 பந்தில் 96 ரன்னும் (8 பவுண்டரி, 6 சிக்சர் ), விர்த்திமான் சஹா 39 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), சுப்மன் கில் 20 பந்தில் 39 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர். பதிரனா 2 விக்கெட்டும், ஜடேஜா , தீபக்சாஹர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    215 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது.

    முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் பவுண்டரி அடித்தார். அதோடு மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

    மழையால் ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி ஈரமாக இருந்தது. இதனால் போட்டியை தொடர்வதில் தாமதம் ஏற்பட்டது. 2 முறை ஆடுகளத்தை பார்வையிட்ட பிறகு போட்டி நள்ளிரவு 12.10 மணிக்கு தொடங்கும் என்று நடுவர்கள் 11.30 மணிக்கு அறிவித்தனர்.

    நள்ளிரவு 12.10 மணியளவில் சென்னை அணி பேட்டிங்கை தொடர்ந்தது. சி.எஸ்.கே.வுக்கு 15 ஓவர்களில் 171 ரன் என்ற இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.

    ஆட்டத்தின் கடைசி பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

    கான்வே 25 பந்தில் 47 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிவம் துபே 21 பந்தில் 32 ரன்னும் (2 சிக்சர்), ரகானே 13 பந்தில் 27 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), ருதுராஜ் கெய்க்வாட் 16 பந்தில் 26 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), அம்பதி ராயுடு 8 பந்தில் 19 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) ஜடேஜா 6 பந்தில் 15 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். மோகித்சர்மா 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் கைப்பற்றி னர்.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் (15-வது ஓவர்) சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட் இருந்தது.

    மோகித் சர்மா வீசிய ஓவரின் முதல் பந்தில் ஷிவம்துபே ரன் எடுக்கவில்லை. 2-வது பந்தில் அவர் ஒரு ரன்னும் 3-வது பந்தில் ஜடேஜா 1 ரன்னும் எடுத்தனர். 4-வது பந்திலும் துபே 1 ரன்னே எடுத்தார். இதனால் கடைசி 2 பந்தில் 10 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

    இதனால் குஜராத் அணி தான் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 5-வது பந்தில் ஜடேஜா 'லாங் ஆன்' திசையில் சிக்சர் அடித்து அசத்தினார். கடைசி பந்தில் 4 ரன் தேவை என்ற உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. ஜடேஜா கடைசி பந்தில் அபாரமாக பவுண்டரி அடித்து சி.எஸ்.கே. அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.

    10-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்பு 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

    2 ஆண்டு தடை காரணமாக இதுவரை 14 சீசனில் மட்டுமே பங்கேற்று இருந்தது. இதில் 5 முறை சாம்பியன் என்பது அபாரமான ஒன்றாகும். மும்பை இந்தியன்ஸ் அணி தான் அதிகபட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை (2013, 2015, 2017, 2019, 2020) வென்று இருந்தது. அந்த சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் சமன் செய்தது.

    ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ரோஜர்பின்னி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் இதை வழங்கினார்கள்.

    2-வது இடத்தை பிடித்த குஜராத் அணிக்கு ரூ.13 கோடி கிடைத்தது. 3-வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ், 4-வது இடத்தை பிடித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு முறையாக ரூ.7 கோடி, ரூ.6.5 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.

    • எனது சொந்த ஊரில் சொந்த மக்கள் முன்னிலையில் சென்னை அணிக்காக ஐந்தாவது முறை கோப்பையை வெல்வது மகிழ்ச்சியாக உள்ளது.
    • உண்மையில் இங்கு எங்களுக்கான ஆதரவு ஆச்சர்யத்தை கொடுத்தது.

    அகமதாபாத்:

    ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடந்தன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    கடைசி பந்தில் சி.எஸ்.கே. அணியை வெற்றி பெற வைத்தது குறித்து ஜடேஜா கூறியதாவது:-

    எனது சொந்த ஊரில் சொந்த மக்கள் முன்னிலையில் சி.எஸ்.கே. அணிக்காக 5-வது ஐ.பி.எல். கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அற்புதமான உணர்வு. எனது சொந்த ஊரில் பலர் சி.எஸ்.கே.வுக்கு ஆதரவாக வந்துள்ளனர். உண்மையில் இங்கு எங்களுக்கான ஆதரவு ஆச்சரியத்தை கொடுத்தது.

    இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான டோனிக்கு அர்ப்பணிக்கிறேன்.

    கடைசி நேரத்தில் எதுவாக இருந்தாலும் நான் அதிரடியாக ஆட வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தேன். மோகித்சர்மா மெதுவான பந்துகளை அதிகம் வீசக் கூடியவர். மெதுவான யார்க்கர் பந்து வீசக்கூடியவர் என்பதால் நேராக அடிக்க நினைத்தேன். அப்படியே செய்தேன்.

