search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#ஜெயில்"

    • மாமியாருக்கு 7 ஆண்டு தண்டனை விதித்து நாகர்.கோர்ட்டு தீர்ப்பு
    • சசிகலாவிற்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு

    நாகர்கோவில் :

    களியக்காவிளையை அடுத்த மூவாற்று கோணம்தேவி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27).

    இவருக்கும் களியக்கா விளையைச் சேர்ந்த சவுமியா என்பவருக்கும் கடந்த 2019- ம் ஆண்டு திருமணம் நடந்தது.திருமணம் முடிந்த 7 மாதத்தில் சவுமியா தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பளுகல் போலீசார் ராஜேஷ் மற்றும் அவரது தாயார் சசிகலா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா கோட்டில் நடந்து வந்தது.

    இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து ராஜேஷ், அவரது தாயார் சசிகலா ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

    இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பு கூறினார். ராஜேஷுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ ஆயிரம் அபராதமும் சசிகலாவிற்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    • பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் ஒரு மசோதாவை பரிந்துரை செய்துள்ளது.
    • குற்றவாளி வாரண்ட் இன்றி கைது செய்யப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் ஒரு மசோதாவை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி நாட்டின் ராணுவம் மற்றும் நீதித்துறையை அவதூறு செய்பவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.

    சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வரைவு மசோதா சட்டம் நீதி அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவைக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. நீதித்துறை, ஆயுதப்படைகளை கேலி செய்யும் நோக்கத்துடன் எந்த ஊடகத்தின் மூலமாகவும் அறிக்கை வெளியிடுவது, தகவல்களை பரப்புவது ஆகியற்றுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும். குற்றவாளி வாரண்ட் இன்றி கைது செய்யப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக அமைச்சரவை வெளியிட்ட அறிக்கையில், சமீப காலமாக நீதித்துறை மற்றும் ராணுவம் உள்பட அரசின் சில நிறுவனங்கள் மீது அவதூறான, இழிவான, கொடூரமான தாக்குதல்களை நாடு கண்டுள்ளது. சுயநல நோக்கங்களுக்காக சிலர் வேண்டு மென்றே தவறான பிரசாரத்தை தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

    • நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
    • கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு சுபியா தீக்குளித்தார்.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே மயிலாடியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி சுபியா (25). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு சுபியா தீக்குளித்தார்.

    இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தினர். சுபியா நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் வேல்முருகன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக அஞ்சு கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து போலீசார் வேல்முருகனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வேல்முருகன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வேல்முருகனுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    • தாக்குதல் நடத்திய வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பிரதீப், அலெக்ஸ் ரூபன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர் பிரபல தொண்டு நிறுவன நிர்வாகியான பாலகுமரேசன்.

    தாக்குதல்

    ஆறுமுகநேரியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக சமூக விரோத செயல்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி கடந்த ஆண்டு பொதுமக்கள் சாலை மறியல் நடத்தினர். இதில் பாலகுமரேசன் கலந்துகொண்டதால் அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதனால் அவர் தனக்கு பாதுகாப்பு தர வேண்டுமென்று போலீசாரிடம் மனு கொடுத்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு கும்பல் பாலகுமரேசனை பயங்கரமான ஆயுதங்களால் தாக்கியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்ட பாலகுமரேசன் தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.

    குண்டர் சட்டம் பாய்ந்தது

    இவர் மீதான தாக்குதல் வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தை சேர்ந்த சூசைராஜ் மகன் பிரதீப் என்ற அந்தோணி பிரதீப் (20), காமராஜபுரத்தை சேர்ந்த திலகர் மகன் அலெக்ஸ் ரூபன் என்ற பப்பை (19) ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் அளித்த அறிக்கையை மாவட்ட சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதனை ஏற்றுக் கொண்ட கலெக்டர் செந்தில்ராஜ் பிரதீப், அலெக்ஸ் ரூபன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தர விட்டார். இதன்படி அவர்கள் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • எங்களை போலீசார் பிடித்து வைத்து ஜெயிலில் அடைத்து வைத்துள்ளனர்.
    • வயிற்று பிழைப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பாபநாசம் தாலுகா கீழ கோவில் பத்து உடையார் கோயிலை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தை சேர்ந்த யுவராஜ், ராமு, சிகாமணி, மணிமாறன் ஆகிய 4 பேர் தோட்ட வேலைக்காக மலேசியா நாட்டிற்கு செல்ல முடிவு செய்தனர்.

    இதற்காக அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் தாய்லாந்து சென்றனர். அங்கிருந்து மலேசியா செல்ல இருப்பதாக அவர்களின் குடும்பத்தினரிடம் கூறினர்.

    ஆனால் அதன் பிறகு ஒரு எண்ணில் இருந்து எங்களுக்கு ஒரு குரல் செய்தி வந்தது.

