search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கியாஸ் சிலிண்டர்"

    • கியாஸ் ஏஜென்சியில் வேலை செய்யும் ஊழியர் சிலிண்டரை நுகர்வோர் வீட்டிற்கு கொண்டு வந்தார்.
    • கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபுரத்தை சேர்ந்த நுகர்வோர் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி அங்குள்ள கியாஸ் ஏஜென்சியில் சிலிண்டர் பதிவு செய்து இருந்தார்.

    கியாஸ் ஏஜென்சியில் வேலை செய்யும் ஊழியர் சிலிண்டரை நுகர்வோர் வீட்டிற்கு கொண்டு வந்தார். அப்போது ஊழியர் கியாஸ் விலையை விட ரூ.30 கூடுதலாக கொடுக்க வேண்டும் என நுகர்வோரிடம் கேட்டார்.

    அதற்கு நுகர்வோர் ரூ.30 கூடுதலாக தர முடியாது என கூறியதால் ஊழியர் மீண்டும் கியாஸ் சிலிண்டரை ஏஜென்சிக்கு கொண்டு சென்றார்.

    இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் இது குறித்து நுகர்வோர் குடிமை பொருள் வழங்கல் அலுவலரிடம் புகார் தெரிவித்தார். அங்கு இருந்த அதிகாரிகள் கூடுதல் கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஏஜென்சியிலிருந்து சிலிண்டர் வழங்கப்படும் என கூறி வேறு ஒரு ஏஜென்சிக்கு நுகர்வோர் பெயரை மாற்றினார்.

    இதனால் ஒரு வாரத்திற்கு மேல் கியாஸ் சிலிண்டர் இல்லாமல் சமையல் செய்ய முடியாமல் அவதி அடைந்த நுகர்வோர் இது குறித்து நுகர்வோர் ஆணையத்தில் புகார் செய்தார். நுகர்வோர் ஆணைய உறுப்பினர் ஸ்ரீ லதா விசாரணை நடத்திய போது, நுகர்வோரிடம் கூடுதல் பணம் கேட்ட ஊழியரை வேலையில் இருந்து நீக்கி விட்டதால் வழக்கை கைவிட வேண்டுமென தெரிவித்தனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் நுகர்வோரிடம் சிலிண்டர் விலை விட கூடுதலாக பணம் கேட்டது உங்கள் ஏஜென்சியை சேர்ந்த ஊழியர்.

    அதனால் அவர் செய்த குற்றத்திற்கு நீங்களே பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணைய உறுப்பினர் ஸ்ரீ லதா உத்தரவு பிறப்பித்தார்.

    • பழைய பாளையம் பகவதியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் ஆதிமூர்த்தி (வயது65). இவர் அப்பகுதியில் அங்காளம்மன் கோவில் பூசாரியாக உள்ளார்.
    • சிலிண்டரின் கேஸ் டியூப் வழியாக கேஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பழைய பாளையம் பகவதியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் ஆதிமூர்த்தி (வயது65). இவர் அப்பகுதியில் அங்காளம்மன் கோவில் பூசாரியாக உள்ளார். இவரது மனைவி அமராவதி(40). இவர் நேற்று இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிரு ந்தார்.

    அப்போது சிலிண்டரின் கேஸ் டியூப் வழியாக கேஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆதிமூர்த்தி, அமராவதி, மகள் சுமதி(15), மகன் பிரவீன்குமார்(12)ஆகிய 4 பேரின் கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

    நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பின் அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • 7-வது முறையாக வணிகத்திற்கான கியாஸ் சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
    • வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை :

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோலிய பொருட்களின் விலைகளை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு மாற்றியமைத்து வருகிறது. அதனடிப்படையில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறையும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து சமையல் கியாஸ் விலை உயர்ந்து வருவதால் வணிகர்களும், வீட்டு உபயோக சிலிண்டர் உயர்த்தும் போது இல்லத்தரசிகளும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதேபோல தான் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையும் தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நவம்பர் மாதத்துக்கான சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் நேற்று அறிவித்தனர்.

