search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயணைப்பு நிலையம்"

    • துரை அண்ராயநல்லூர் பகுதியில் சந்தைதோப்பு அருகே ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்து வருகிறார்.
    • 50 சென்ட் மதிப்பிலான கரும்பு தோட்டம் எரிந்து சாம்பலானது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே தி. புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துரை. விவசாயி, இவர் அண்ராயநல்லூர் பகுதியில் சந்தைதோப்பு அருகே ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்து வருகிறார். நேற்று மாலை மின் கசிவு காரணமாக இவரது கரும்பு தோட்டம், திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்குள் வராததால் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். 50 சென்ட் மதிப்பிலான கரும்பு தோட்டம் எரிந்து சாம்பலானது. மின் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • தண்ணீரில் ஒரு மயில் விழுந்து வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடியது.
    • 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி பெண் மயிலை உயிருடன் மீட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சூளாங்குறிச்சி கிராமத்தில் விவசாய கிணற்றில் உள்ள தண்ணீரில் ஒரு மயில் விழுந்து வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடியது. இது குறித்து அப்பகுதி மக்கள் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராஜா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி பெண் மயிலை உயிருடன் மீட்டனர். இதையடுத்து அந்த மயிலை கள்ளக்குறிச்சி வனத்துறை வனவர் பாலு, மற்றும் வனக்காவலர் ஜெயபால் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    • 56 தீயணைப்பு வீரர்கள் தீ விபத்தில் பலியாகினர்.
    • தீ தொண்டு நாளாக வருகிற ஏப்ரல்- 14 முதல் 20-ந்தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது மும்பை விக்டோரியா துறைமுகத்தில், கடந்த 1944-ம் ஆண்டு, வெடி மருந்து கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க சென்ற மும்பை தீயணைப்பு துறையை சேர்ந்த 56 தீயணைப்பு வீரர்கள் அந்த தீ விபத்தில் பலியாகினர்.இவர்கள் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந் தேதி உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. இது இந்தியா முழுவதும் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தீ தொண்டு நாளாக வருகிற ஏப்ரல்- 14 முதல் 20-ந்தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி பல்லடம் தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நிலைய அலு வலர் முத்துக்கு மாரசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் நினைவு ஸ்தூபி போல தீயணைப்பு உபகர ணங்களை வைத்து அதற்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்த ப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி ரெயின்போ சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், சுந்தர்ராஜன், மற்றும் தீயணைப்புபடை வீரர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் வருகிற 20-ந் தேதி வரை தீத்தொண்டு வாரம் அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி தீ பாதுகாப்பை அறிவோம், உற்பத்தியை அதிகரி ப்போம் என்ற தலைப்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள், அலுவ லகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு, துண்டு பிரசுரம் வினியோகிக்கப்ப டும் என்று தீயணை ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது.
    • தீயணைப்பு நிலையத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து தீயணைப்பு நிலையத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், சிவகங்கை மாவட்ட அலுவலர் சத்திய கீர்த்தி, உதவி அலுவர் தாமோதரன், பேரூராட்சித் தலைவர் நஜுமுதீன், நிலைய அலுவலர் பிரகாஷ், குமரேசன், பேரூராட்சி அலுவலர் கோபிநாத், பேராசிரியர் ஆபிதீன், ஒன்றிய துணைச்செயலர் சிவனேசன், துணைத்தலைவர் இப்ராகிம், இளைஞரணி பைரோஸ்கான், தகவல் தொழில் நுட்பஅணி கண்ணன், அழகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • தமிழக முதல்-அமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • கலெக்டர் வினீத் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளியில் இன்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை யில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஊத்துக்குளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார். இந்த தீயணைப்பு மீட்பு நிலையத்தில் 18 தீயணைப்பு வீரர்களும் ஒரு தலைமை அதிகாரியும் செயல்படுவார்கள்.

    நிகழ்ச்சியில் கோவை மண்டல இணை இயக்குனர் சத்யநாராயணன், மாவட்ட அலுவலர் காங்கேய பூபதி மற்றும் அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி தீ விபத்துக்கள் மற்றும் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
    • நேற்று கபிலர் மலையில் உள்ள துணை மின் நிலையப் பகுதி, சிறுக்கிணற்றுப்பாளையம் செல்லும் பகுதிகளில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி தீ விபத்துக்கள் மற்றும் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. அவ்வாறு தீ விபத்து ஏற்படும்போது கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் பகுதி யில்உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து இப்பகுதிக்கு தீயணைப்பு வாகனம் கால தாமதமாக வருவதற்குள் தீ முற்றிலுமாக எரிந்து பொருட்கள் நாசமாகி விடுகின்றன.

    தீ விபத்துக்கள் ஏற்பட்டு உடனடியாக தீ விபத்தை தடுக்க இயலவில்லை. அதனால் பரமத்தி வேலூர், கபிலர்மலை, ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட ஏதோ ஒரு இடத்தில் தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டும். தீ விபத்துக்கள் நடைபெறும் போது உடனடியாக சென்று தீயை அணைக்க அது ஏதுவாக இருக்கும். இப்பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என பரமத்திவேலூர் எம்.எல்.ஏ. என்ஜினீயர் சேகர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை விடுத்திருந்தார்.

