என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊத்துக்குளி"

    • ஓட்டலில் கடந்த 14 ந் தேதி 2வாலிபர்கள் உணவு அருந்த சென்றுள்ளனர்.
    • சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 14 ந்தேதி 2வாலிபர்கள் உணவு அருந்த சென்றுள்ளனர். அந்த ஓட்டலில் உள்ள ராமாத்தாள் என்பவரிடம் உணவை பார்சல் செய்யுமாறு கூறிய வாலிபர்கள் திடீரென ராமாத்தாள் அணிந்திருந்த 2பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

    இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்தனர். இந்தநிலையில் நகைபறிப்பில் ஈடுபட்ட தேனி மாவடம் ஆண்டிப்பட்டி தங்கம்மாள்புரத்தை சேர்ந்த வேல்முருகன் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி குலவநாயக்கன்பட்டியை சேர்ந்த வேலு துரை ஆகிய 2பேரையும் ஊத்துக்குளி போலீசார் கைது செய்தனர்.

    • செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.


    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வருகிற 10 -ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா். மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரம் வருமாறு:-

    ஊத்துக்குளி துணை மின் நிலையம்:

    ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ், விஜி புதூா், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்ப்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என். பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூா், தொட்டியவலசு, வயக்காட்டுபுதூா், கத்தாங்கன்னி.

    செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடாபாளையம், பள்ளபாளையம், நீலாக்கவுண்டம்பாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாளபதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு, செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • தமிழக முதல்-அமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • கலெக்டர் வினீத் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளியில் இன்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை யில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஊத்துக்குளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார். இந்த தீயணைப்பு மீட்பு நிலையத்தில் 18 தீயணைப்பு வீரர்களும் ஒரு தலைமை அதிகாரியும் செயல்படுவார்கள்.

    நிகழ்ச்சியில் கோவை மண்டல இணை இயக்குனர் சத்யநாராயணன், மாவட்ட அலுவலர் காங்கேய பூபதி மற்றும் அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • பஸ்கள் ஊத்துக்குளிக்குள் வராமல் நால் ரோடு கவுண்டம்பாளையம் வழியாக திருப்பூருக்கு சென்று விடுகிறது.
    • தனியார் மற்றும் அரசு பஸ்சுகளை வழிமறித்து ஊத்துக்குளிக்குள் வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் செங்கப்பள்ளியில் இருந்து ஊத்துக்குளி ஆர். எஸ் வழியாக திருப்பூருக்கு பஸ் சென்று வந்தது. இந்நிலையில் சில மாதங்களாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஊத்துக்குளிக்குள் வராமல் நால் ரோடு கவுண்டம்பாளையம் வழியாக திருப்பூருக்கு சென்று விடுகிறது.

    இதனால் ஊத்துக்குளி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தனியார் மற்றும் அரசு பஸ்சுகளை வழிமறித்து ஊத்துக்குளிக்குள் வர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து சில பஸ்கள் ஊத்துக்குளிக்குள் சென்றன. இந்த சம்பவம் மேலும் தொடருமானால் புகார் அளித்து போராட்டம் நடத்தப்படும் என தனியார் பஸ் டிரைவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தைப்பூச தேர் திருவிழா.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் பிரசித்தி பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி காலை சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு மேல் சாமி திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 6.30 மணிக்கு சுவாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 4 மணிக்கு மேல் திருத்தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27 -ந்தேதி பரிவேட்டை, 28-ந்தேதி இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சுவாமி உலா காட்சி நடைபெறும்.

    29-ந்தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக காலை 7 மணிக்கு மகா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், சாமி ரத ஆரோகணமும், காலை 10 மணிக்கு மேல் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    அன்று இரவு மகா தரிசனம் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். 30-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா உடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.

    ஊத்துக்குளியில் அடுத்தடுத்து 3 கடைகளில் பொருட்கள் திருட்டு போனது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கூலிப்பாளையம் நால் ரோட்டில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் இயங்கி வருகிறது.

    நேற்று நள்ளிரவு இங்கு வந்த மர்ம நபர்கள் வணிக வளாகத்தில் இருந்த ஸ்டூடியோ, பியூட்டி பார்லர், பேன்சி கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு வைக்கப்பட்டு இருந்த பணம், லேப்-டாப் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று விட்டனர். இன்று அதிகாலை கடையை திறக்க வந்த ஊழியர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு உடனடியாக தெரிய வில்லை.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊத்துக்குளி அருகே கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள புதுகாலனியை சேர்ந்தவர் சோமையப்பன். இவரது மனைவி விஜயலட்சுமி (56).

    இவர் தனது மகன் துரைராஜூடன் (28) மோட்டார் சைக்கிளில் பல்லக் கவுண்டன் பாளையத்திற்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலே பலியானார். துரைராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான விஜயலட்சுமி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து எற்பட்டதும் கார் டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×