search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெற்பயிர்கள்"

    • விவசாயிகள் தெற்கு பத்தில் சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் பயிரிட்டுஉள்ளனர்.
    • மறுகால் நிரம்ப பொதுப் பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட விவசாயிகளால் கும்பப்பூ நெல் சாகுபடி தற்போது பயிரிடப்பட்டு வரு

    கிறது. அதேபோல் அகஸ்தீ ஸ்வரம் தென்தாமரை குளம்ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட இலந்தையடிவிளை, முகிலன்குடியிருப்பு, கிண்ணிக்கண்ணண்விளை, கோவில்விளை ஆகிய பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகள் தெற்கு பத்தில் சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் பயிரிட்டுஉள்ளனர்.

    இதற்காக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு நடவு உள்ளிட்ட முதல்கட்ட பணிகளை செய்து முடி த்துள்ளனர். தற்போது நெற்பயிர் சிறிதளவு வளர்ந்து வரும் நிலையில் தெற்கு பத்துக்கு தண்ணீர் வரும் தலக்குளத்தின் மறுகால் நிரம்பாததால் வயல்களுக்கு தண்ணீர் செல்லவில்லை.

    தண்ணீர் இல்லாததால்வ யல்களில் வெடிப்பு ஏற்பட்டு நெல் பயிர்கள் அனைத்தும் கருகி வருகிறது. முப்போகம் விளையும் இம்மண்ணில் தற்போது இருபோகம் விளைவதே கேள்விகுறியாகி வருகிறது.

    நஷ்டம் ஒரு பக்கம் ஏற்பட்டு வந்தாலும்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் ஆழ்ந்த சோகத்தில் மனமு டைந்து கண்ணீரும் கம்பலையுமான நிலை யில்இருந்து வருகின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள தலக்குளத்தின் மறுகால் நிரம்ப பொதுப் பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தது.
    • விவசாயிகள் ஆக்கிரமித்து ள்ளதாகவும் இதனால் மழை நீர் வெளியேறாமல் விவசாய நிலங்களில் தேங்கி நிற்பதால் நெற்பயிர்கள் சேதமடைந்தன

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் சுமார் 200-ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் தலைமையில் ஒன்றிய குழு சேர்மன் தாமோதரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, நெடுஞ்செழியன் ஆகியோர் சேதமடைந்த நெற்பயிர்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பயிர் செய்யப்பட்டுள்ள பரப்பளவு, நெல் ரகம் மற்றும் சேத விபரம் குறித்து புவனேஸ்வரி பெருமாள் கேட்டறிந்தார். அப்போது ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வடிகால் வாய்க்காலை ஒரு சில விவசாயிகள் ஆக்கிரமித்து ள்ளதாகவும் இதனால் மழை நீர் வெளியேறாமல் விவசாய நிலங்களில் தேங்கி நிற்பதால் நெற்பயிர்கள் சேதமடைந்தன எனவும் விவசாயிகள் கூறினர்.

    சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் விவசாயி களிடம் கூறினார். அப்போது மாவட்ட பிரதிநிதி மடம் பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலரும் உடன் இருந்தனர்.

    • கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நெற்பயிருக்கு பாடைகட்டி மாலை போட்டு மேளதாளத்துடன் எடுத்து வந்தனர்.

    கும்பகோணம்:

    தண்ணீரின்றி கருகும் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாலன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கும்பகோணம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து காய்ந்த நெற்பயிருக்கு பாடைகட்டி மாலை போட்டு மேள தாளத்துடன் தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர்.

