search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "kitchen"

  • பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவிலின் முன்பு வர்த்தகர் கழகம் சார்பில் அன்னதான சமையல் கூடம் அமைக்கப்பட்டது.
  • விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

  பொன்னமராவதி

  பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவிலின் முன்பு வர்த்தகர் கழகம் சார்பில் அன்னதான சமையல் கூடம் அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா கணபதி ஹோமத்துடன் நடைபெற்றது.

  அதையடுத்து நடைபெற்ற திகுக்கார்த்திகை விழாவில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரணியர்க்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

  விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச்சார்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

  விழாவில் வர்த்தகர் கழகத்தலைவர் எஸ்.கே.எஸ்.பழனியப்பன், தேய்பிறை அஷ்டமி மற்றும் கார்த்தகை வழிபாட்டு குழு நிர்வாகிகள் ராம சேதுபதி, பி.பாஸ்கர்,எம்.குமரன், மணிகண்டன், முருகேசன், சதீஸ்குமார், எஸ்.பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை காரைகள் இடிந்து விழுந்தது.
  • நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆய்வு மேற்கொண்டனர்.

  சீர்காழி:

  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு துறையூர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 16 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

  மதிய உணவிற்காக சமையலர் கலா உணவு தயார் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளார்.

  அப்போது தலைமை ஆசிரியை அழைத்ததால் கலா சமையலறையை விட்டு வெளியே வந்துள்ளார் அந்த நேரம் திடீரென சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை காரைகள் இடிந்து விழுந்தது.

  இவ்விபத்தில் சமையலறையில் இருந்த அடுப்பு மற்றும் சமையல் உபகரணங்கள் சேதம டைந்தன.

  சமையலர் கலா வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

  47 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமையலறை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்,

  இந்நிலையில் சமையல் கட்டிடத்தை பார்வையிட்டு நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

  அப்போது துறையூர் நகராட்சி தொடக்கப்ப ள்ளிக்கு வகுப்பறைகள் கட்டடம் கட்டுவதற்கு ரூ.33 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ள தாகவும் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும், அது வரை தகர ஷெட் அமைத்து சமையலறை பயன்படுத்தப்படும் என ஆணையர் மற்றும் நகர் மன்ற தலைவர் தெரிவித்தனர்.

  ஆய்வின் போது நகரமைப்பு ஆய்வாளர் மரகதம் , நகர்மன்ற உறுப்பினர் முழு மதி இமயவரம்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

  • நேற்று வழங்கிய ரவை சாப்பிடும் போது கெட்டியாக இருந்ததாக கூறப்படுகிறது.
  • சமையல் அறையை பூட்டியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  காடையாம்பட்டி:

  சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மதிய உணவு 40 குழந்தைகள் சாப்பிடுகின்றனர். காலை உணவு 35 குழந்தைகள் சாப்பிடுகின்றனர்.

  இந்நிலையில் நேற்று காலை ரவை சமைத்து குழந்தைகளுக்கு வழங்கி உள்ளனர். நேற்று வழங்கிய ரவை சாப்பிடும் போது கெட்டியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் இது பற்றி பெற்றோரிடம் தெரிவித்தனர்.

  இந்நிலையில் இன்று காலையில் அப்பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண் இது தொடர்பாக கூறி சமையல் ஊழியர்கள் காமாட்சி, சுமதி ஆகியோரிடம் வாக்குவாதம் செய்து திடீரென சமையல் அறையை பூட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காலை உணவு சாப்பிட வந்த குழந்தைகள் தவித்தனர்.

  இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் தமிழரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதானம் செய்து குழந்தைகளுக்கு உணவு வழங்கி அதிகாரிகளும் சாப்பிட்டனர்.

  இது பற்றி தாசில்தார் தமிழரசி கூறுகையில், கோமதி என்பவர் பெற்றோர் கழக ஆசிரியர் உறுப்பினராக உள்ளார். மேலும் அதே பள்ளியில் தூய்மை பணியாளராகவும் உள்ளார். சமையல் அறையை பூட்டியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். 