    இந்த வெற்றி தருணத்தில் சி.எஸ்.கே.வின் ஒவ்வொரு ரசிகருக்கும் வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எப்படி உற்சாகப்படுத்துகிறீர்களோ அதை தொடருங்கள்.

    இவ்வாறு ஜடேஜா கூறினார்.

    • பாண்டியா ஐந்து ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    • 4 போட்டி மும்பை அணிக்காகவும் 1 குஜராத் அணிக்காகவும் கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும் இன்று மோதுகிறது.

    இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றால் ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்ற 6 முறையும் அந்த அணி கோப்பையை கைப்பற்றிய சாதனையை எட்டும்.

    பாண்டியா இதுவரை ஐந்து ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடிய நிலையில் 5 போட்டியிலும் அவர் இடம் பெற்ற அணிகள் வெற்றி வாகை சூடியுள்ளன. 2015, 2017, 2019, 2020-ல் மும்பை அணியில் இருந்தார். பின்னர் 2022-ல் குஜராத் அணியை வழிநடத்தினார்.

    மறுபுறம், டோனி இதுவரை 10 இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 9 சிஎஸ்கே அணிக்காவும் 1 புனே அணிக்காகவும் விளையாடியுள்ளார். அதில் அவர் 4 வெற்றிகளை 2010, 2011, 2018 மற்றும் 2021-ல் சிஎஸ்கே உடன் பெற்றுள்ளார். எனவே இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களில் பாண்ட்யாவை விட டோனி பின் தங்கிய நிலையில் உள்ளார்.

    இன்றைய ஆட்டத்தில் குஜராத் வெற்றி பெற்றால், ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் 3-வது அணியாக இருக்கும். சிஎஸ்கே அணி 2011-ல் மற்றும் மும்பை 2020-ல் தொடர்ந்து கோப்பை கைப்பற்றியது. மேலும், சிஎஸ்கே வெற்றி பெற்றால், மும்பை அணியின் சாதனையை சமன் செய்யும். மும்பை 5 முறையும் சென்னை 4 முறையும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளன.

    • போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாகவும், அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
    • மேலும் சிலர் போலீசாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அகமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று நடைபெற இருந்தது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இன்று மீண்டும் ஆட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் மழை பெய்து கொண்டிருந்த போது ரசிகர்கள் மைதானத்தில் நீண்ட நேரமாக காத்திருந்தனர். அப்போது பெண் ரசிகை ஒருவர் தனக்கு அருகில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவரை தாக்கினார்.

    அவர் கீழே விழுந்து மீண்டும் எழுந்தபோதும் அந்த பெண் மறுபடியும் தாக்கினார். ஆனால் அந்த அதிகாரி எதிர்த்து ஏதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார். இந்த சண்டை ஏன் நடந்தது என்பது குறித்த சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.


    போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாகவும், அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் சிலர் கூறுகின்றனர். போலீசாரிடம் உடலை சுத்தப்படுத்தியதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் போலீசாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியனான நாள் தான் இன்று.
    • தற்போது ஐபிஎல் 16-வது சீசனில் இறுதிப் போட்டிக்கு வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை அணியை இன்று எதிர்கொள்கிறது.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன. கடந்த 2022-ம் ஆண்டு 15-வது ஐபிஎல் சீசனில் முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி இடம் பெற்று விளையாடியது.

    இதில், இறுதிப் போட்டிக்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. கடந்த 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதி நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 22 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

    இதேபோன்று தற்போது ஐபிஎல் 16-வது சீசனில் இறுதிப் போட்டிக்கு வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை அணியை இன்று எதிர்கொள்கிறது.

    நேற்று அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்க இருந்தது. ஆனால் கனமழை காரணமாக போட்டி இன்று மாற்றப்பட்டது.

    எல்லாமே குஜராத் அணிக்கு சாதகமாகவே உள்ளதாக சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று நடக்க வேண்டிய போட்டி இன்று நடைபெறுகிறது, இன்றும் மழை வந்தால் குஜராத் அணிக்கே கோப்பை என இருக்கும் சூழலில் சென்னை தோல்வியடைந்து விடுமோ என சிஎஸ்கே ரசிகர்கள் கலத்தில் உள்ளனர்.

    இன்று இரவு நடக்கும் போட்டியிலும் மழை பெய்யக் கூடும் என்று கூறப்படுகிறது. அப்படி மழை பெய்தால், குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அப்படி அறிவிக்கப்பட்டால், 2-வது முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியனாகும்.

    ×