    தலைமை தபால் நிலையத்திற்குள் செல்ல முயன்ற போராட்டக் காரர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தி நிறுத்தினர். உடனே அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • கன்னி பூ சாகுபடி பணியில் விவசாயிகள்
    • 3000 ஹெக்டேரில் நெற்பயிர்கள்

    நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். 6500 ஹெக்டேரில் இந்த ஆண்டு சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஆனால் 5000 ஹெக்டேரில் மட்டுமே தற்போது சாகுபடி செய்யப் பட்டுள்ளது. சாகுபடி பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. கன்னி பூ சாகுபடிக்காக கடந்த ஜூன் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது.பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் கடைமடை பகுதி மக்களுக்கு தண்ணீர் செல்ல வில்லை.இதனால் விவசாயிகள் பயிர் செய்த நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து சானல்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். கலெக்டரை சந்தித்தும் மனு அளித்தனர். இதன் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் சானல்கள் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இந்தநிலையில் தற்போது கன்னிப்பூ சாகுபடி செய் யப்பட்ட 3000 ஹெக்டேரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. பறக்கை பகுதிகளில் நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் செண்பகராமன் புதூர், அஞ்சுகிராமம் பகுதிகளில் பயிர் செய்த நெற்பயிர்கள் தண்ணீர் கிடைக்காமல் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.செண்பகராமன் புதூர் பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வயல்கள் வெடித்து காணப்படுகின்றன. இதனால் நெற்ப யிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நெற்பயிர்கள் கருகும் நிலைக்கு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதேபோல் அஞ்சுகிராமம் பகுதியில் பயிர் செய்த நெற்பயிர்களுக்கு தண்ணீர் விலைக்கு வாங்கி பாய்க்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு பொதுப் பணித்துறை அதிகாரிகள் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ள பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதி களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதேபோல் சிற்றார் பட்டணம் கால்வாய் கடை மடை பகுதியிலும் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள் பாதிக்கக்கூ டிய நிலையில் உள்ளது. எனவே அந்த கால்வாயிலும் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாய பிரதிநிதிகள் கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

    • தஞ்சை அருகே உள்ள மணல்மேடு பகுதியில் மட்டும் 50 ஏக்கரில் குறுவை பயிர் சாகுபடி செய்யப்பட்டது.
    • தண்ணீர் இல்லாததால் வயல்களில் பாலம் பாலமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி திறக்கப்பட்டது. அதன் பின்னர் 16-ம் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இம்முறை டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டத்திலும் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வந்தன.

    ஆனால் மாவட்டத்தில் சில பகுதிகளில் வாய்க்கால்களில் போதிய தண்ணீர் வராததால் குறுவை பயிர்கள் காய்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தஞ்சை அருகே உள்ள மணல்மேடு பகுதியில் மட்டும் 50 ஏக்கரில் குறுவை பயிர் சாகுபடி செய்யப்பட்டது.

    இந்த பகுதிக்கு தென் பெரம்பூரில் இருந்து ஜம்பு காவேரியில் தண்ணீர் வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக ஜம்பு காவேரியில் இருந்து தண்ணீர் வரவில்லை.

    இதனால் நடவு நட்டு 20 நாட்களான குறுவை பயிர்கள் காய்ந்து வருகின்றன.

    தண்ணீர் இல்லாததால் வயல்களில் பாலம் பாலமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

    தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருவதை பார்த்து வேதனை அடைந்த அப்பகுதி விவசாயி முனியாண்டி என்பவர் காய்ந்த பயிர்கள் மத்தியில் சோகத்துடன் படுத்து கிடக்கும் காட்சி மற்ற விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது.

    இது குறித்து விவசாயி முனியாண்டி கூறும் போது, நான் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவு செய்து நடவு செய்தேன். கடந்த 20 நாட்களாக ஜம்பு காவேரியில் தண்ணீர் வரவில்லை.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் பராமரிப்பு பணி நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள் .

    கஷ்டப்பட்டு கடன் வாங்கி சாகுபடி செய்த நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதை பார்க்க வேதனையாக உள்ளது.

    வயல்களிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் வயல்களில் படுத்து உள்ளேன்.

