கும்பகோணத்தில், கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்

கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெற்பயிருக்கு பாடைகட்டி மாலை போட்டு மேளதாளத்துடன் எடுத்து வந்தனர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர்.
Published on

கும்பகோணம்:

தண்ணீரின்றி கருகும் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாலன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கும்பகோணம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து காய்ந்த நெற்பயிருக்கு பாடைகட்டி மாலை போட்டு மேள தாளத்துடன் தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர்.

தலைமை தபால் நிலையத்திற்குள் செல்ல முயன்ற போராட்டக் காரர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தி நிறுத்தினர். உடனே அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com