  • எலக்ட்ரானிக் பொருள்களை பொருத்தவரை சரியான பராமரிப்பு முறை அவசியம்.
  • பிரிட்ஜை தகுந்த பராமரிப்பு கொடுக்கும்பொழுது அதன் ஆயுட்காலம் இன்னும் அதிகரிக்கும்.

  இன்றைய காலகட்டத்தில் ப்ரிட்ஜ் இல்லாத வீடுகளைப் பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்களின் வரிசையில் பிரிட்ஜ் இடம் பெற்றிருப்பதை பார்க்க முடிகின்றது. ஒருமுறை வாங்கினால் குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கும் மேல் நம்முடன் பயணிக்கக்கூடிய பிரிட்ஜை தகுந்த பராமரிப்பு கொடுக்கும்பொழுது அதன் ஆயுட்காலம் இன்னும் அதிகரிக்கும். சரி பெண்களே பிரிட்ஜை எப்படிப் பாதுகாத்து பராமரிப்பது? உங்களுக்காகவே இதோ சில யோசனைகள்.

  ப்ரிட்ஜின் பின்புறம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இல்லாமல் சற்று தள்ளிவைக்க வேண்டும். அந்த கம்பி வலைகளில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். அந்தக் கம்பி வலை களில் படியும் ஒட்டடையை சிறிய ப்ரஷ்ஷின் மூலம் அகற்றலாம்.

  வெளியூர் செல்லும் பொழுது ப்ரிட்ஜ்ஜை ஆஃப் செய்துவிட்டு செல்வது நல்லது. ப்ரிட்ஜை ஆஃப் செய்த பிறகு அதை நன்கு துடைத்து காய வைத்து பின்பு அவற்றை மூடி வைத்து விட்டு செல்லலாம்.. ஈரம் காயாமல் மூடி வைக்கும் பொழுது ப்ரிட்ஜ்ஜிற்குள் பூஞ்சைக் காளான் படிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

  ப்ரீஸரில் நாள்பட வைத்திருக்கும் எந்த ஒரு பொருளையும் அவ்வளவு எளிதில் வெளியில் எடுத்து விட முடியாது. எனவே ஃப்ரீஸரில் சிறிது கல் உப்பைத் தூவி அவற்றின்மீது பாத்திரங்களை வைத்தோமானால் அவற்றை வெளியில் எடுப்பது எளிது..ஃப்ரீஸரில் இருக்கும் பொருட்களை வெளியில் எடுக்க முடியவில்லை என்றால் கத்தி, கரண்டி போன்ற கூரான ஆயுதங்களைக் கொண்டு குத்தக் கூடாது..மேற்கூறிய யோசனையைப் பின்பற்றினால் ஃப்ரீஸரிலிருந்து பொருட்களை வெளியில் எடுப்பதும் எளிது அதேபோல் ஃப்ரீஸரும் சேதமாவது தவிர்க்கப்படும்.

  ப்ரிட்ஜை மிகவும் குறுகிய இடத்தில் வைக்காமல் காற்றோட்டமுள்ள இடத்தில் வைப்பது சிறந்தது.

  ஒரு டம்ளர் தண்ணீர், அரை டம்ளர் வினிகர், சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு, ஒரு டேபிள்ஸ்பூன் சோடா உப்பு இவை அனைத்தையும் நன்றாக கலக்கி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஸ்பிரே செய்து ஐந்து நிமிடங்கள் ஊறிய பின்னர் ஒரு மென்மையான துணியைக் கொண்டு துடைத்து எடுத்தோம் என்றால் ஃப்ரிட்ஜில் படிந்திருக்கும் நாள்பட்ட அழுக்கும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.ப்ரிட்ஜ் சுகந்த மணத்துடன் இருக்கும்..

  மாதத்திற்கு ஒரு முறையாவது ஃப்ரிட்ஜிற்குள் இருக்கும் டிரே, பாக்ஸ் போன்றவற்றை வெளியில் எடுத்து நன்றாக கழுவி காயவைத்து உபயோகப்படுத்த வேண்டும்.

  ப்ரிட்ஜின் கதவுப் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் ரப்பர் பீடிங்கை மென்மையான பிரஷ் கொண்டு மேலே கூறிய ஸ்பிரேயை உபயோகப்படுத்தி சுத்தப்படுத்தலாம்.

