search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கியாஸ் சிலிண்டர் விலை"

    • டெல்லியில் ரூ.1885-க்கு விற்பனை இருந்த வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.1859 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
    • கொல்கத்தாவில் ரூ.1959 ஆகவும், மும்பையில் ரூ.1811.50 ஆகவும் விலை இருக்கிறது.

    புதுடெல்லி:

    வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

    ரஷியா-உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியதையடுத்து அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் குறைய தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.25.50 குறைத்துள்ளன.

    சென்னையில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.36 குறைந்துள்ளது. ரூ.2045-ல் இருந்து தற்போது ரூ.2009 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் ரூ.1885-க்கு விற்பனை இருந்த வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.1859 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் ரூ.1959 ஆகவும், மும்பையில் ரூ.1811.50 ஆகவும் விலை இருக்கிறது.

    கடந்த மே மாதம் 19-ந்தேதிக்கு பிறகு வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 6-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் எதுவுமில்லை.

    ×