    உடனடியாக தண்ணீர் திறந்து விட்டு எஞ்சிய பயிர்களையாவது காப்பாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • சுமார் 10,000 ஏக்கர் பரப்பில் தண்ணீர் இன்றி இளம் நெற்பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
    • ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து தற்போது போதிய தண்ணீரின்றி காய்ந்து வரும் குறுவை பயிர்களை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் தான் பிரதான பயிராக உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.

    இந்த ஆண்டு குறுவை சாகுபடி 5 லட்சம் ஏக்கரில் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியான ஜுன் 12-ந் தேதி திறந்து விடப்பட்டது.

    இருந்தாலும் கடைமடை பகுதி வரை தண்ணீர் சரியாக சென்று சேரவில்லை என விவசாயிகள் கூறி வருகின்றனர். இதனால் கடைமடை பகுதியில் நெல் சாகுபடி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதிகள், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் போதிய தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கல்லணையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைமடை பகுதியான தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் போதிய தண்ணீரின்றி நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. குறிப்பாக திருவையாறு அருகே உள்ள மேலதிருப்பூந்துருத்தி, கண்டியூர், நடுக்காவேரி மற்றும் சுற்றியுள்ள இடங்களில் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைநிலங்களில் வெடிப்பு ஏற்பட்டு நடவு செய்து 30 நாட்களே ஆன நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனைப்பட்டனர்.

    ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து தற்போது போதிய தண்ணீரின்றி காய்ந்து வரும் குறுவை பயிர்களை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது :-

    பாசன வாய்க்காலில் போதிய தண்ணீரும் வரவில்லை. தலைமடை பகுதிக்கு தண்ணீர் இல்லை என்றால் இதை விட வேதனை வேறு என்னவாயிருக்கும். தண்ணீரின்றி கருகி வரும் பயிர்களை பார்க்க வேதனையாக உள்ளது. தற்போது ஆடி மாத காற்றும் பலமாக வீசி வருவதால் வயலில் உள்ள ஈரப்பதமும் காய்ந்து வருகிறது. இதனால் வயல்களில் ஆங்காங்கே பாலம் பாலமாக வெடிப்பு விட்டு வருகின்றன.