  ப்ரிட்ஜ்ஜிற்கு தரமான ஸ்டெபிலைசர்களை வாங்கிப் பொருத்துவதன் மூலம் மின்சாரம் அளவுக்கு அதிகமாக வரும் நேரங்களில் ஃப்ரிட்ஜ் பழுதடையாமல் தப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது..

  ப்ரிட்ஜை ஒரு தடவை ஆஃப்செய்து விட்டால், மறுபடியும் உடனடியாக ஸ்விட்ச் ஆன் செய்யக் கூடாது. இதனால், ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். ப்ரிட்ஜ் இயங்குவதற்கு அதனுள்ளே இருக்கும் ஒரு வகையான கேஸ் முக்கிய காரணமாக இருக்கின்றது. மேலும், ஃப்ரிட்ஜை ஆஃப் செய்து வைக்கும்போது பைப்பில் கேஸ் அப்படியே அடைத்துக் கொள்ளும். எனவே, குறைந்தது மூன்று நிமிடங்கள் கழித்துதான் மீண்டும் 'ஆன்' செய்யவேண்டும். அப்போதுதான் ப்ரிட்ஜ் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கும்.

  இன்றளவும் சிறிய வகை பிரிட்ஜ்களில் ஃப்ரீஸரில் டீஃப்ராஸ்ட் பட்டன் கொடுக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கமுடியும்.. 15 நாட்களுக்கு ஒரு முறையாவது இந்த பட்டனை பிரஸ் செய்து ஃப்ரீஸரில் உறைந்திருக்கும் அதிகப்படியான ஐஸைக் கரைய வைக்க வேண்டும்.இவ்வாறு டீஃப்ராஸ்ட் செய்வதன்மூலம் . ப்ரிட்ஜ் குறுகிய காலத்தில் பழுதடையாமல் அதிக வருடங்கள் நீடித்து உழைக்கும்.

  6 மாதத்திற்கு ஒருமுறை பிரிட்ஜ் மெக்கானிக்கை அழைத்து காயில், கம்ப்ரசரை சுத்தம் செய்யவேண்டும். இதனால் அதிக சூடு ஏற்பட்டு ப்ரிட்ஜ் கடினமாக வேலை செய்வது குறையும்.

  ப்ரிட்ஜ் வாங்கிய நாலைந்து வருடங்களில் அதன் கதவினுள் பொருத்தப்பட்டிருக்கும் கேஸ்கட் சற்று தளர்வடைந்துவிடும். இதனால் பாக்டீரீயாக்கள் படையெடுத்து வந்து கதவின் இடுக்கில் போய் உட்கார்ந்துவிடும்.எனவே ப்ரிட்ஜ் கேஸ்கட் சரியாக பொருந்தி இருக்கிறதா என்பதை அடிக்கடி கவனியுங்கள்.. தளர்வாக இருந்தால் பிரிட்ஜ் மெக்கானிக்கை அழைத்து அதை சரி செய்து கொள்ளுங்கள்..

  ப்ரிட்ஜ் வாங்கிப் பொருத்தும்போது அதற்கான 'எர்த்' சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரீஷியனை கொண்டு பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

  பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.இப்பொழுது வரும் ஃப்ரிட்ஜ்களில் துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கு என்று ஜெல் உள்ளே வைத்து செய்யப்பட்ட பில்டர் போன்ற அமைப்பானது கொடுக்கப்பட்டிருக்கின்றது..

  அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை தேர்ந்தெடுத்து வாங்கும் பொழுது, அவை மின்சாரத்தை அதிக அளவு மிச்சப் படுத்துவதற்கு உதவுகின்றது.

  பொதுவாக ப்ரிட்ஜ்ஜுக்குள் எல்லா பொருள்களையும் திணிக்காமல் அத்தியாவசியமான பொருள்களை மட்டும் வைத்து உபயோகித்தால் நமது உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்..ப்ரிட்ஜ்ஜுக்குள் அதிக நாட்கள் வைத்து உபயோகப்படுத்தப்படும் எந்த ஒரு உணவுப் பொருளும் நமது உடல் ஆரோக்கியத்தை கெடுப்பவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  எலக்ட்ரானிக் பொருள்களை பொருத்தவரை சரியான பராமரிப்பு முறை அவசியம். இல்லையெனில் வாரண்டிக்கு முன்பாகவே அந்தப் பொருட்கள் பழுதாகி நமக்கு அதிகப்படியான செலவை உண்டாக்கிவிடும்.இல்லையென்றால் அவை அதிக மின் கட்டணத்தை உண்டாக்கும்.எனவே முறையான பாதுகாப்பும் பராமரிப்பும் எலக்ட்ரானிக் பொருட்களை அதிக ஆண்டுகள் நீடித்து உழைக்கச் செய்யும் என்பதை நினைவில் கொண்டு அவற்றை உரிய முறையில் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.