    அதன்படி வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், வணிக பயன்பாட்டிற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் கட்டணம் ரூ.116.50 குறைக்கப்பட்டு உள்ளது என்று விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

    19 கிலோ எடை கொண்ட வணிகத்திற்கான கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை கடந்த மாதம் ரூ.2009.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 116.50 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.1,893-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே மாதத்துக்கு பிறகு தொடர்ந்து 7-வது முறையாக தற்போது வணிகத்திற்கான கியாஸ் சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையானது தொடர்ந்து 4 மாதமாக எந்த விதமாற்றமும் செய்யப்படாமல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் ரூ.1,068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ரஷியா-உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்தது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியிருக்கிறது. இதனாலேயே தற்போது பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றமின்றி தொடருகிறது என்று எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கியாஸ் சிலிண்டருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே ஆயுட்காலம் உண்டு.
    • காலாவதியான சிலிண்டரில் கியாசை மீண்டும், மீண்டும் நிரப்பி வினியோகம் செய்து வருகின்றன.

    காலாவதியான கியாஸ் சிலிண்டரை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். இதில் காலாவதியான சிலிண்டர் என்பது என்னவென்றால் நமது வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் கியாஸ் சிலிண்டருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே ஆயுட்காலம் உண்டு.

    ஆனால் அதை மாற்றாமல் சில கியாஸ் நிறுவனங்கள் காலாவதியான சிலிண்டரில் கியாசை மீண்டும், மீண்டும் நிரப்பி வினியோகம் செய்து வருகின்றன. இதனால் கியாஸ் கசிவு ஏற்பட்டு ஆபத்தை விளைவிக்கும். அதனை கண்டுபிடிப்பது ரொம்ப சுலபமானது. சிலிண்டரில் மேல் பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கும். அது கழுத்து பகுதியாகும்.

    அதில் ஒரு கம்பியின் உள்பகுதியில் காலாவதியாகும் மாதம் ஆங்கிலத்திலும், வருடம் எண்களிலும் பொறிக்கப்பட்டிருக்கும். அதாவது ஆங்கிலத்தில் ஏ.பி.சி.டி. என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 'ஏ' என்றால் மார்ச் மாதம் (முதல் காலாண்டு), 'பி' என்றால் ஜூன் மாதம் (இரண்டாவது காலாண்டு), 'சி' என்றால் செப்டம்பர் மாதம் (மூன்றாவது காலாண்டு), 'டி' என்றால் டிசம்பர் மாதம் (நான்காவது காலாண்டு) ஆகும். உதாரணத்திற்கு ஏ- 16 என்று சிலிண்டரில் பொறிக்கப்பட்டிருந்தால் மார்ச்-2016 என்பதை குறிக்கிறது. இதை வைத்து காலாவதியான சிலிண்டரை கண்டுபிடித்துவிடலாம்.

    • டெல்லியில் ரூ.1885-க்கு விற்பனை இருந்த வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.1859 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
    • கொல்கத்தாவில் ரூ.1959 ஆகவும், மும்பையில் ரூ.1811.50 ஆகவும் விலை இருக்கிறது.

    புதுடெல்லி:

    வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

    ரஷியா-உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியதையடுத்து அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் குறைய தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.25.50 குறைத்துள்ளன.

    சென்னையில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.36 குறைந்துள்ளது. ரூ.2045-ல் இருந்து தற்போது ரூ.2009 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் ரூ.1885-க்கு விற்பனை இருந்த வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.1859 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் ரூ.1959 ஆகவும், மும்பையில் ரூ.1811.50 ஆகவும் விலை இருக்கிறது.

    கடந்த மே மாதம் 19-ந்தேதிக்கு பிறகு வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 6-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் எதுவுமில்லை.

    • கடந்த 2 நாட்களாக கியாஸ் சிலிண்டர் முன்பதிவு மற்றும் வினியோக முறையில் திடீர் கோளாறு ஏற்பட்டது.
    • இந்திய எண்ணெய் நிறுவனம், ஐபிஎம் மற்றும் ஆரக்கிளுடன் இணைந்து கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    சென்னை:

