search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கியாஸ் சிலிண்டர் இணைப்பு ஆய்வுக்கு கூடுதல் கட்டணம் - பொதுமக்கள் புகார்
    X

    கோப்புபடம்.

    கியாஸ் சிலிண்டர் இணைப்பு ஆய்வுக்கு கூடுதல் கட்டணம் - பொதுமக்கள் புகார்

    • ஆண்டுகளுக்கு ஒருமுறை கியாஸ் சிலிண்டர் பரிசோதிக்கப்படுகிறது.
    • சிலிண்டர் சப்ளை செய்யும் ஏஜென்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

    உடுமலை :

    இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் வீடுகள், கடைகள், ஓட்டல்கள், என வர்த்தக நிறுவனங்களுக்கு கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்து வருகின்றன.அவ்வகையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் இணைப்புகள் சரியாக உள்ளதா என, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதிக்கப்படுகிறது.

    இப்பணியை, சிலிண்டர் சப்ளை செய்யும் ஏஜென்சிகள் மேற்கொண்டு வருகின்றன.அதன்படி ஏஜென்சி ஊழியர்கள், நுகர்வோர்களின் வீடுகளுக்குச்சென்று சிலிண்டர்களில் உள்ள வாஷர், ரெகுலேட்டர், ரப்பர் குழாய் இணைப்பை பரிசோதிக்கின்றனர். அப்போது ஏதேனும் பிரச்னை கண்டறியப்பட்டால் அவற்றை சீரமைக்கின்றனர்.சிலிண்டர் அகற்றும் போதும் பொருத்தும் போதும் கவனிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, சரியான முறையில் ரெகுலேட்டரை எவ்வாறு பொருத்துவது, அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நுகர்வோரிடம் விளக்கிக்கூறுகின்றனர்.அவ்வகையில், உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பரிசோதனை, உபகரணம் மாற்றுதல் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து நுகர்வோர்கள் கூறியதாவது:-பரிசோதனைக்கு, ஜிஎஸ்டி சேர்த்து 236 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வீட்டுக்கு வரும் ஊழியர்கள் சிலிண்டர் இணைப்பு முறையாக உள்ளதா, ரப்பர் குழாய்கள் சரியாக உள்ளதா என முறையாக ஆய்வு நடத்துவதும் கிடையாது.சிலர் ரப்பர் குழாய் சேதமடைந்துள்ளதாகக்கூறி மாற்ற முற்படுகின்றனர். இதனால் பெண்களிடையே பீதி கிளம்புவதால் அதனை மாற்ற முற்படுகின்றனர்.அதற்கு 1,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்துள்ளது. ஊழியர்கள் பெரும்பாலும் பணத்தை மட்டும் வாங்கிச்செல்ல முற்படுகின்றனர். எனவே நுகர்வோர் விருப்பத்தின்பேரில் மட்டுமே ஏஜென்சிகள், கியாஸ் சிலிண்டரை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு மாறாக கட்டாயப்படுத்தக் கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×