    மேலும் சம்பந்தப்பட்ட தீயணைப்பு மேல் அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.அதன் அடிப்படையில் நேற்று கபிலர் மலையில் உள்ள துணை மின் நிலையப் பகுதி, சிறுக்கிணற்றுப்பாளையம் செல்லும் பகுதிகளில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது சம்பதமாக என்ஜினீயர் சேகர் எம்.எல்.ஏ., நாமக்கல் மாவட்ட தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர், வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெரிய சோளிபாளையம் ஊராட்சி தலைவர் பெரியசாமி மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • திருச்சி கோர்ட்டு வளாகம் அருகே மாவட்ட தீயணைப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
    • தீ விபத்தின்போது புகைமூட்டத்துக்குள் சென்று தீயை அணைக்க பயன்படுத்தும் சிறிய ஆக்சிஜன் சிலிண்டருக்கு, பெரிய சிலிண்டரில் இருந்து ஆக்சிஜன் நிரப்பும் பணியில் தீயணைப்பு வீரர் பிரசாந்த் ஈடுபட்டார்.

    திருச்சி:

    திருச்சி கோர்ட்டு வளாகம் அருகே மாவட்ட தீயணைப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்திலேயே கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையம் அமைந்துள்ளது. இங்கு அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என்று 30-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் அனைவரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, தீ விபத்தின்போது புகைமூட்டத்துக்குள் சென்று தீயை அணைக்க பயன்படுத்தும் சிறிய ஆக்சிஜன் சிலிண்டருக்கு, பெரிய சிலிண்டரில் இருந்து ஆக்சிஜன் நிரப்பும் பணியில் தீயணைப்பு வீரர் பிரசாந்த் ஈடுபட்டார். அப்போது, அந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.

    இதில் தீயணைப்பு வீரர் பிரசாந்த், தீயணைப்பு நிலைய அதிகாரி சரவணன் ஆகியோருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். சிலிண்டர் வெடித்த சத்தம் அருகில் உள்ள கோர்ட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் பலரும் வெடிகுண்டு வெடித்ததாக கருதி ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீயணைப்பு நிலையத்தில் சிலிண்டர் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சம்பவத்தன்று சுபாசின் மனைவி இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது.
    • தீயணைப்பு நிலையத்திற்கு அவர் தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை அருகே உள்ள எடச்சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். சம்பவத்தன்று சுபாசின் மனைவி இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு அவர் தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.

    • ஆண்டிமடம் தாலுகாவில் தீயணைப்பு நிலையம் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
    • ஆண்டிமடத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி பொது மருத்துவமனையாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவமனை அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    அரியலூர் ;

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஊராட்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்ட அரங்கில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் மருதமுத்து தலைமையில் கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஒன்றிய துணைத் தலைவர் வைத்தி தேன்மொழி முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆண்டிமடம் தாலுக்கா உருவாக்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்தும் ஒரு லட்சம் 25ஆயிரம் வாக்காளர்கள் உள்ள தாலுகாவில் மக்கள் பயன்பெறும் விதமாக ஆண்டிமடம் தாலுகாவில் தீயணைப்பு நிலையம் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்டிமடத்தில் தாலுக்கா நீதிமன்றம் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி பொது மருத்துவமனையாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவமனை அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், அழகாபுரத்தில் இருந்து ஓலையூர் செல்லும் சாலையை பேருந்து போக்குவரத்து வழித்தடம் என்பதால் இந்த இந்த சாலையை ஊராட்சி ஒன்றிய இதயத்திற்கு உட்பட்ட சாலையை நெடுஞ்சாலைத் துறையில் ஒப்படைத்து நெடுஞ்சாலை துறை மூலம் தரமான சாலை போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒவ்வொரு கவுன்சிலரும் அவர்கள் உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பேரிடர் நேரங்களில் தீயணைப்பு துறையினரின் உதவிகளை பெறுவது, குறித்து விளக்கி பயிற்சி அளித்தனர்.
    • தாசில்தார் தெய்வசுந்தரி முன்னிலை வகித்தார்

    சுரண்டை:

    சுரண்டை தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி வீ.கே.புதூர் அருந்தவபிராட்டி குளத்தில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு தாசில்தார் தெய்வசுந்தரி முன்னிலை வகித்தார். ‌சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து செல்வன், தலைமையில் போக்குவரத்து அலுவலர் பாலச்சந்தர், சிறப்பு நிலைய அலுவலர் ரவீந்திரன், சாமி, உலகநாதன், குமார் பொன்ராஜ் ஆகியோர் தீயணைப்பு துறையின் பணிகள் தீவிபத்து, வெள்ளம், கட்டிட இடிபாடுகள் மற்றும் பேரிடர் நேரங்களில் தீயணைப்பு துறையினரின் உதவிகளை பெறுவது, குறித்து விளக்கி பயிற்சி அளித்தனர்.

    ஆர்.ஐ. ராசாத்தி, கண்ணன், கிராம நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன், கிராம உதவியாளர் முருகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×