உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

செம்மனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரவேல் கூலி தொழிலாளி.லாரியில் கோழிகளை ஏற்றுவதற்காக வந்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
Published on

விழுப்புரம்:

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரவேல் (வயது 40) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் புதுக்கேணி பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லாரியில் கோழிகளை ஏற்றுவதற்காக வந்துள்ளார்.

வேலைக்கு சென்ற இடத்தில் திடீரென உத்தரவேலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் உத்தரவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com