search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை"

    • 14 மாடு, கன்றுகள் பிடிக்கப்பட்டு அவை நகராட்சி வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்தது.
    • கால்நடை உரிமையாளர்கள் மாட்டிற்கு ரூ.2ஆயிரம், கன்றுக்கு ரூ.1000 அபராதம் செலுத்தி மீட்டு செல்கின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி பிரதான வீதிகளில் மாடுகள் அதிகளவு சுற்றிதிரிந்ததால் போக்கு வரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்பட்டுவந்தது.

    சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை கட்டுப்படுத்திட பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் அறிவுறுத்தலி ன்படி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணி நடைபெற்று வந்தது.

    அதன்படி சுமார் 14 மாடு,கன்றுகள் பிடிக்கப்பட்டு அவை நகராட்சி வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்தது. கால்நடை உரிமையாளர்கள் மாட்டிற்கு 2ஆயிரமும், கன்றுக்கு ரூ.ஆயிரம் என தங்களது மாடுகளை அபராதம் செலுத்தி மீட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில் கால்நடை உரிமையாளர்கள் இதுவரை வந்து உரிமைக்கோரி மீட்கப்படாத 1காளை கன்றுக்குட்டி உள்ளிட்ட 4 கன்றுகளை நேற்று மாலை நகராட்சி நிர்வாகம் தனி வாகனத்தில் ஏற்றி பாதுகாப்புடன் மயிலாடுதுறை கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

    • மொத்தம் 4 ஆயிரத்து 133 சாக்கு பைகளும் ஏலமிடப்பட உள்ளது.
    • ஒரு நபரிடம் இருந்து ஒரு வங்கி வரைவோலை மட்டுமே பெறப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் நடுவூரில் உள்ள கால்நடை பண்ணையில் காலி தீவன பாலத்தின் சாக்கு பைகள் வருகிற 12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை )காலை 11 மணிக்கு பொது ஏலமிடப்பட உள்ளது.

    இதில் நல்ல நிலையில் உள்ள 4022 சாக்கு பைகளும் குறைந்த நிலையில் உள்ள 111 சாக்கு பைகளும் என மொத்தம் 4 ஆயிரத்து 133 சாக்கு பைகளும் ஏலமிடப்பட உள்ளது.

    ஏலம் கால்நடை பண்ணையில் உள்ள துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் நடைபெறும்.

    ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தனித்தனியாக ஏலத்திற்கான முன் வைப்புத் தொகை ரூ 1000ம் துணை இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பண்ணை நடுவூர் என்ற பெயரில் வங்கி வரைவோலையாக ஒரத்தநாட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மாற்றத்தக்க வகையில் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஒரு நபரிடம் இருந்து ஒரு வங்கி வரைவோலை மட்டுமே பெறப்படும். வரைவோலையுடன் ஆதார் அட்டை ஜெராக்ஸ் பெறப்பட்டு உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு ஏலத்தில் கலந்து கொள்வ தற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படும். வங்கி வரை ஓலைகள் அனைத்தும் 5-ம் தேதி முதல் 11ஆம் தேதி வரை உள்ள காலகட்டத்தில் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும்.

    ஏல முன்வைப்பு தொகை செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    ஏலம் எடுத்தவர்கள் முழு தொகையும் செலுத்த தவறும் பட்சத்தில் அவர் செலுத்திய முன்வைப்புத் தொகை முழுவதும் இழக்க நேரிடும். ஏலம் விடப்படும் சாக்கு பைகளை துணை இயக்குனர் அல்லது பண்ணை மேலாளர் அனுமதி பெற்று பார்வையிடலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தீபக்ே ஜக்கப் தெரிவித்துள்ளார்.

    • மாடுகளுக்கு அம்மை நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது.
    • 21 நாட்களுக்கு பின் கால்நடைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

    உடுமலை:

    உடுமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயத்துக்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்பு உள்ளது. அதில், தற்போது மாடுகளுக்கு அம்மை நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது.

    இது குறித்து கால்நடைத்துறையினர் கூறுகையில், வடமாநிலங்களான ராஜஸ்தான், குஜராத்தில் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் பரவி, அதிகளவு இறப்பு ஏற்பட்டுள்ளது. உன்னி மற்றும் கொசுக்களால் இந்த வைரஸ் பரவுகிறது.

    நோய் தாக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல், தீவனம் உண்ணாமை, தோல் தடிப்பு ஆகிய அறிகுறிகள் தென்படும்.சிறு கன்றுகள் முதல் கறவை மாடுகள் வரை பாதிக்கிறது. அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கால்நடை டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.பண்ணைகளை சுற்றிலும் நீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். கழிவுகளை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.

    அரசு வழங்கும் இலவச தடுப்பூசி போட்டுக்கொண்டால் இந்த நோய் வராமல் தடுக்கலாம். 21 நாட்களுக்கு பின், கால்நடைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.கால்நடைகளுக்கு தடுப்பூசியை போட்டுக்கொள்ள, கால்நடை வளர்ப்போர் முன்வர வேண்டும் என்றனர்.  

    • இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.
    • எந்த விலங்காக இருந்தாலும் அவற்றை பிடிக்கும் வகையில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    குடிமங்கலம்:

    குடிமங்கலத்தையடுத்த கோட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி என்பவரது தோட்டத்து கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 14 ஆடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி வெறிநாய்களால் கடித்து கொல்லப்பட்ட சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

    இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.ஆரம்ப காலத்தில் ஏதோ ஒரு மர்ம விலங்கு கடித்து குதறுவதாக எண்ணி வந்த நிலையில் கண்காணிப்புக் கேமரா மற்றும் நேரில் பார்த்தவர்கள் மூலம் நாய்கள் தான் இந்த வெறிச்செயலில் ஈடுபடுகின்றன என்று உறுதிப்படுத்தினர்.இதனால் வனத்துறையினர் இந்த பிரச்சினையிலிருந்து விலகி விட்டனர். தற்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது யார் என்று தெரியாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இப்போதும் விவசாயிகளுக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது. வீட்டுக்கு அருகில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகள் கடித்து குதறப்படும்போது ஏன் சத்தம் கேட்பதில்லை. காட்டு விலங்குகள் போல நாய்களும் சத்தமெழும்பாத வகையில் மூச்சுக் குழாயை கடித்து வேட்டையாடுமா? . கால்நடைகளை வேட்டையாடுவது நாய்கள்தானா? அல்லது ஏதேனும் வேட்டை விலங்குகளா என்பதை கண்டறியும் வகையில் முழுமையான ஆய்வுகள் செய்ய வேண்டும்.எந்த விலங்காக இருந்தாலும் அவற்றை பிடிக்கும் வகையில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.கால்நடைகளை வேட்டையாடும் விலங்குகளுக்கு குழந்தைகள் இலக்காகும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று விவசாயிகள் கூறினர்.

    • கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை நகரின் பிரதான சாலைகளில் சுற்றித்திரிய விடுகிறார்கள்.
    • காவல்துறை மூலம் நீதிமன்ற நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பட்டுக்கோட்டை நகர பகுதியில் கால்நடை வளர்க்கும் சிலர் தங்கள் வீட்டில் வளர்க்கும் மாடுகளை நகரின் பிரதான சாலைகளில் சுற்றித்திரிய விடுகிறார்கள்.

    இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் மிகுந்த இடையூறாக உள்ளது.

    மேலும், சில நேரங்களில் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    ஏற்கனவே இருமுறை நகராட்சி மூலம் நகரில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    எனினும் சிலர் தொடர்ந்து கால்நடைகளை தெருவில் சுற்றித்திரிய விடுகிறார்கள்.

    கால்நடைகளை சாலையில் சுற்றித்திரிய விடுவது சட்டப்படி குற்றமாகும்.

    எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் அபராத கட்டணம், பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படுவதோடு, காவல்துறை மூலம் நீதிமன்ற நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளினால் விபத்துகள் ஏற்படுவதாகவும் புகாா் அளித்தனா்.
    • கால்நடைகள் பறிமுதல் செய்து விலங்குகள் நல வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்றாா்.

    வெள்ளக்கோவில்

    வெள்ளக்கோவில் பகுதியில் கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிவதாகவும், இதனால் விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரனிடம் புகாா் அளித்தனா். இதைத் தொடா்ந்து, அவா் கள ஆய்வு மேற்கொண்டாா்.

    பின்னா் அவா் நிருபர்களிடம் கூறியதாவது:- வெள்ளக்கோவில் பகுதி சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிய கூடாது. உப்புப்பாளையம் மேற்கு, மு. பழனிசாமி நகா், காமராஜபுரம், சீரங்கராய க்கவுண்டன்வலசு, இந்திரா நகா், கச்சேரிவலசு, அம்மன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் மாடுகள், வெள்ளாடுகள், நாய்கள் சுற்றித் திரிகின்றன.

    கால்நடைகளால் பெரும் விபத்து ஏற்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ள நிலையில் இனி சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் பொது சுகாதார சட்டம் 1939 ன்படி அபராதம் விதிக்கப்படுவதுடன், கால்நடைகள் பறிமுதல் செய்து விலங்குகள் நல வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்றாா். 

    • கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றும் மலடு நீக்கசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
    • முகாமில் 1465 கால்நடைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திரும ருகல் ஒன்றியம் திருப்புக லூரில் தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை (ஆவின்) மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழா, கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

    கால்நடை கண்காட்சி யினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன் துவக்கி வைத்தார்.

    சிறந்த கால்நடை வளர்போருக்கான பரிசுகளை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் மேம்பாட்டு கழகம் தலைவர் உ.மதிவாணன்,

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் ஆகியோர் வழங்கி சிறப்புரை ஆற்றினர்.

    கால்நடை வளர்போருக்கான இடுபொருள் வழங்கி முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ,வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டு வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முன்னதாக ஆவின் பொது மேலாளர் சத்யா வரவேற்றார்.

