search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ராணுவம் பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு ஜெயில்- பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
    X

    ராணுவம் பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு ஜெயில்- பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

    • பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் ஒரு மசோதாவை பரிந்துரை செய்துள்ளது.
    • குற்றவாளி வாரண்ட் இன்றி கைது செய்யப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் ஒரு மசோதாவை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி நாட்டின் ராணுவம் மற்றும் நீதித்துறையை அவதூறு செய்பவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.

    சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வரைவு மசோதா சட்டம் நீதி அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவைக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. நீதித்துறை, ஆயுதப்படைகளை கேலி செய்யும் நோக்கத்துடன் எந்த ஊடகத்தின் மூலமாகவும் அறிக்கை வெளியிடுவது, தகவல்களை பரப்புவது ஆகியற்றுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும். குற்றவாளி வாரண்ட் இன்றி கைது செய்யப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக அமைச்சரவை வெளியிட்ட அறிக்கையில், சமீப காலமாக நீதித்துறை மற்றும் ராணுவம் உள்பட அரசின் சில நிறுவனங்கள் மீது அவதூறான, இழிவான, கொடூரமான தாக்குதல்களை நாடு கண்டுள்ளது. சுயநல நோக்கங்களுக்காக சிலர் வேண்டு மென்றே தவறான பிரசாரத்தை தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

    Next Story
    ×