  • சமைக்கும்போது என்ன சமைத்தாலும், அதனை மூடி வைத்து சமைக்க வேண்டும்.
  • சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் கேஸ் வீணாவதைத் தடுக்கலாம்.

  நாம் அன்றாடம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வரும் நிலையில் இல்லத்தரசிகள் எப்படி சிக்கமான பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.

  சமையலைத் தொடங்குவதற்கு முன்பே வெட்டப்பட்ட காய்கள் மற்றும் தேவையான பாத்திரங்களைத் தயாராக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்துவிட்டு ஒவ்வொரு பொருட்களாக தேடித் தேடி எடுத்துப் போடுவதன் மூலம் கேஸ் அதிகம் செலவாகும்.

  ஃப்ரிட்ஜில் வைத்த உணவு மற்றும் குழம்பு பாத்திரத்தைச் சூடுபடுத்தும் முன், அதை வெப்பநிலையில் சிறிதுநேரம் வைக்கவும். ஃபிரிட்ஜில் இருந்து நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்தினால் கேஸ் செலவு அதிகரிக்கும்.

  சமைக்கும்போது என்ன சமைத்தாலும், அதனை மூடி வைத்து சமைக்க வேண்டும். காய்கறிகள் சமைப்பதாக இருந்தாலும் சரி, அரிசியாக இருந்தாலும் மூடி வைத்து சமைத்தால் சீக்கிரமாகவே வெந்துவிடும்.

  பிரஷர் குக்கர் மூலம் சமைப்பது நல்லது. அகலமான பாத்திரத்தில் சமைப்பது எரிபொருளைச் சேமிக்க உதவும்.

  வெந்நீர் வைக்க கேஸ் ஸ்டவ்வுக்குப் பதிலாக rod water heater பயன்படுத்தலாம்

  இண்டக்ஷன் ஸ்டவ்வில் செய்ய முடிகிற சமையலை அதிலேயே செய்யலாம். கேஸ் ரெகுலேட்டர், ட்யூப், பானர் ஆகியவற்றில் கசிவு இருக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவும்.

  சமையல் முடிந்தவுடன் ரெகுலேட்டர் சுவிட்சை அணைக்க மறக்க வேண்டாம். வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது. இது உணவினைச் சூடு செய்வதை தவிர்க்கும்.

  சமைப்பதற்கு முன்னதாக அரிசி, பருப்பு, பயறு வகைகளை ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்து சமைத்தால் வெகு சீக்கிரமாகவே எல்லாமே வெந்துவிடும். இதன் மூலமாக சிலிண்டர் மிச்சமாகும்.

  கேஸ் அடுப்பில் உள்ள பர்னர் எப்போதும் அழுக்குகள் படியாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் பிசு பிசுப்பு மற்றும் அழுக்குகள் இருந்தால் அடைப்பு ஏற்பட்டு பிரச்னை ஏற்படும். இதனால் கேஸ் லீக் ஆகும் வாய்ப்பு கூட உண்டாகும். இதனால், சிலிண்டர் சீக்கிரமாக கூட தீர்ந்துவிடும். அதனால், பர்னர் எப்போதும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி தனியாக எடுத்து சுத்தம் செய்து வைப்பது நல்லது.

  காலையில் சமையலை முடிக்க வேண்டிய அவசரத்தில் ஈரமான பாத்திரங்களைக் கொண்டு சமையல் செய்வார்கள். முதல் நாள் இரவு கழுவாமல் பேட்ட பாத்திரத்தை மறுநாள் காலையில் அவசர அவசரமாக கழுவி, அதனை அப்படியே சமையலுக்கு பயன்படுத்த கூடாது. அந்த ஈரமான பாத்திரம் காய்வதற்கு 2 முதல் 4 நிமிடங்கள் வரை ஆகலாம். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. ஒவ்வொரு நாளும் இது போன்று இருந்தால் சிலிண்டர் சீக்கிரமே காலியாகிவிடும்.

  இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி கேஸ் வீணாவதைத் தடுத்து, மிச்சப்படுத்துவதன் மூலம் மேலும் நான்கு நாட்கள் அல்லது ஒரு வாரம் சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.

  • ஒவ்வொரு மாதமும் போடும் பட்ஜெட்டில் நம்மால் பணத்தை மிச்சப்படுத்த முடியும்
  • மளிகைப் பொருட்களுக்காக ஒதுக்கும் பணத்தில் சிறு தொகையை நிச்சயம் சேமிக்க முடியும்.

  தற்போதைய பொருளாதாரச் சூழலில், எவற்றில் எல்லாம் சிக்கன நடவடிக்கையை கையாள முடியும் என்று திட்டமிடுவது அவசியமானது. ஒவ்வொரு மாதமும் போடும் பட்ஜெட்டில் நம்மால் பணத்தை மிச்சப்படுத்த முடியும் விஷயங்களில், மளிகைப் பொருட்கள் வாங்குவதும் ஒன்று. திட்டமிட்டு சில விஷயங்களை செயல்படுத்தினால், மளிகைப் பொருட்களுக்காக ஒதுக்கும் பணத்தில் சிறு தொகையை நிச்சயம் சேமிக்க முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே...

  * சத்துள்ள உணவுகளைத் தேர்வு செய்வது பணத்தை மிச்சப்படுத்துவதற்கான சிறந்த வழியாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள் போன்றவை சத்துள்ள உணவுகளை விட விலை அதிகமாகவே இருக்கும்.

  * மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு முன்பு சிறிது நேரம் செலவழித்து சரியான பட்டியல் தயார் செய்வது முக்கியமானது. இதன் மூலம் தேவையற்ற பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

  * செய்தித்தாள்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளின் இணையதளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சலுகைகளை ஆராய்ந்து, அவற்றுக்கேற்ப பொருட்களை வாங்கலாம்.

  * சமைத்த மற்றும் உடனே சாப்பிட தயாராக இருக்கும் உணவுப் பொருட்களை வாங்குவதை விட, முழு தானியங்களை வாங்கி பயன்படுத்துவது பட்ஜெட்டுக்கு நல்லது.

  * வீட்டில் தயாரிக்க முடிந்த உணவுப் பொருட்களை, வெளியில் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

  * ஒவ்வொரு பொருளாக வாங்குவதை விட, தேவையானப் பொருட்களை மொத்தமாக வாங்குவதே சிறந்தது. பொருட்களை வாங்குவதற்கு அங்காடிக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும், கவர்ச்சிகரமான விளம்பர யுக்திகளால் நம்மை அறியாமல் தேவையற்ற பொருட்களையும் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

  * வீட்டிலேயே வளர்த்து பயன்படுத்த முடிந்த காய்கறிகளை நாமே விளைவிப்பது, பணத்தை மிச்சப்படுத்துவதோடு, ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

  * வாரத்தில் இரண்டு முறை குளிர்சாதனப் பெட்டியை முழுவதுமாக பார்த்து அதில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை முதலில் உபயோகப்படுத்துங்கள். உங்களுக்கே தெரியாமல் சில பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வைத்து மறந்து விட்டிருக்கலாம்.

  * பசியாக இருக்கும் போது அங்காடிக்குச் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.

  * இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு உணவு பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, நமது அருகில் கிடைக்கும் சத்தான உணவுகளை வாங்குவது சிறந்தது. குளிர்பானங்கள், சத்து பானங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை வாங்குவதையும் தவிர்க்க முயலுங்கள்.

  * அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை விலை மலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அவற்றை அதிகமாக வாங்கி பயன்படுத்தலாம்.

  * மளிகைப் பொருட்கள் வாங்கும்போது, அவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை கவனிக்க மறந்து விடாதீர்கள்.

