search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி"

    • செம்மனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரவேல் கூலி தொழிலாளி.
    • லாரியில் கோழிகளை ஏற்றுவதற்காக வந்துள்ளார்.

    விழுப்புரம்:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரவேல் (வயது 40) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் புதுக்கேணி பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லாரியில் கோழிகளை ஏற்றுவதற்காக வந்துள்ளார்.

    வேலைக்கு சென்ற இடத்தில் திடீரென உத்தரவேலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் உத்தரவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்தார்.
    • திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவ ட்டம் வலங்கைமான் அருகே உள்ள முனியூர் கிராமத்தை சேர்ந்தவ் ராசப்பன் (வயது 55) தொழிலாளி.

    இவர் அதே பகுதியில் நடந்த 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்தார்.

    அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    அதிர்ச்சியடைந்த சக பணியாட்கள் 108 ஆம்புலனசை வரவ ழைத்தனர்.

    பின்னர் மயங்கி விழுந்த ராசப்ப னை பரிசோதித்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்
    • போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை வெள்ளலூரில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு குப்பையை தரம் பிரித்து உரமாக பிரிக்கும் பணி நடந்து வருகிறது.இதற்காக ராட்சத எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    இங்கு கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சத்யா (வயது23) வேலை செய்து வருகிறார். இவர் இன்று காலை குப்பைகளை நசுக்கும் எந்திரத்துக்குள் சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த மற்றொரு பணியாளர், சத்யா உள்ளே இருப்பதை கவனிக்காமல் எந்திரத்தின் சுவிட்ச்சை ஆன் செய்ததார். கண் இமைக்கும் நேரத்தில் சத்யாவின் இரண்டு கால்களும் எந்திரத்துக்குள் சிக்கி நசுங்கியது.

    இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனைக் கேட்டவர்கள் உடனடியாக எந்திரத்தை அணைத்தனர். இதில் அவரது இரண்டு கால்களும் எந்திரத்துக்குள் சிக்கி தொடை வரை நசுங்கி சிதைந்தது.

    உடனடியாக அவர்கள் இதுகுறித்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் உயிருக்கு போ ராடிய சத்யாவை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக சாய்பாபா காலனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மர்மமாக இறந்துகிடந்தது குறித்து போலீசார் விசாரணை
    • போதையில் கால்வாயில் தவறி விழுந்ததால் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை :

    தக்கலை அருகே உள்ள குமாரபுரம் படப்பகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி பிரேமலதா மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

    சுரேசுக்கு மது பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மது அருந்தி வந்ததால் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக பிரேமலதா தனது குழந்தைகளுடன் கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் சுரேஷ் தனியாக வசித்து வந்தார்.

    தினமும் காலையில் வேலைக்கு செல்லும் அவர், மாலையில் மது அருந்தியபடி வருவாராம். நேற்று மாலையும் சுரேஷ் மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வீட்டின் அருகே உள்ள கால்வாயில் அவர் பிணமாக கிடந்துள்ளார்.

    இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    அவர்கள் கால்வாயில் பிணமாக கிடந்த சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது மனைவிக்கும் தகவல் கொடுத்தனர்.

    வீட்டுக்கு சென்ற சுரேஷ் கால்வாயில் பிணமாக கிடந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. அவரை யாராவது அழைத்துச் சென்று தாக்கி இருக்கலாமா? அல்லது போதையில் கால்வாயில் தவறி விழுந்ததால் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம்-பட்ட மங்கலம் சாலையில் உள்ள ஆலமர பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்தார்.

    இதை பார்த்த அந்த பகுதி மக்கள் திருக்கோஷ்டி யூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப் பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? என போலீசார் நடத்திய விசா ரணையில், காட்டாம்பூர் கிராமத்தை சேர்ந்த ஜெய மணி மகன் ஜெயகாந்தன் என தெரியவந்தது. தச்சு தொழிலாளியான இவர் எப்படி இறந்தார்? என தெரியவில்லை.