    எனவே கர்நாடக அரசு காவிரியில் உரிய தண்ணீர் திறக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லணையில் இருந்து முறை வைக்காமல் தண்ணீர் திறந்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்தும் இனிமேல் பயிர்களை காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. எனவே எங்கள் பகுதியில் உரிய கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 92,214 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறுவை நெல்பயிர் நேரடி விதைப்பின் கீழ் சுமார் 28,569 ஏக்கரிலும், நெல் தீவிரப்டுத்தல் முறையின் கீழ் 46,720 ஏக்கரில் பயிடப்பட்டுள்ளது. சாதாரண நாற்று நடவு முறையில் குறுவை பயிர் சுமார் 14,680 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் வருவதால் அதிலிருந்து பிரியக்கூடிய பாசன வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நேரடி விதைப்பு செய்த நெற் பயிர்கள் முற்றிலுமாக கருகி வருகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவாரூர் அருகே உள்ள பழையவலம், செங்கமேடு, ஓடாச்சேரி, கேக்கரை, கள்ளிக்குடி, தென் ஓடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 3000 ஏக்கர் நேரடி விதைப்பு செய்த நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. மாவட்டத்தில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பில் தண்ணீர் இன்றி இளம் நெற்பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    குறிப்பாக வெட்டாறு பாசனத்தில் இருந்து பிரியக்கூடிய பாசன வாய்க்காலில் இதுவரை ஒரு முறை மட்டுமே தண்ணீர் வந்ததாகவும் அந்த தண்ணீரும் விவசாய நிலங்களுக்கு பாய்ச்ச முடியாத நிலையில் குறைந்த அளவு தண்ணீராக வந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் வசதியான விவசாயிகள் மட்டும் என்ஜின் வைத்து தண்ணீரை தங்களது நெற் பயிர்களுக்கு பயன்படுத்தி கொண்டனர். மற்ற விவசாயிகளின் நெற் பயிர்கள் கருகும் நிலை உருவாகி வருகிறது. ஒரு ஏக்கருக்கு ரூபாய் 10000 வரை செலவு செய்துள்ளோம். இந்நிலையில் தற்போது பயிர்கள் கருகி வருகிறது. மூன்றாவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையில் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக முதல்வர் விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் வருகிற 27-ந்தேதி தஞ்சாவூருக்கு வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பார்வையிட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அணை திறக்கப்பட்டு ஒரு மாதமாகியும் தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை
    • குமரி மாவட்டத்தில் கன்னி பூ, கும்ப பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கன்னி பூ, கும்ப பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். தற்பொழுது மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி பணியில் விவ சாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சுசீந்திரம், அருமநல்லூர், தேரூர், பூதப்பாண்டி, புத்தேரி, சுங்கான்கடை, பொற்றையடி, அஞ்சுகி ராமம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடிகள் செய்ய ப்பட்டுள்ளது. நடவுப்பணி மற்றும் நேரடி விதைப்பின் மூலமாக சுமார் 4000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 1500 ஹெக்டேரில் சாகுபடி செய்ய விவசாயிகள் தயார் ஆகிவருகிறார்கள். கன்னி பூ சாகுபடிக்காக ஜூன் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. அணை திறக்கப்பட்டு 30 நாட்கள் ஆகியும் கடைமடை பகுதியில் வரை தண்ணீர் செல்லவில்லை. சானல்கள் சரி வர தூர்வாராததே இதற்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். இதை த்தொடர்ந்து சானல்களை தூர்வார ரூ.5 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வரு கிறது. கிளை கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தோவாளை சானல், அனந்தனார் சானல் உட்பட பிரதான கால்வாய்களை தூர்வருவது தொடர்பாக விவசாய பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது 2 நாட்கள் மட்டுமே தண்ணீரை அடைத்து தூர்வார வேண்டும் இல்லாவிட்டால் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் என்று கருத்து தெரிவித்தார். நாகர்கோவில் புத்தேரி அருகே புளியடி பகுதியில் அனந்தனார் சானலின் கிளை கால்வாயான பீசாத்தி கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அணை பாசனத்தை நம்பி அந்த பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர்.

    தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் தண்ணீர் வராததால் நெற்ப யிர்கள் காய்ந்து வருகிறது. வயல்கள் வடித்து நெற்ப யிர்கள் முற்றிலும் கருகி காணப்படுகிறது.

    இதேபோல் புத்தேரி அருகே லட்சுமி குளம், அட்டகுளம் பகுதியிலும் தண்ணீ ர் இல்லாத நிலை உள்ளது. பண்டார தோப்பு பகுதியில் பாதி அளவு சாகுபடி செய்து மீதமுள்ள இடங்களில் சாகுபடி செய்ய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டிவரும் நிலையில் அணைகளின் நீர்மட்டமும் சரிந்து காணப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 19.45 அடியாக சரிந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்ட மும் சரிந்து வருவதால் சாகு படி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பருவ மழை கை கொடுத்தால் மட்டுமே சாகுபடி செய்துள்ள அந்த பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்ப ட்டுள்ளனர். ஆனால் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து கண்ணாமூச்சி கட்டி வருகிறது. வருண பகவான் வழிவி ட்டால் மட்டுமே நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    • நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்து மழைநீரில் மூழ்கி அழுகி வருகிறது.
    • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை ஊராட்சி வருவாய்கிரா மத்திற்கு உட்பட்ட கள்ளிமேடு, மற்றும் ராராமுத்திர கோட்டை பகுதியில் சூறை காற்றுடன் கனமழை பெய்தது.