    இந்திய எண்ணெய் நிறுவனம் ஐபிஎம் என்ற முறையில் இண்டேன் வாடிக்கையாளர்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான முன்பதிவுகளை பெற்று சிலிண்டர்களை வினியோகித்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக முன்பதிவு மற்றும் வினியோக முறையில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து இந்திய எண்ணெய் நிறுவனம், ஐபிஎம் மற்றும் ஆரக்கிளுடன் இணைந்து கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி, 77189-55555 என்ற எண்ணுக்கு குரல் பதிவு மூலம் முன்பதிவு செய்யலாம். அல்லது 84549-55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் அல்லது இந்த எண்ணில் நேரடியாக பேசியும், 75888-88824 வாட்ஸ்-அப் மூலமும், வினியோகஸ்தர்களின் தொலைபேசி எண் மற்றும் நேரடியாக சென்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் முன்பதிவு பதிவு செய்யப்படும். முடிந்தவரை விரைவில் சிலிண்டரை உங்களுக்கு வழங்குவோம். விரைவில் சிக்கலைத் தீர்த்துவிடுவோம் என்று நம்புகிறோம்,

    இதனால் நாளை (இன்று) முதல் உங்கள் அழைப்புகளை ஏற்று வழக்கம் போல் சேவை செய்யப்படும். திடீரென கணினி செயலிழப்பால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முதன்மை பொதுமேலாளர் சந்தீப் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

    • சம்பவத்தன்று சுபாசின் மனைவி இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது.
    • தீயணைப்பு நிலையத்திற்கு அவர் தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை அருகே உள்ள எடச்சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். சம்பவத்தன்று சுபாசின் மனைவி இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு அவர் தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.

    • ஆண்டுகளுக்கு ஒருமுறை கியாஸ் சிலிண்டர் பரிசோதிக்கப்படுகிறது.
    • சிலிண்டர் சப்ளை செய்யும் ஏஜென்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

    உடுமலை :

    இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் வீடுகள், கடைகள், ஓட்டல்கள், என வர்த்தக நிறுவனங்களுக்கு கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்து வருகின்றன.அவ்வகையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் இணைப்புகள் சரியாக உள்ளதா என, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதிக்கப்படுகிறது.

    இப்பணியை, சிலிண்டர் சப்ளை செய்யும் ஏஜென்சிகள் மேற்கொண்டு வருகின்றன.அதன்படி ஏஜென்சி ஊழியர்கள், நுகர்வோர்களின் வீடுகளுக்குச்சென்று சிலிண்டர்களில் உள்ள வாஷர், ரெகுலேட்டர், ரப்பர் குழாய் இணைப்பை பரிசோதிக்கின்றனர். அப்போது ஏதேனும் பிரச்னை கண்டறியப்பட்டால் அவற்றை சீரமைக்கின்றனர்.சிலிண்டர் அகற்றும் போதும் பொருத்தும் போதும் கவனிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, சரியான முறையில் ரெகுலேட்டரை எவ்வாறு பொருத்துவது, அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நுகர்வோரிடம் விளக்கிக்கூறுகின்றனர்.அவ்வகையில், உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பரிசோதனை, உபகரணம் மாற்றுதல் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து நுகர்வோர்கள் கூறியதாவது:-பரிசோதனைக்கு, ஜிஎஸ்டி சேர்த்து 236 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வீட்டுக்கு வரும் ஊழியர்கள் சிலிண்டர் இணைப்பு முறையாக உள்ளதா, ரப்பர் குழாய்கள் சரியாக உள்ளதா என முறையாக ஆய்வு நடத்துவதும் கிடையாது.சிலர் ரப்பர் குழாய் சேதமடைந்துள்ளதாகக்கூறி மாற்ற முற்படுகின்றனர். இதனால் பெண்களிடையே பீதி கிளம்புவதால் அதனை மாற்ற முற்படுகின்றனர்.அதற்கு 1,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்துள்ளது. ஊழியர்கள் பெரும்பாலும் பணத்தை மட்டும் வாங்கிச்செல்ல முற்படுகின்றனர். எனவே நுகர்வோர் விருப்பத்தின்பேரில் மட்டுமே ஏஜென்சிகள், கியாஸ் சிலிண்டரை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு மாறாக கட்டாயப்படுத்தக் கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கியாஸ் சிலிண்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
    • டீக்கடையில் கடந்த 17-ந் தேதி கியாஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் சபிக்.இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது டீக்கடையில் கடந்த 17-ந் தேதி கியாஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடை ஊழியர்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.8 பேரும் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்த சசிதரன், சுப்பையா ஆகிய இருவர் பலியானார்கள். 

