search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக வலைதளம்"

    • வீடியோ காலிங் ஆப்ஷன் பற்றிய படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
    • போலி அழைப்புகளை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.

    எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் பயனர்கள் விரைவில் ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும் என்று அதன் உரிமையாளரான எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். இந்த அம்சம் எக்ஸ் சேவையின் ஐ.ஒ.எஸ்., ஆண்ட்ராய்டு, மேக் மற்றும் விண்டோஸ் உள்ளிட்ட தளங்களில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இது தொடர்பான அறிவிப்பை எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். அதில், வீடியோ மற்றும் ஆடியோ கால்கள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்து இருக்கிறார். அதன்படி பயனர்கள் மொபைல் போன் நம்பர்கள் இல்லாமல் தங்களின் யூசர்நேம் கொண்டே அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

    முன்னதாக எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ இந்த அம்சம் வழங்கப்படுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதை தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தின் டிசைனரான ஆண்ட்ரியா கான்வே - புதிய வீடியோ காலிங் ஆப்ஷன் பற்றிய படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

    மேலும் எக்ஸ் தளத்தில் போலி அழைப்புகளை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை விதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. எனினும், இந்த வசதிகளை பிரீமியம் சந்தா இல்லாதவர்கள் பயன்படுத்த முடியாது என்றே தெரிகிறது. தற்போது எக்ஸ் தளத்தில் "ஸ்பேசஸ்" எனும் அம்சம் கொண்டு பயனர்கள் உரையாடல்களை மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில், புதிய அழைப்புகளுக்கான வசதி கொண்டு எக்ஸ் தளம் புளூஸ்கை மற்றும் திரெட்ஸ் போன்ற சேவைகளில் இருந்து வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும். எலான் மஸ்க்-இன் எல்லாவற்றுக்குமான செயலியை உருவாக்கும் திட்டத்தின் அங்கமாக புதிய அழைப்புகளுக்கான வசதி பார்க்கப்படுகிறது. 

    • மகளிர் அணி பொறுப்பாளர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    • சரவணகுமார், பழனிவேல், ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் தகவல் தொழில்நுட்ப அணியின் களப்பணிகள் ஒருங்கிணைப்பாளர்கள், சமூக வலைதள பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ, மாவட்ட பொருளாளர் இரா. ஜனகராஜ், மாநில ஆதிதிராவிட நலக்குழு இணைச் செயலாளர் செ.புஷ்பராஜ், மாவட்ட துணைச் செயலாளர் தயா. இளந்திரையன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வளவனூர் ப. அன்பரசு, துணை அமைப்பாளர்கள் சாம்பசிவம், கிருஷ்ணராஜ், பாலாஜி, சசி ரேகா பிரபு, தொகுதி நிர்வாகிகள் தேவா, குரு ராமலிங்கம், மகாலட்சுமி செந்தில், ரகுபதி, கதிரவன், நாராய ணமூர்த்தி, குமரவேல், மூகாம்பிகை நாராயணன், புளிச்சப்பள்ளம் ராதிகா சித்தானந்தன், கோட்டக்குப்பம் ஜாகிர், திருக்கோயிலூர் தொகுதி விக்னேஷ், ஆசைத்தம்பி பரிமளம், திருநாவுக்கரசு, மேகநாதன், நவீன் குமார், விக்னேஷ், அகமது ஷெரிப், சுப ஸ்ரீ, செல்வகுமார், தேவன், மோகன், ராஜேஷ், சசிகலா கபிரியேல், அபுபக்கர், கோமதி பாஸ்கர், சந்திரசேகர், செல்வகுமார், அருண், வள்ளி ராஜேஷ், முத்தமிழ், இராமு, சுப்புலட்சுமி மணிகண்டன், அரவிந்தன், கபிலன், புஷ்பராஜ், மனோஜ் குமார், மணிகண்டன், பூவராகவன், சரவணன், யுவராஜ், சரவணகுமார், பழனிவேல், ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • இன்ஸ்டாகிராம் காதலன் சிறுமியை மீண்டும் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டதாக தெரிகிறது.
    • எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பதி:

    திருப்பதி மலை பாதையில் செல்லும் பக்தர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ஷெட்டி ஆந்திர ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோருடன் நடந்து சென்ற 3 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி சென்றது.

