என் மலர்
உள்ளூர் செய்திகள்

குளச்சல் அருகே மாடியிலிருந்து குதித்து தொழிலாளி தற்கொலை
- கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய் 11 நாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்தார்.
- பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் எப்படி?இறந்தார் என்பது தெரிய வரும்
குளச்சல் :
குளச்சல் அருகே ரீத்தாபுரம் ஒற்றப்பனவிளையை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 79).இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உண்டு.இதில் ஆல்பின் ஜெபராஜ் (39) தவிர மீதி 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.ஆல்பின் ஜெபராஜ் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்காக அவர் நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அடிக்கடி வீட்டிலிருந்து காணாமல் போகும் இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய் 11 நாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்தார்.
இந்நிலையில் கடந்த 11-ந் தேதி மீண்டும் எங்கேயோ சென்றார். பின்னர் அவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார்.யாரிடமும் பேசாமல் இருந்த அவர் இரவு மேல் மாடி படுக்கை அறைக்கு சென்றார்.நேற்று காலையில் பார்க்கும்போது ஆல்பின் ஜெபராஜ் கீழே விழுந்து இறந்து கிடந்தார்.அவர் மாடியி லிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது கால் தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து தெரிய வில்லை.இது குறித்து அவரது தந்தை ராஜாமணி குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் எப்படி?இறந்தார் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.