    இதனால் கோடையில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பல நூறு ஏக்கர் நெற்பயிர்கள் வயலிலிலேயே சாய்ந்து மழைநீரில் மூழ்கிய நிலையில் அழுகி சேதமடைந்து வருகிறது.

    இந்த நெற்பயிர்கள் இன்னும் சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் அழுகி சேதமடைந்து வருவது விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.

    மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயி ர்களை ராராமுத்திரகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சோழன், கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    அப்போது விவசாயிகள் மழையால் சூறை காற்றால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு அரசு உரிய நிவாரனம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    • கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்தனர்.
    • கடந்த 10 நாட்களாக தியாகதுருகம் பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் கரும்பு, நெல், பருத்தி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அதன்படி கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 3 மாதங்க ளுக்கு முன்பு சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்தனர். தொடர்ந்து பயிர்களுக்கு உரமிட்டும், கலை பறித்தும், கூத்தக்குடி ஏரி பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நெற்பயிர் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.   இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தியாகதுருகம் பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் நெல் அறுவடை செய்யாமலே நெல்மணிகள் விவசாய நிலங்களில் முளைக்கத் தொடங்கின. இதனால் விவசாயிகள் அறுவடை செய்யமுடியாமல் வேதனை அடைந்துள்ளனர்.     இதுகுறித்து அந்தப் பகுதி யைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயி கருப்பகவுண்டர் கூறியதாவது:-

    கூத்தக்குடியில் ஒரு சில விவசாயிகள் சொந்த நிலங்களிலும் பல விவசாயி கள் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் குத்தகைக்கு பயிர் செய்வது வழக்கம். அதன்படி நடவு செய்தது முதல் இதுவரை ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து பயிரை பராமரித்து வந்தோம். இந்நிலையில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அறுவடை செய்ய முடிவில்லை. மேலும் நெல் மணிகளும் முளைத்து விட்டது. இனி அறுவடை செய்தால் அறுவடை கூலிக்குகூட பணம் கிடைக்காது. மேலும் குத்தகைக்கு பயிர் செய்தவர்கள் நிலத்தின் உரிமையாளருக்கு குத்தகை வழங்கும் நிலை உள்ளது. எனவே தொடர் மழையால் நெல் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி யாக நிவாரணம் வழங்க மாவட்ட கலெக்டர் நட வடிக்கை எடுக்க வேண்டும்   இது குறித்து தியாகதுருகம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு கூறியதாவது:-  மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் அறிவுறுத் தலின்படி வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து நெற்பயிர் சேதமடைந்த விவசாயிகளின் விவரங்க ளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் தொடர் மழையால் நெற்பயிர் பாதிக்கப்பட்ட நிலத்தில் விவசாயிகள் நின்ற வாறு ஒரு புகைப்படம், சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு எண் நகல் ஆகியவற்றுடன் விவசாயிகள் நிவாரண மனுவை இணைத்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க வேண்டும் என விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.. பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பலரும் தங்களது நிலத்தில் பயிர் செய்துள்ள பயிர்களை அந்தந்த பருவங்களில் பயிர் காப்பீடு செய்து வருகின்ற னர். இந்நிலையில் அந்த பகுதியில் ஒவ்வொரு பயி ருக்கும் பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படை யில் பயிர்களுக்கு ஏற்ற வாறும், பாதிப்புகளுக்கு ஏற்ப இழப்பீடுகள் வழங்கப்படுகிறது. இதில் அந்த குறிப்பிட்ட பகுதியில் இயற்கை சீற்றத்தால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயி கள் மற்றும் பயிர் பாதிப்பு இல்லாத விவசாயிகளுக்கும் சில சமயங்களில் பயிர் சாகுபடி செய்யாத விவசாயி களுக்கும் இழப்பீடு கிடைக்கும் நிலை உள்ளது. எனவே வரும் காலங்களில் இயற்கை சீற்றத்தால் பயிர் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்கும் விதத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என விவசாயிகள் பலரும் கூறு கின்றனர்.

