

கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே சூளாங்குறிச்சி கிராமத்தில் விவசாய கிணற்றில் உள்ள தண்ணீரில் ஒரு மயில் விழுந்து வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடியது. இது குறித்து அப்பகுதி மக்கள் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராஜா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி பெண் மயிலை உயிருடன் மீட்டனர். இதையடுத்து அந்த மயிலை கள்ளக்குறிச்சி வனத்துறை வனவர் பாலு, மற்றும் வனக்காவலர் ஜெயபால் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.