பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் அன்னதான சமையல் கூடம் திறப்பு விழா

பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவிலின் முன்பு வர்த்தகர் கழகம் சார்பில் அன்னதான சமையல் கூடம் அமைக்கப்பட்டது. விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் அன்னதான சமையல் கூடம் திறப்பு விழா
Published on

பொன்னமராவதி

பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவிலின் முன்பு வர்த்தகர் கழகம் சார்பில் அன்னதான சமையல் கூடம் அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா கணபதி ஹோமத்துடன் நடைபெற்றது.

அதையடுத்து நடைபெற்ற திகுக்கார்த்திகை விழாவில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரணியர்க்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச்சார்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

விழாவில் வர்த்தகர் கழகத்தலைவர் எஸ்.கே.எஸ்.பழனியப்பன், தேய்பிறை அஷ்டமி மற்றும் கார்த்தகை வழிபாட்டு குழு நிர்வாகிகள் ராம சேதுபதி, பி.பாஸ்கர்,எம்.குமரன், மணிகண்டன், முருகேசன், சதீஸ்குமார், எஸ்.பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com