தீயணைப்பு நிலையம் திறப்பு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது. தீயணைப்பு நிலையத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
தீயணைப்பு நிலையம் திறப்பு
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து தீயணைப்பு நிலையத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், சிவகங்கை மாவட்ட அலுவலர் சத்திய கீர்த்தி, உதவி அலுவர் தாமோதரன், பேரூராட்சித் தலைவர் நஜுமுதீன், நிலைய அலுவலர் பிரகாஷ், குமரேசன், பேரூராட்சி அலுவலர் கோபிநாத், பேராசிரியர் ஆபிதீன், ஒன்றிய துணைச்செயலர் சிவனேசன், துணைத்தலைவர் இப்ராகிம், இளைஞரணி பைரோஸ்கான், தகவல் தொழில் நுட்பஅணி கண்ணன், அழகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com