search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டீக்கடையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - வடை மாஸ்டர் மீது 2 பிரிவுகளில் வழக்கு
    X

    டீக்கடையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - வடை மாஸ்டர் மீது 2 பிரிவுகளில் வழக்கு

    • கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்த போது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதையடுத்து தீ பிடித்தது
    • கவன குறைவாக தீயை பற்றவைத்து தீ விபத்து ஏற்படுதல் ஆகிய இரண்டு பிரிவுகள் வழக்கு பதிவு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பெரு விளை பகுதியைச் சேர்ந்தவர் சபிக் (வயது 37) இவர் பார்வதிபுரம் மேம்பா லத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் தூத்துக்குடி நடுத்தெருவை சேர்ந்த மூசா (47) என்பவர் வடை மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.மேலும், வடசேரி பெரிய ராசிங்கன் தெருவை சேர்ந்த சேகர் (52) வெட்டூர்ணி மடத்தைச் சேர்ந்த பிரவீன் (25) ஆகியோரும் வேலை செய்து வருகிறார்கள்.

    நேற்று காலையில் டீக்கடையில் மூன்று பேரும் இருந்தனர். அப்போது மூசா கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்த போது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதையடுத்து தீ பிடித்தது. இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.அதற்குள் டீ கடை முழுவதும் எரிந்து கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதில் கடை ஊழியர்கள் மூசா, சேகர்,பிரவீன் மற்றும் சுசீலா,சசிதரன், சுதா, பக்ருதீன், சுப்பையா ஆகிய எட்டு பேரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயம் அடைந்த 8 பேர் குடும்பத்தி ற்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்‌. இதை தொடர்ந்து கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ் ஆகியோர் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் ரூ. 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்கள்.

    கியாஸ் விபத்திற்கான காரணம் குறித்து வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கவனக்குறைவாக தீயை பற்ற வைத்ததால் தான் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து கடை டீ மாஸ்டர் சேகர் கொடுத்த புகாரின் பேரில் வடை மாஸ்டர் மூசா மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 285, 337 ஆகிய இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கவன குறைவாக தீயை பற்றவைத்து தீ விபத்து ஏற்படுதல் ஆகிய இரண்டு பிரிவுகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×