    இதேபோல் லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை இழுத்துச் சென்று கடித்து கொன்றது. தற்போது மலை பாதை அருகே சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது.

    இதனால் பக்தர்கள் அச்சத்துடன் நடை பாதையில் நடந்து செல்கின்றனர். எனவே நடைபாதை முழுவதும் இரும்பு வேலி அமைக்க திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை நடைபெறும் என தெரிவித்தனர்.

    • இன்ஸ்டாகிராம் காதலன் சிறுமியை மீண்டும் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டதாக தெரிகிறது.
    • எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    ராமாபுரம், பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் உறவுக்காரரான பாண்டியன் என்பவருக்கும் (சிறுமியின் தாயின் தம்பி) கடந்த மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் சிறுமிக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்ட சிறுமி தன்னை கட்டாயபடுத்தி உறவுக்காரருடன் திருமணம் செய்து வைத்து விட்டதாக புகார் தெரிவித்தார்.

    இதுகுறித்து குழந்தைகள் நல உதவி மைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக சிறுமியின் தாய் மற்றும் அவரது தம்பியான பாண்டியன் மீது வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக போலீசார் விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இதில் சிறுமி ஏற்கனவே சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலனை தேடி சத்தியமங்கலத்துக்கு சென்ற சிறுமியை அவரது தாய் மீட்டு வந்துள்ளார் இதற்கிடையில் சிறுமி தனது தாயின் சகோதரரான பாண்டி யனை காதலிப்பதாகவும், அவருடன் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் வேறு வழியின்றி மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

    இந்நிலையில் இன்ஸ்டாகிராம் காதலன் சிறுமியை மீண்டும் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டதாக தெரிகிறது. இதனை அறிந்த சிறுமியின் கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகாராறு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு தனது திருமணம் குறித்து புகார் அளித்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக அவரது தாய் மற்றும் திருமணம் செய்த பாண்டியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த விவகாரத்தில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் மேலும் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது.
    • சில வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

    குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் பாம்புகளை கண்டால் துரத்தி அடிப்பவர்களுக்கு மத்தியில், ராட்சத மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க வாலிபர் ஒருவர் போக்குவரத்தை நிறுத்தி உதவிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    மத்தியபிரதேச மாநிலத்தில் நர்மதா புரத்தில் நெடுஞ்சாலையில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. ஆனால் அந்த பாம்பு சாலையில் நகர முடியாமல் 10 நிமிடங்களுக்கு மேலாக திணறுவதை அவ்வழியாக சென்ற வாலிபர் பார்த்தார். உடனடியாக அவர் தனது வாகனத்தை நிறுத்தியதோடு பாம்பின் மீது மற்ற வாகனங்கள் ஏறி விடாமல் இருப்பதற்காக அந்த வழியில் போக்குவரத்தை நிறுத்தி உள்ளார்.

    பின்னர் அந்த பாம்பு சாலையை கடக்கும் வகையில் கை தட்டி உள்ளார். அவரின் கை தட்டலை கேட்டு பாம்பு மெதுவாக சாலையை கடந்து செல்கிறது. இதை சில வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகிய நிலையில் வாலிபரை பாராட்டி பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • அவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த அம்சம் உதவுகிறது.
    • அதற்கு பதில் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம் என்று எலான் மஸ்க் அறிவிப்பு.

    எலான் மஸ்க்-இன் எக்ஸ் (முன்னதாக டுவிட்டர்) சமூக வலைதளத்தில் பயனர்கள் மற்றவர்களை பிளாக் (Block) செய்வதற்கான வசதி விரைவில் நீக்கப்பட இருக்கிறது. எக்ஸ் தளத்தின் புதிய உரிமையாளர் இதுபற்றி தகவல் தெரிவித்து இருக்கிறார். ஒருவர் பிளாக் அல்லது அன்-மியூட் செய்வது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க் இந்த தகவலை தெரிவித்தார்.