  • உணவுப் பொருட்களின் விலை உயர்வு குடும்பத் தலைவிகளுக்கு பிரச்சினையாக இருப்பதுண்டு.
  • சமையல் முறைகளில் சிக்கனத்தை கடைப்பிடிப்பதை யோசிப்பது நல்லது.

  பொருளாதார பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்றவை, குடும்பத்தின் பட்ஜெட்டையும், சேமிப்பையும் பாதிக்கக்கூடும். இதில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு தான் குடும்பத் தலைவிகளுக்கு பிரச்சினையாக இருப்பதுண்டு. பணத்தை திட்டமிட்டு கையாள்வது, வருமானத்தை அதிகரிப்பது என்று பல வழிகளை முயற்சித்தாலும், மற்றொரு பக்கம் சமையல் முறைகளில் சிக்கனத்தை கடைப்பிடிப்பதையும் யோசிப்பது நல்லது. அதேசமயத்தில் ஆரோக்கியமான உணவுகளையும் சமைக்க வேண்டும். அதுபற்றிய குறிப்புகள் இங்கே:

  * மூன்று வேளையும் வெவ்வேறு வகையான உணவுகள் தயார் செய்வதைத் தவிர்க்கலாம். உதாரணத்துக்கு காலையில் தயாரித்த சாம்பாரை இரவு உணவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். மதிய உணவுக்கு தயாரித்த காய்கறி குழம்பை இரவு சப்பாத்திக்கு உபயோகிக்கலாம்.

  * மாலை வேளையில் பஜ்ஜி, போண்டா என்று எண்ணெய்யில் பொரித்த பண்டங்களை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கும்போதே கொண்டைக்கடலை, காராமணி, பட்டாணி போன்றவற்றையும் வாங்கினால், அவற்றில் சுண்டல் தயாரித்து சாப்பிடலாம். இதன் மூலம் செலவை கட்டுப்படுத்தவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும்.

  * குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நேரத்தில் தனித்தனியாக சாப்பிடாமல் சேர்ந்து சாப்பிடலாம். இதனால் ஒவ்வொரு முறையும் குழம்பு, பொரியல் போன்றவற்றை சூடுபடுத்தும் வேலை குறையும். சமையல் எரிவாயு மிச்சமாகும்.

  * நாகரிகம் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல், நமக்கு அருகிலேயே கிடைக்கும் காய்கறிகளை சமைக்கலாம். அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் விலை மலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

  * ஒவ்வொரு நாளும் என்ன சமைக்கப் போகிறீர்கள் என்ற பட்டியலை, முன்னதாகவே ஒரு வார காலத்துக்கு தயார் செய்துகொள்வது நல்லது. இதன் மூலம் கடைசி நேரத்தில் திட்டமிடாமல் சமைத்து, உணவையும், உணவுப் பொருட்களையும் வீணடிப்பதை தவிர்க்கலாம்.

  * ஒவ்வொருவர் விருப்பத்துக்கு ஏற்ற வகையில், ஒரே நேரத்தில் பலவித உணவுகளை சமைப்பதற்கு பதிலாக, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்ற ஒரு சமையலை மட்டுமே செய்வது நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும்.

  * வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் அதிக பணத்தை சேமிக்கலாம்.

  * ஆரோக்கியமான, அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை சமைப்பதற்கு, எல்லா வகையான சமையல் பொருட்களையும் வாங்கி வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவையானப் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் முன்னுரிமை கொடுங்கள். மூலிகை தேநீர், பேக் செய்யப்பட்ட ஆரோக்கியமானப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதை இரண்டாம் நிலைத் தேர்வாக வைத்திருங்கள்.

  * உணவை வீணாக்காமல் தேவையான அளவு மட்டும் சமைப்பது அல்லது மீதமான உணவுகளை முறையாக பயன்படுத்துவது பணத்தை மிச்சப்படுத்துவதற்கு உதவும் சிறந்த வழியாகும்.

  • சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள பெண்கள் இதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • நீங்கள் மட்டும் தனியாக ஈடுபடாமல், உங்கள் தோழிகளுடன் சேர்ந்து இதை சுயதொழிலாக செய்யலாம்.

