என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழியில் தொழிலாளி மீது தாக்குதல்
- 3 பேர் வழிமறித்து எங்கள் ஊருக்கு தாமரை பூ பறிக்க எவ்வாறு வரலாம் என கூறி தகராறு
- ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி :
ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் பொய்கை குளம் உள்ளது. இந்த குளத்தில் ஏராளமான தாமரை பூக்கள் பூத்திருக்கின்றன. இந்த பூக்களை பறிப்பதற்காக ஆசாரிப்பள்ளம் அருகே உள்ள ஜெலின்குமார் (வயது 27) என்பவர் வந்தார். அப்போது அவரை மிசின் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த 3 பேர் வழிமறித்து எங்கள் ஊருக்கு தாமரை பூ பறிக்க எவ்வாறு வரலாம் என கூறி தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் காயம் அடைந்த ஜெலின்குமார் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகிறார்கள்.
Next Story






