search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    காலாவதியான கியாஸ் சிலிண்டர்களை கண்டுபிடிப்பது எப்படி?
    X

    காலாவதியான கியாஸ் சிலிண்டர்களை கண்டுபிடிப்பது எப்படி?

    • கியாஸ் சிலிண்டருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே ஆயுட்காலம் உண்டு.
    • காலாவதியான சிலிண்டரில் கியாசை மீண்டும், மீண்டும் நிரப்பி வினியோகம் செய்து வருகின்றன.

    காலாவதியான கியாஸ் சிலிண்டரை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். இதில் காலாவதியான சிலிண்டர் என்பது என்னவென்றால் நமது வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் கியாஸ் சிலிண்டருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே ஆயுட்காலம் உண்டு.

    ஆனால் அதை மாற்றாமல் சில கியாஸ் நிறுவனங்கள் காலாவதியான சிலிண்டரில் கியாசை மீண்டும், மீண்டும் நிரப்பி வினியோகம் செய்து வருகின்றன. இதனால் கியாஸ் கசிவு ஏற்பட்டு ஆபத்தை விளைவிக்கும். அதனை கண்டுபிடிப்பது ரொம்ப சுலபமானது. சிலிண்டரில் மேல் பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கும். அது கழுத்து பகுதியாகும்.

    அதில் ஒரு கம்பியின் உள்பகுதியில் காலாவதியாகும் மாதம் ஆங்கிலத்திலும், வருடம் எண்களிலும் பொறிக்கப்பட்டிருக்கும். அதாவது ஆங்கிலத்தில் ஏ.பி.சி.டி. என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 'ஏ' என்றால் மார்ச் மாதம் (முதல் காலாண்டு), 'பி' என்றால் ஜூன் மாதம் (இரண்டாவது காலாண்டு), 'சி' என்றால் செப்டம்பர் மாதம் (மூன்றாவது காலாண்டு), 'டி' என்றால் டிசம்பர் மாதம் (நான்காவது காலாண்டு) ஆகும். உதாரணத்திற்கு ஏ- 16 என்று சிலிண்டரில் பொறிக்கப்பட்டிருந்தால் மார்ச்-2016 என்பதை குறிக்கிறது. இதை வைத்து காலாவதியான சிலிண்டரை கண்டுபிடித்துவிடலாம்.

    Next Story
    ×