  இன்றைய பெண்கள் குடும்பத்தைக் கவனிப்பதோடு மட்டுமில்லாமல், அலுவலக வேலை, தொழில் என்று தங்களுக்கான அடையாளத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதில் வீட்டை சுத்தப்படுத்துவது, வீட்டு உபயோகப் பொருட்களை அவ்வப்போது பராமரிப்பது போன்ற வேலைகளை செய்வதற்கு, பலருக்கு போதுமான நேரம் கிடைப்பது இல்லை. 'வீடு' என்பது நம் ஆளுமையின் அடையாளம். லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வீட்டைக் கட்டுபவர்கள், அதைப் பராமரிக்க சில ஆயிரங்களை செலவழிக்கத் தயங்குவது இல்லை.

  சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள பெண்கள் இதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டைச் சுத்தம் செய்வது, ஒழுங்குபடுத்துவது, மாதாந்திர பில்களைக் கட்டுவது போன்ற பலவிதமான பராமரிப்புப் பணிகளை நீங்கள் செய்து தரலாம். அதற்குரிய கட்டணத்தை வசூலிக்கலாம். சில நிறுவனங்கள் இதுபோன்ற சேவைகளை வழங்குகின்றன. இருந்தாலும், வீட்டுக்குள் அறிமுகம் இல்லாதவர்களை அனுமதிக்க பலர் தயக்கம் காட்டுவார்கள். இதுவே, உங்கள் பகுதியில் நீங்கள் அனைவருக்கும் தெரிந்தவராக இருந்தால், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையோடு உங்களை அணுகுவார்கள்.

  நீங்கள் மட்டும் தனியாக ஈடுபடாமல், உங்கள் தோழிகளுடன் சேர்ந்து இதை சுயதொழிலாக செய்யலாம். இதில் வாடிக்கையாளரின் தேவைகளைப் பொறுத்து, நீங்கள் வழங்கும் சேவைகளை வகைப்படுத்திக்கொள்ளலாம். வீட்டை ஒழுங்குபடுத்துதல், பழுதுபார்த்தல், பிற வேலைகள் என்று பிரித்து செயல்படலாம். இதற்கென தனியாக முதலீடு, அலுவலகம் போன்றவை தேவை இல்லை. உங்களுடைய பேச்சுத் திறனும், நேர்மையும் தான் மூலதனம்.

  வாடிக்கையாளரின் தேவைகளைப் புரிந்து கொண்டு, சரியான முறையில் பேசி கவர்வது முக்கியம். தகுந்த பணியாளர்களை நியமித்து வேலைகளைக் கச்சிதமாக முடித்துக் கொடுக்க வேண்டியது அவசியம். நீங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு, நண்பர்கள் என நெருங்கிய வட்டத்தில், முதலில் உங்கள் நிறுவனத்தின் சேவைகளைப் பற்றிய விவரக்குறிப்புகளை விநியோகம் செய்யுங்கள். நாளடைவில் உங்கள் வேலையில் திருப்தி அடைந்த வாடிக்கையாளர்களே, தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உங்கள் நிறுவனத்தை பரிந்துரை செய்வார்கள்.

  நிறுவனம் அடுத்த கட்டம் நோக்கி வளர்ச்சி அடையும்போது முகநூல், இன்ஸ்டாகிராம், கிளப் ஹவுஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் நிறுவனத்திற்கென தனிப் பக்கங்கள் தொடங்கிப் பகிருங்கள். உங்கள் பகுதியில் இருக்கும் நம்பிக்கையான பிளம்பர்கள் மற்றும் பிற சேவைகள் வழங்கும் நபர்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம். திறமையுள்ள ஒழுக்கமான நபர்கள், நியாயமான கட்டணம், நேர்த்தியான வேலை என்பதைக் கொள்கையாகக் கொண்டு செயலாற்றினால் வெற்றி நிச்சயம்.

  • பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைத்திருக்கக்கூடாது.
  • சமைக்கும்போது, நைலக்ஸ் புடவை கட்டிக்கொ ண்டு சமைக்கக் கூடாது.

  வீட்டில் பெண்கள் அதிகமாக நேரத்தை செலவிடும் இடம் சமையலறை. பரபரப்பாக சமையல் செய்வது, மற்ற வேலைகளை முடித்த களைப்போடு சமையல் வேலைகளில் ஈடுபடுவது என அவர்கள் மேற்கொள்ளும் வேலைக்கு ஏற்றவாறு, அந்த அறையின் அமைப்பு மற்றும் வசதிகள் இருக்கவேண்டும்.