    மீதமுள்ள 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பள்ளிவிளையை சேர்ந்த பிரவீன் (வயது 25) என்பவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரவீன் நேற்று சிகிச்சை பலன்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கியாஸ் சிலிண்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

    • தோட்டத்து வீட்டில் இருந்த சிலிண்டர் மற்றும் செல்போனையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ளபொங்கலூர் கண்டியன் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாரி பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 30). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது கடையில் வைத்திருந்த சிலிண்டரை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். அது போல் அதே பகுதியை சேர்ந்த சரசாத்தாள் (65 ) என்பவரது தோட்டத்து வீட்டில் இருந்த சிலிண்டர் மற்றும் செல்போனையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து சதீஷ் மற்றும் சரசாத்தாள் ஆகியோர் அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று காலையில் கடை திறக்க வந்தபோது தான் இந்த விபத்தில் சிக்கினார்
    • பலியான சசிதரன் தீ விபத்து நடந்த கடை அருகே டயர் கடை நடத்தி வந்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதி புரம் மேம்பாலத் துக்கு கீழ் டீக்கடை நடத்தியவர் சபிக்.

    இந்த டீக்கடையில் கடந்த கடந்த 17-ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கடை ஊழியர்கள் வெளியே ஓடிவந்தனர். தீ பரவியதால் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. அப்போது அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொது மக்கள் மீதும் தீ பிடித்தது.

    இந்த தீ விபத்தில் கடை ஊழியர்கள் மூசா, பிரவீன், தக்கலை ராமன், பறக்கையைச் சேர்ந்த சசிதரன் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    படுகாயம் அடைந்தவர் கள் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.50 ஆயிரம் வழங்க உத்தர விட்டார்

    இதையடுத்து கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ் ஆகியோர் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் ரூ.50ஆயிரம் நிதி உதவி வழங்கினார்கள்.

    தீ விபத்து குறித்து வடசேரி போலீசார் கடை ஊழியர் மூசா மீது 2பலியான சசிதரன் தீ விபத்து நடந்த கடை அருகே டயர் கடை நடத்தி வந்தார்.ந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சையில் இருந்த சசிதரன் (வயது 65) சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.பலியான சசிதரன் தீ விபத்து நடந்த கடை அருகே டயர் கடை நடத்தி வந்தார். அவர் சம்பவத்தன்று காலையில் கடை திறக்க வந்தபோது தான் இந்த விபத்தில் சிக்கினார் என்பது வேதனையானது.

    • கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்த போது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதையடுத்து தீ பிடித்தது
    • கவன குறைவாக தீயை பற்றவைத்து தீ விபத்து ஏற்படுதல் ஆகிய இரண்டு பிரிவுகள் வழக்கு பதிவு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பெரு விளை பகுதியைச் சேர்ந்தவர் சபிக் (வயது 37) இவர் பார்வதிபுரம் மேம்பா லத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் தூத்துக்குடி நடுத்தெருவை சேர்ந்த மூசா (47) என்பவர் வடை மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.மேலும், வடசேரி பெரிய ராசிங்கன் தெருவை சேர்ந்த சேகர் (52) வெட்டூர்ணி மடத்தைச் சேர்ந்த பிரவீன் (25) ஆகியோரும் வேலை செய்து வருகிறார்கள்.

    நேற்று காலையில் டீக்கடையில் மூன்று பேரும் இருந்தனர். அப்போது மூசா கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்த போது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதையடுத்து தீ பிடித்தது. இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.அதற்குள் டீ கடை முழுவதும் எரிந்து கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதில் கடை ஊழியர்கள் மூசா, சேகர்,பிரவீன் மற்றும் சுசீலா,சசிதரன், சுதா, பக்ருதீன், சுப்பையா ஆகிய எட்டு பேரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயம் அடைந்த 8 பேர் குடும்பத்தி ற்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்‌. இதை தொடர்ந்து கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ் ஆகியோர் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் ரூ. 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்கள்.

    கியாஸ் விபத்திற்கான காரணம் குறித்து வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கவனக்குறைவாக தீயை பற்ற வைத்ததால் தான் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து கடை டீ மாஸ்டர் சேகர் கொடுத்த புகாரின் பேரில் வடை மாஸ்டர் மூசா மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 285, 337 ஆகிய இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கவன குறைவாக தீயை பற்றவைத்து தீ விபத்து ஏற்படுதல் ஆகிய இரண்டு பிரிவுகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×