    அதில் இது போலீஸ்காரர் தொலைபேசி என்றும், எங்களை போலீசார் பிடித்து வைத்து ஜெயிலில் அடைத்து வைத்துள்ளனர் எனவும் கூறி துண்டிக்கப்பட்டது.

    அதன் பிறகு எந்த ஒரு தகவலும் இல்லை.

    இதனால் மன வேதனை அடைந்த அந்த நான்கு பேரின் குடும்பத்தினரும் திரும்பவும் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா ? இல்லையா ? என்ற எந்த தகவலும் எங்களுக்கு தெரியவில்லை.

    எனவே மலேசியா நாட்டிற்கு வேலைக்கு சென்ற 4 பேரையும் பத்திரமாக மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தெக்ரானில் கலவரத்தை தூண்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
    • அரசுக்கு எதிரான பிரசாரம் செய்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹிஜாப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரபலங்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்து வருகிறது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஈரான் நாட்டின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமியின் மகள் பேசே ஹாஷிமிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை அவரது வக்கீல் உறுதிப்படுத்தினார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தெக்ரானில் கலவரத்தை தூண்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். அரசுக்கு எதிரான பிரசாரம் செய்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஏற்கனவே மேசே ஹாஷிமி, 2009-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அரசுக்கு எதிரான தவறான தகவல்களை பரப்பியதாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டது.


    • தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
    • கோட்டார் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்தனர்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்து செல்லும் நபர்களிடம் செல்போன் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்ட னர். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோட்டார் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசா ரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.

    பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த சையத் அலி (வயது 23) என்பது தெரியவந்தது. இவர் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்போன் திருடியதை ஒப்பு கொண்டார். போலீசார் அவரிடம் இருந்து 10 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர் கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • ஜெயிலில் போக்சோ கைதி சாவடைந்தார்.
    • இதுகுறித்து ஜெயில் அதிகாரி பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    கோவில்பாப்பாக்குடி, மல்லிகை நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (59). இவர் சில மாதங்களுக்கு முன்பு போக்சோ வழக்கில் கைதானார். இதில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை மத்திய ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்து வந்தார்.

    ஆறுமுகத்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரை ஜெயில் வளாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயில் அதிகாரி பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • மாமியார் உள்பட 2 பேர் மீது வழக்கு
    • பூதப்பாண்டி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகு விளையைச் சேர்ந்தவர் அபிராமி (வயது 22).

    இவருக்கும் பூதப்பாண்டி ஞாலம்காலனியை சேர்ந்த மனோஜ் (24) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமண நடந்தது.அபிராமி இரண்டு மாதம் கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அபிராமி தனது அறையில் மின்விசிறி யில் தூக்கு போட்டு தற் கொலை செய்து கொண் டார். இது குறித்து அபிரா மியின் தந்தை வினு பூதப் பாண்டி போலீசில் புகார் செய்தார்.

    புகாரில் தனது மகள் சாவிற்கு அவரது கணவர் மற்றும் தாயார் நாகேஸ்வரி பாட்டி கிருஷ்ணம்மாள் ஆகியோர் காரணம் என்று கூறியிருந்தார். மேலும் அபிராமி பேசிய ஆடியோக்களும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் தொடர்ந்து மனோஜ் அவரது தாயார் நாகேஸ்வரி பாட்டி கிருஷ்ணம்மாள் ஆகியோர் மீது பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மனோஜை போலீ சார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மனோஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார்.

    பின்னர் அவரை நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். நாகேஸ்வரி, கிருஷ்ணம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்ய பூதப்பாண்டி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • போட்டோ ஸ்டூடியோவுக்கு உரிமம் வழங்க சண்முகத்திடம், நெப்போலியன் ரூ.2000 லஞ்சம் கேட்டார்.
    • லஞ்சம் கொடுக்க விரும்பாத சண்முகம் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தனர்.

    சென்னை:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருபவர் சண்முகம். இவர் தனது கடைக்கு உரிமம் பெற ராயபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உரிமம் வழங்கும் ஆய்வாளராக பணியாற்றிய நெப்போலியன் என்பவரை அணுகினார்.

    அப்போது போட்டோ ஸ்டூடியோவுக்கு உரிமம் வழங்க சண்முகத்திடம், நெப்போலியன் ரூ.2000 லஞ்சம் கேட்டார். ஆனால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று சண்முகம் மறுத்தார். இதையடுத்து சண்முகம் ரூ.1500 கொடுக்குமாறு கேட்டார். அதற்கு சண்முகம் சம்மதித்தார். ஆனாலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத சண்முகம் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தனர். அதன்பிறகு ரசாயனம் தடவிய ரூ.1,500 பணத்தை நெப்போலியனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நெப்போலியனை கைவும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் இதுதொடர்பான வழக்கு சிறப்பு கோர்ட்டிலும் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், லஞ்சம் வாங்கிய சென்னை மாநகராட்சி அதிகாரி நெப்போலியனுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தார். இதையடுத்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • பொது இடங்கள் மற்றும் மதவழிபாட்டு இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
    • குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து பிற நேரங்களில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டு்ம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மதம் சார்ந்த திருவிழாக்கள், விழாக்கள் தொடர்பான நிகழ்வுகள் நடைபெறும் பொது இடங்கள் மற்றும் மதவழிபாட்டு இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

