என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
பல்லடம் அருகே கியாஸ் சிலிண்டர்கள் திருட்டு
- தோட்டத்து வீட்டில் இருந்த சிலிண்டர் மற்றும் செல்போனையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ளபொங்கலூர் கண்டியன் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாரி பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 30). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது கடையில் வைத்திருந்த சிலிண்டரை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். அது போல் அதே பகுதியை சேர்ந்த சரசாத்தாள் (65 ) என்பவரது தோட்டத்து வீட்டில் இருந்த சிலிண்டர் மற்றும் செல்போனையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து சதீஷ் மற்றும் சரசாத்தாள் ஆகியோர் அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story