search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில் புத்தேரி"

    • அணை திறக்கப்பட்டு ஒரு மாதமாகியும் தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை
    • குமரி மாவட்டத்தில் கன்னி பூ, கும்ப பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கன்னி பூ, கும்ப பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். தற்பொழுது மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி பணியில் விவ சாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சுசீந்திரம், அருமநல்லூர், தேரூர், பூதப்பாண்டி, புத்தேரி, சுங்கான்கடை, பொற்றையடி, அஞ்சுகி ராமம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடிகள் செய்ய ப்பட்டுள்ளது. நடவுப்பணி மற்றும் நேரடி விதைப்பின் மூலமாக சுமார் 4000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 1500 ஹெக்டேரில் சாகுபடி செய்ய விவசாயிகள் தயார் ஆகிவருகிறார்கள். கன்னி பூ சாகுபடிக்காக ஜூன் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. அணை திறக்கப்பட்டு 30 நாட்கள் ஆகியும் கடைமடை பகுதியில் வரை தண்ணீர் செல்லவில்லை. சானல்கள் சரி வர தூர்வாராததே இதற்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். இதை த்தொடர்ந்து சானல்களை தூர்வார ரூ.5 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வரு கிறது. கிளை கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தோவாளை சானல், அனந்தனார் சானல் உட்பட பிரதான கால்வாய்களை தூர்வருவது தொடர்பாக விவசாய பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது 2 நாட்கள் மட்டுமே தண்ணீரை அடைத்து தூர்வார வேண்டும் இல்லாவிட்டால் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் என்று கருத்து தெரிவித்தார். நாகர்கோவில் புத்தேரி அருகே புளியடி பகுதியில் அனந்தனார் சானலின் கிளை கால்வாயான பீசாத்தி கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அணை பாசனத்தை நம்பி அந்த பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர்.

    தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் தண்ணீர் வராததால் நெற்ப யிர்கள் காய்ந்து வருகிறது. வயல்கள் வடித்து நெற்ப யிர்கள் முற்றிலும் கருகி காணப்படுகிறது.

    இதேபோல் புத்தேரி அருகே லட்சுமி குளம், அட்டகுளம் பகுதியிலும் தண்ணீ ர் இல்லாத நிலை உள்ளது. பண்டார தோப்பு பகுதியில் பாதி அளவு சாகுபடி செய்து மீதமுள்ள இடங்களில் சாகுபடி செய்ய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டிவரும் நிலையில் அணைகளின் நீர்மட்டமும் சரிந்து காணப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 19.45 அடியாக சரிந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்ட மும் சரிந்து வருவதால் சாகு படி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பருவ மழை கை கொடுத்தால் மட்டுமே சாகுபடி செய்துள்ள அந்த பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்ப ட்டுள்ளனர். ஆனால் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து கண்ணாமூச்சி கட்டி வருகிறது. வருண பகவான் வழிவி ட்டால் மட்டுமே நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×