    • முத்தரசபுரத்தில் ஊரைச் சேர்ந்த விஜயகுமார் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.
    • அடக்கம் செய்வதற்கு சாலை இல்லாமல் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நெல் வயல்களின் வழியாக வளர்த்த நெற்பயிர்களின் நடுவில் தூக்கி சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள முத்தரசபுரத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமார் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.

    அவரை அடக்கம் செய்வதற்கு சாலை இல்லாமல் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சேறும், சகதியுமான நெல் வயல்களின் வழியாக விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த நெற்பயிர்களின் நடுவில் தூக்கி சென்றனர்.

    மேலும் பல ஆண்டுகளாக இந்த துயரத்தை சந்தித்து வருவதாக வேதனையுடன் கூறும் அப்பகுதி மக்கள் கிராமத்தில் யாராவது உயிரிழந்தால் ஒவ்வொரு முறையும் வயலில் தூக்கி சென்று பாடுபட்டு வளர்த்த நெற்பயிர்கள் நாசமாவதாக வேதனையோடு கூறியுள்ளனர்.

    மேலும், மழைகாலங்களில் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கி செல்லும் நிலை ஏற்படுவதாகவும், நிரந்தர சுடுகாடு கட்டிடம் கூட இல்லாமலும் கீற்று கொட்ட கைகள் அவ்வப்போது அமைத்து சடலங்களை எரி ஊட்டுவதாகவும், பல நேரங்களில் மழையினால் நனைந்து சடலங்கள் பாதியிலேயே எரிந்து நின்று விடுவவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    கிராம மக்கள் பல ஆண்டுகளாக புகார் மனு கொடுத்தும் நாகை மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள், விரைவில் சுடுகாட்டிற்கு சாலை அமைத்து தர வேண்டும் என்றும் தமிழக அரசு இதில் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அனைத்து இடங்களிலும் அமோகமாக நெல் விளைச்சல் ஏற்பட்டு உள்ளது.
    • கனமழை காரணத்–தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே வடகால், பின்னவாசல், ஓடாச்சேரி, கீழகூத்தங்குடி, வேப்பத்தாங்குடி ஆகிய பகுதிகளில் மழை நீரால் சூழ்ந்துள்ள விவசாய நெற்பயிர்களை திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் பூண்டி.கே.கலைவாணன் எம்எல்ஏ தெரிவித்ததாவது, இந்த ஆண்டு முன்பாகவே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தினால் காவிரி படுகை அனைத்து இடங்களிலும் அமோகமாக நெல் விளைச்சல் ஏற்பட்டு உள்ளது.

    எதிர்பாராத விதமாக கடும்மழை பெய்த காரணத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மிகுந்த சேதமடைந்துள்ளது. இருபது நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்களும் சேதமடைந்துள்ளது.

    சேதமடைந்த நெற்பயிர்களை மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை மூலம் கணக்கெடுக்கம் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் தமிழக முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்பிக்கப்படும்.

    இதற்கான நிவாரணம் பாதிக்கப்பட்ட விவசாயகளுக்கு வழங்கங்கிட தமிழக முதலவர் உரிய நடவடிக்கை எடுப்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இவ்வாய்வில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, வேளாண்மை த்துறை உதவி இயக்குநர் ஹேமா ஹெப்சிமா நிர்மலா, தாசில்தார் நக்கீரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன், திருவாரூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் துரை தியாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தனர்.

    • சீர்காழி பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டமாக வந்து சம்பா நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில சீர்காழி, தென்பாதி, சட்டநாதபுரம், விளந்திட சமுத்திரம், திட்டை, செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளன.

    இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டமாக வந்து சம்பா நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கோவி. நடராஜன் கூறுகையில், எனது வயலில் இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்தி வருகிறது.

    இதனால் இந்த ஆண்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நெற்பயிர்களை தாக்கும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×