  தண்ணீர், மின்சாரம், நெருப்பு இவை மூன்றையும் ஒன்றாக பயன்படுத்தும் இடம் என்பதால், சமையல் அறையில் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது. அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.:-

  பெரும்பாலான வீடுகளில் 'டை ல்ஸ்' பதிக்கப்பட்ட தரை உள்ளது. இதில், எந்த வகையான திரவங்கள் சிந்தினாலும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. எதிர்பாராமல், அதில் கால் வைக்க நேர்ந்தால் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே , கீழே சிந்தும் திரவங்களை அவ்வப்போ து துடைத்து, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்ணாடி பாட்டில்கள் ஏதேனும் உடைந்தால், அதைத் துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

  தீ அணைக்கும் கருவி:

  சமையல் அறையில், சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், பர்னர்கள் அல்லது பிளம்பீட் டெசர்ட் ஆகியவற்றில் இருந்து தீப்பிழம்புகள் வந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சமைக்கும் பாத்திரத்தில் திடீரென தீப்பற்ற நேர்ந்தால், அதில் தண்ணீர் ஊற்றக் கூடாது. இது தீயை மேலும் அதிகரிக்கக்கூடும்.

  பாத்திரத்தை ஒரு தட்டை போட்டு மூடி, அதன் மீது சிறிது பேக்கிங் சோடாவைப் போடலாம். இதனால், தீ உடனடியாக கட்டுக்குள் வரும். சமையல் அறையில், தீயணைக்கும் கருவியை வைத்திருப்பதும், அதைக்கையாளத்தெரிந்திருப்பதும் அவசியம்.

  சமையல் உபகரணங்கள்:

  கத்தி, அரிவாள், அரிவாள்மனை போன்ற கூர்மையான பொருட்களை சமையல் அறையின் பாதுகாப்பான இடத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

  பாத்திரங்களில் திருகுகள் உள்ள கைப்பிடிகள் தளர்வாக இருப்பதைக் கவனித்து உடனே அவற்றை சரி செய்வதன் மூலம், விபத்துகளைத் தவிர்க்கலாம்.

  தினசரி கவனம்:

  தினமும் இரவில் குக்கரின் கேஸ்கட், வெயிட் முதலிய வற்றை நன்றாக சுத்தம் செய்வதுடன், குக்கர் மூடியில் உள்ள சேப்டி வால்வையும் சரிபார்ப்பது அவசியம். அடுப்பை அணைப்பதோடு, எரிவாயு சிலிண்டரையும் மூடிய பின்னரே சுத்தம் செய்ய வேண்டும். குழம்பு தாளிக்கும் போது, குமிழ் வைத்த மூடியால் மூடியபடி தாளித்தால், கடுகு போன்ற பொருட்கள் தெறித்து விழுந்து சூடுபடாமல் இருக்கும்.

  சமைக்கும்போது, நைலக்ஸ் புடவை கட்டிக்கொ ண்டு சமைக்கக் கூடாது. இது எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது. மேலும், குழந்தைகள் அடுப்பிறகு அருகில் சென்று கேஸ் குழாய்களை திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைத்திருக்கக்கூடாது. இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு ரெகுலேட்டரும், அடுப்பின் வால்வும் மூடி உள்ளதா என்பதை சரி பார்ப்பது அவசியம். பாத்திர அலமாரிகளோ , மற்ற பொருட்களோ அடுப்பிற்கு மேல் பகுதியில் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதை எடுக்க முயலும் போது, ஆடையில் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளது. ஆடையில் நெருப்பு பற்றினால், உடனே உடலைச்சுற்றி கம்பளியை போர்த்தி, நெருப்பை அணைக்கலாம்.

  • வீட்டில் உள்ளவர்களின் உடல் நலத்தை பாதுகாக்க சிம்னியை சுத்தம் செய்வது எவ்வளவு அவசியம் என்பது புரியும்.
  • சமையலறை சுவர்களை அழகாக வைத்திருக்க உதவும் சிம்னியை சுத்தம் செய்வது எப்படி எ