சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

கிணற்றின் ஓரத்தில் இருந்த செடிகளை துண்டி வெட்டிக் கொண்டிருந்தார். கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கால சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் துண்டி (வயது 53) கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் குரால் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் தமிழ்ச்செல்வன் நிலத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் இருந்த செடிகளை துண்டி வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தவரை அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கிணற்றிலிருந்து தூக்கிப் பார்த்த போது துண்டி இறந்து விட்டார் என தெரியவந்தது. இது குறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழ் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com