    முகம், கைகளில் ரத்த காயங்கள் இருப்பதால் அவரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்தி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குடும்ப பிரச்சினை அல்லது வேறு ஏதேனும் விவகாரத்தில் ஜெயகாந்தன் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
    • இதனை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கும்பகோணம்:

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள கூந்தலூர் பகுதியை சேர்ந்தவர் மோசஸ். இவருடைய மகன் ஸ்டாலின் (வயது 32). இவர், திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில், இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சொந்த ஊருக்கு வந்து தனது தாயுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டாலின் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக

    அனுமதி க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் காசநோய் இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ஸ்டாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் முத்துராம லிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வபோதகர் (வயது32). வெல்டிங் தொழி லாளி. இவரது மனைவி ஜெனிட்டா (23). இவர்க ளுக்கு 3 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளார். செல்வபோதகர் தனது தாய்-தந்தையுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவர்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. பெரியவர்கள் பேசி சமாதானம் செய்து வைத்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் செல்வபோதகர் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மனைவி செல்போனில் அழைத்த போது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.

    பின்னர் கணவரின் தம்பியிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

    அவர் விசாரித்த போது விருதுநகர்-சாத்தூர் நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் ரெயில்வே பாலம் அருகே செல்வபோதகர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசில் ஜெனிட்டா புகார் கொடுத்தார்.

    அதில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் மனஉளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற மரியராஜாவை கைது செய்தனர்.
    • தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள மலையாண்டி பாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் கடந்த 8 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது வீட்டிற்குள் ஜே.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மரியராஜா என்ற மரியலூயிஸ்ராஜா (வயது 42) என்பவர் அத்துமீறி உள்ளே நுழைந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ஆடைகளை கழற்றி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற மரியரா ஜாவை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து சுல்தான் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற மரியராஜாவை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய் 11 நாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்தார்.
    • பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் எப்படி?இறந்தார் என்பது தெரிய வரும்

    குளச்சல் :

    குளச்சல் அருகே ரீத்தாபுரம் ஒற்றப்பனவிளையை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 79).இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உண்டு.இதில் ஆல்பின் ஜெபராஜ் (39) தவிர மீதி 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.ஆல்பின் ஜெபராஜ் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்காக அவர் நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அடிக்கடி வீட்டிலிருந்து காணாமல் போகும் இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய் 11 நாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்தார்.

    இந்நிலையில் கடந்த 11-ந் தேதி மீண்டும் எங்கேயோ சென்றார். பின்னர் அவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார்.யாரிடமும் பேசாமல் இருந்த அவர் இரவு மேல் மாடி படுக்கை அறைக்கு சென்றார்.நேற்று காலையில் பார்க்கும்போது ஆல்பின் ஜெபராஜ் கீழே விழுந்து இறந்து கிடந்தார்.அவர் மாடியி லிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது கால் தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து தெரிய வில்லை.இது குறித்து அவரது தந்தை ராஜாமணி குளச்சல் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் எப்படி?இறந்தார் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • 3 பேர் வழிமறித்து எங்கள் ஊருக்கு தாமரை பூ பறிக்க எவ்வாறு வரலாம் என கூறி தகராறு
    • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி :

    ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் பொய்கை குளம் உள்ளது. இந்த குளத்தில் ஏராளமான தாமரை பூக்கள் பூத்திருக்கின்றன. இந்த பூக்களை பறிப்பதற்காக ஆசாரிப்பள்ளம் அருகே உள்ள ஜெலின்குமார் (வயது 27) என்பவர் வந்தார். அப்போது அவரை மிசின் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த 3 பேர் வழிமறித்து எங்கள் ஊருக்கு தாமரை பூ பறிக்க எவ்வாறு வரலாம் என கூறி தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இதில் காயம் அடைந்த ஜெலின்குமார் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகிறார்கள்.

    • கிணற்றின் ஓரத்தில் இருந்த செடிகளை துண்டி வெட்டிக் கொண்டிருந்தார்.
    • கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கால சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் துண்டி (வயது 53) கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் குரால் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் தமிழ்ச்செல்வன் நிலத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் இருந்த செடிகளை துண்டி வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தவரை அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கிணற்றிலிருந்து தூக்கிப் பார்த்த போது துண்டி இறந்து விட்டார் என தெரியவந்தது. இது குறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழ் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாகராஜ் வீட்டிற்கு செல்லவில்லை.
    • போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

    கடலூர்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே ஜோடுகுளிகுண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது42) கூலித்தொழிலாளி. இவர் கடந்த மாதம் கடலூர் ஆல்பேட்டை பெண்ணையாறு மேம்பாலம் பணிக்கு வந்தார். வேலை முடிந்து கடந்த மாதம் 29-ந் தேதி சொந்த ஊர் திரும்பியுள்ளார். ஆனால் நாகராஜ் வீட்டிற்கு செல்லவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கோவிந்தம்மாள் கடலூர் புதுநகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

    ×