    "மெசேஜ்களில் வழங்கப்பட்டு இருப்பதை தவிர்த்து, தனி அம்சமாக இருக்கும் பிளாக் நீக்கப்பட இருக்கிறது. இந்த அம்சத்தில் எந்த அர்த்தமும் இல்லை," என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். டுவிட்டர் தளத்தில் மற்ற அக்கவுன்ட்களுடன் எப்படி உரையாடுகின்றீர்கள் என்பதை சிறப்பாக கட்டுப்படுத்த பிளாக் அம்சம் உதவும் என்று அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

     

    இந்த அம்சம் கொண்டு பயனர்கள் குறிப்பிட்ட அக்கவுன்ட்கள் தங்களை தொடர்பு கொள்வது, டுவீட்களை பார்ப்பது மற்றும் ஃபாளோ செய்வது உள்ளிட்டவைகளை தடுக்க செய்கிறது. தளத்தில் தங்களை யாரேனும் தவறாக தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது, அவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த அம்சம் உதவுகிறது.

    எக்ஸ் தளத்தில் பயனர்கள் பிளாக் செய்வதற்கு பதிலாக, மியூட் (mute) அம்சத்தை பயன்படுத்தலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். புதிய அறிவிப்பின் படி பயனர்கள் தொடர்ந்து அக்கவுன்ட்களை மியூட் செய்யவும், மெசேஜ்களில் பிளாக் செய்யவும் முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • பெண்கள் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட முருகேசன்
    • பெண்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கல்லங்காட்டுவலசு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சி வி.மேட்டூர் பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட முருகேசன் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் முருகேசன் மீது போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வி.மேட்டூர் பகுதியை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கல்லங்காட்டுவலசு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெருமாள், சமூக செயல்பாட்டாளர் வக்கீல் கார்த்திகேயன், வி.மேட்டூரை சேர்ந்த முருகன், பழனிசாமி, செங்கோடன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்தால் கடுமையான தண்டனை வழங்க சட்டங்கள் வழிகாட்டி இருக்கும்போது, போலீசார் தவறு செய்தவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தவேண்டும்.

    இந்த வழக்கை முழுமையாக விசாரித்து பெண்களை அவதூறாக சித்தரித்தவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.

    • காயலார் மேடு பகுதியைச் சேர்ந்த 3 பேரை பிடித்தனர்.
    • வீடியோவில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரும் இருப்பதாக தெரிகிறது. அவரை தேடிவருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி சிப்காட் அருகே காயலார்மேடு பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் பெரிய பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் "தப்பு நடக்கக்கூடாது என்று அடிக்கவில்லை, தப்பு நடக்கனும், அதை நாங்க மட்டும் தான் செய்யனும்'' என்ற பஞ்ச் வசனத்துடன் பட்டாக்கத்தியை எடுத்து காண்பிக்கிறார்கள். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காயலார் மேடு பகுதியைச் சேர்ந்த 3 பேரை பிடித்தனர். அவர்கள் சமூகவலைதளத்தில் லைக்கிற்கு ஆசைப்பட்டு பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் செய்து சிக்கி உள்ளனர்.

    அவர்கள் மீது ஏற்கனவே எந்த குற்ற வழக்குகளும் இல்லாததால் அவர்களை போலீசார் எச்சரித்தனர். இந்த வீடியோவில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரும் இருப்பதாக தெரிகிறது. அவரை தேடிவருகிறார்கள்.

    • சுற்றியுள்ள கூட்டம் கை தட்டி சுவாதியை உற்சாகப்படுத்துவதையும் காண முடிகிறது.
    • சுவாதியின் நடனத்திற்காக அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    மேடைகள், கோவில்கள், முக்கிய நிகழ்ச்சிகள் என பல இடங்களில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் பெண்கள் நடனமாடுவதை பார்க்க முடியும். ஆனால் வாஷிங்டனில் உள்ள நினைவு சின்னம் முன்பு ஒரு பெண் பரத நாட்டியம் ஆடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    அதில் சுவாதி ஜெய்சங்கர் என்ற பெண் பாரம்பரிய முறைப்படி பரத நாட்டியம் ஆடுவதையும், அவரை சுற்றியுள்ள கூட்டம் கை தட்டி சுவாதியை உற்சாகப்படுத்துவதையும் காண முடிகிறது. அவரது இந்த நடன வீடியோ இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதை பார்த்த பயனர்கள் பலரும் சுவாதியின் நடனத்திற்காக அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • வேதிகா என்ற பெண் லிங்க்டு-இன் வலைதளத்தில் தன்னுடைய பழைய தோழிகளை தேடி உள்ளார்.
    • வேதிகாவின் பதிவு 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது.

    தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலை உள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் ஒரு பெண் தனது 15 வருட தோழியை தேடி பிடித்துள்ளார். வேதிகா என்ற பெண் லிங்க்டு-இன் வலைதளத்தில் தன்னுடைய பழைய தோழிகளை தேடி உள்ளார்.

    அப்போது 15 வருடத்திற்கு முன்பு தன்னுடன் நெருங்கிய தோழியாக இருந்த பர்னாளி என்ற தோழியை வலைதளம் வாயிலாக கண்டறிந்து அவருடன் ஒன்று சேர்ந்ததை டுவிட்டர் வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். மேலும் லிங்க்டு-இன் வலைதளத்தில் தனது தோழியுடன் பேசிய ஸ்கிரீன் ஷாட்டை இணைத்து, என்னுடைய சிறுவயது தோழியுடன் 15 ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்துள்ளோம் என்ற வாசகங்களையும் அவர் இணைத்துள்ளார். வேதிகாவின் இந்த பதிவு 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது.

    • மணிப்பூரில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • சமூக வலைதளங்களில் வெளியாகும் அதிகார பூர்வமற்ற வதந்தியான தகவல்கள் பெரும் வன்முறை ஏற்பட வழிவகுக்கின்றன.

    புதுடெல்லி:

    மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கலவரம், தீவைப்பு, வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. குகி பழங்குடி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி மானபங்கம் செய்தபடி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதன் தொடர்ச்சியாக மணிப்பூரில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சமூக வலைதள பயன்பாடும் ஒரு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    சமூக வலைதளங்களில் வெளியாகும் அதிகார பூர்வமற்ற வதந்தியான தகவல்கள் பெரும் வன்முறை ஏற்பட வழிவகுக்கின்றன.

    இதை தொடர்ந்து மணிப்பூரில், "பிரிவினைவாத, தேசவிரோத, வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரல்களை" ஊக்குவிக்கும் எந்தவொரு சமூகவலைதள குழுக்களில் இருந்தும் வெளியேறுமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து அரசு துறைகளும் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மாநில உள்துறை ஆணையர் ரஞ்சித்சிங் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    • சில வசனங்களை சேர்த்து அவர்கள் வெளியிட்ட அந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மெலட்டூர் போலீசார், முகம்மது ரியாஸ் உள்ளிட்ட 5 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் அதிக லைக் பெறுவதற்காக, அதில் கணக்கு வைத்திருக்கும் பலர் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுகின்றனர். அதிக லைக் வாங்குவதற்காக சிலர் பிரச்சினைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு, சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

    அதுபோன்ற ஒரு நிகழ்வு கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொடு வன்னிக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் முகம்மது ரியாஸ்(வயது25), முகம்மது ஹலாஸ்(22) சலீம்(20), முகம்மது ஜாசிம்(19), சல்மானில் பாரிஸ்(19). இவர்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கணக்கு வைத்துள்ளனர்.

    அதில் வித்தியாசமாக வீடியோ வெளியிட்டு அதிக லைக்குகளை வாங்க திட்டமிட்ட அவர்கள், மலப்புரம் போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டு வீசுவது போன்றும், அதில் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனம் தீப்பிடித்து எரிவது போன்றும், போலீஸ் நிலையம் சேதமடைவது போலவும் காட்சியை உருவாக்கி இன்ஸ்டாகிராம் மற்றும் யு-டியூப்பில் பதிவிட்டனர்.

    விசுவல் எபக்ட் மற்றும் சில வசனங்களை சேர்த்து அவர்கள் வெளியிட்ட அந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த மெலட்டூர் போலீசார், முகம்மது ரியாஸ் உள்ளிட்ட 5 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். சமூக வலைதளங்களில் அதிக லைக்குகள் வாங்குவதற்காகவே அவ்வாறு வீடியோவை உருவாக்கி, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்தது அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களின் மீது வன்முறையை தூண்டுதல், சமூக வலைதளங்கள் மூலம் காவல்துறையை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. பின்பு 5 வாலிபர்களையும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

    ×