    திருவிழாக்கள், மத வழிபாட்டு தலங்கள் மற்றும் விழாக்களில் ஒலி பெருக்கிகள் உபயோகிப்ப தற்கு தொடர்புடைய போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டரிடம், பொ றுப்பு அலுவலரிடம் உரிய அனு மதி பெற்று அதில் குறிப்பிட் டுள்ள நாள் நேரத்திற்கு மட்டுமே ஒலி பெருக்கிகள் பயன்படுத்த வேண்டும்.

    மேலும் கோவில் விழாக்கள், திருவிழாக்கள் நடைபெறும் நாட்களில் அனுமதி பெறப்பட்டுள்ள குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து பிற நேரங்களில் ஒலி பெருக்கிகள் பயன்ப டுத்துவதை தடுத்திடும் பொருட்டு அந்தந்த ஊர் பொறுப்பு நிர்வாகிகள் அதனை கண்காணித்து விதி மீறலை தவிர்த்திட வேண்டும்.

    அனுமதி பெறாமல் ஒலி பெருக்கிகள் பயன் படுத்துவது முற்றி லும் தவிர்க்கப்பட வேண்டும்.

    முதியவர்கள், குழந்தை கள், உடலநலம் பாதிக்கப்பட் டவர்கள், மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்கள், கல்வி பயிலும் மாணவ- மாணவிகள் பொது நலனை கருத்திற்கொண்டு விதிமுறைகளுக்குட்பட்டு ஒலிபெருக்கிகள் பயன் படுத்துவதை அந்தந்த பொறுப்பு நிர்வாகிகள் உறுதி செய்திடவேண்டும்.

    வரையறுக்கப்பட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர்புடைய பகுதி போலீஸ் இன்ஸ்பெக் டர்கள் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கி உரிமம் பெற்றுள்ள கட்டுப்பா டுகளை மீறி செயல்படு பவர்கள் மீது ஒலி மாசு விதி 2000-ன் உட்பிரிவு 3(1)ன்படி பொருட்கள் பறிமுதல் செய்து சட்டப் பூர்வ நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

    காலை நேரங்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை குறிப்பிட்ட விழாக்களில் அனுமதி பெறப்பட்டிருப்பின் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தி கொள்ளப்படவேண்டும்.

    பொது இடங்களில் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் ஒலி பெருக்கிகள் பயன் படுத்தக்கூடாது. இதனை அந்தந்த பகுதி காவல் நிலைய பொறுப்பாளர்கள் உறுதி செய்திட வேண்டும்.

    மேற்படி சட்ட விதி மீறல் நடவடிக்கையில் ஈடு பட்டு அதிக ஒலி எழுப் பும் ஒலிப்பான்கள் பயன்ப டுத்துதல் அதிக நேரம் மற்றும் இரவு நேரங்களில் வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு செயல்படும் நபர்கள் மீது இன்ஸ்பெக்டர் மூலம் 500 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதம் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை உள்ளது.

    மெட்ராஸ் நகர காவல் சட்டம் 1888 பிரிவு 71 யு உட்பிரிவு 1-ல் எந்த வொரு காவல்துறை அதிகாரியும் அவர் சார் பாக உருவாக்கப்படும் விதி களுக்குட்பட்டு துணைப்பிரிவு (1)-ன் கீழ் வழங்கப் பட்ட உரிமத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்த னைகளை மீறும் வகையில் பயன்படுத்தப்படும் ஒலி பெருக்கிகளை அதை சார்ந்த பொருட்களை பறிமுதல் செய்யலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    • கடந்த ஜூலை மாதம் சுங்கான்கடை பகுதியில் கொலை
    • குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை

    நாகர்கோவில்:

    களியக்காவிளை ஆர்.சி தெருவை சேர்ந்தவர் ரீகன் (வயது 35). பிரபல ரவுடி. இவர் கடந்த ஜூலை மாதம் சுங்கான்கடை பகுதியில் கொலை செய்யப்பட்டார். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரீகன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து குருந்தன்கோடு முக்கலாம்பாட்டைச் சேர்ந்த அசோக் (25), அஜின் ஜோஸ் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கைதான அஜின் ஜோஸ் மீது ஏற்கனவே இரணியல் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருந்தது. இதையடுத்து போலீசார் அஜின் ஜோஸ், அசோக் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அஜின்ஜோஸ், அசோக் ஆகிய 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.ஏற்கனவே குமரி மாவட் டத்தில் குட்கா, கஞ்சா வழக்குகள் மற்றும் தொடர்ந்து குற்றச் செயல்கள் ஈடுபடுபவர்களை போலீ சார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். தற்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

    ×