    இம்முகாமில் சுமார் 186 கால்நடை வளர்ப்போர்,443 பசுக்கள்,658 ஆடுகள், கோழிகள் 254 நாய்களுக்கு தடுப்பூசி,குடற்புழு நீக்கம்,செயற்கை முறை கருவூட்டல் 31,சிகிச்சை 206,ஆண்மை நீக்கம் 14, தாது உப்புக்கலவை வழங்குதல் 175 கிலோ ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் சினைப்பரி சோதனை மற்றும் மலடுநீக்க சிகிச்சை நவீன கருவி உதவியுடன் மேற்கொள்ள ப்பட்டது.

    முகாமில் 1465 கால்நடைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    கால்நடை கண்காட்சியில் பல்வேறு தீவன பயிர்கள் பயன்பாடு மற்றும் முக்கியத்து வம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் மூலம் சினை பரிசோதனை மற்றும் பல்வேறு பரிசோ தனைகள் மேற்கொள்ள ப்பட்டது.

    ஆவின் நிறுவனத்தின் மூலம் பால், மதிப்பு கூட்ட ப்பட்ட பொருட்கள் விற்ப னையகம் மற்றும் விழிப்பு ணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    சிக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக உதவி பேராசிரியர் மூலம் விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இம்முகாமில் உதவி இயக்குநர் அசன் இப்ராகிம் மற்றும் வேதாரண்யம் கால்நடை மருத்துவர் கணேசன்,திருப்புகலூர் கால்நடை உதவி மருத்துவர் முத்துக்குமார், ஆகியோர் தலைமையில் கால்நடை மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள்,

    ஆவின் கால்நடை மருத்துவர்கள், அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

    முடிவில் திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்

    • தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமங்களில், கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கால்நடை வளர்ப்போரிடம் நோய் பாதிப்பின் தன்மை, சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    உடுமலை:

    கேரளாவில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது. இதனைத் தடுக்க கேரள அரசு நோய் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தி வருகிறது. இந்த நோயின் தாக்கம் தமிழகத்தில் பரவ வாய்ப்புள்ளது.

    இதனால் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமங்களில், கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கால்நடை டாக்டர், ஆய்வாளர் மற்றும் உதவியாளர் அடங்கிய குழுவினர் கல்லாபுரம், மானுப்பட்டி, கோடந்தூர், தளிஞ்சி, ஜல்லிப்பட்டி, செல்லப்பம்பாளையம், வாளவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கால்நடைகளைக் கண்காணிக்கின்றனர்.

    மேலும் இனிவரும் நாட்களில் ஏதேனும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனே அருகில் உள்ள கால்நடை டாக்டரை அணுகி சிகிச்சை பெற கால்நடை வளர்ப்போரிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் கூறியதாவது:-

    மாநில எல்லை கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு கிடையாது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்களில் உள்ள கால்நடைகள் கண்காணிக்கப்படுகிறது.

    கால்நடை வளர்ப்போரிடம் நோய் பாதிப்பின் தன்மை, சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இருந்தே கேரளாவுக்கு கால்நடைகள் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கால்நடைகள் பெருமளவு கொண்டு வரப்படுவதில்லை. இருப்பினும் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்னாள்‌ முதல்- அமைச்சர்கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும்‌ சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • இந்த முகாமில்‌ கால்நடைகளுக்கு சிறு அறுவை சிகிச்சை, மலடு நீக்க சிகிச்சைகள்‌ உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகள்‌ அளிக்கப்படும்‌.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசி புரத்தை அடுத்த கூனவேலம்பட்டி யில் முன்னாள் முதல்- அமைச்சர்கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.விழாவை கலெக்டர் டாக்டர். உமா தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் நாமக்கல் ஆவின் ஆகிய துறைகள் இணைந்து நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 27.06.2023 அன்று நடைபெற்ற மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 1,125 கால்நடைகளும்,

    இரண்டாம் கட்டமாக 21.7.2023 அன்று நடைபெற்ற மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 1,202 கால்நடைகளும் பயனடைந்துள்ளன. தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கூனவேலம்பட்டியில் நடத்தும் மாபெரும் கால்நடை மருத்துவ முகாம் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிறு அறுவை சிகிச்சை, மலடு நீக்க சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகள் அளிக்கப்படும். இலவச செயற்கைமுறை கருவூட்டல் செய்யப்படும். ஸ்கேன் கருவி மூலம் ஆடு, மாடுகளுக்கு சினை பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஆடு, கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்படும். மாடு, கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

    செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படும். ஆண் மற்றும் பெண் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும். ரத்தம், பால், தோல் மற்றும் சாண மாதிரிகள் பரிசோதனை, மடிநோய் கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்படும்.

    மேலும் இலவசமாக தீவனக் கரணைகள் மற்றும் விதைகள் வழங்கப்படும். சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் மற்றும் சிறந்த கறவைப் பசு பராமரிப்போருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. கால்நடை கண்காட்சி மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்து நிபுணர்கள் சிறப்புரை மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது கால்நடைகளை முகா மிற்கு கொண்டு வந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஜெகநாதன், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் மருத்துவர் (பொறுப்பு) பாலசுப்பரமணியன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் நடராஜன், துணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு துறை) மருத்துவர்.டி.என்.அருண்பாலாஜி, உதவி இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மருத்துவர் என்.மருதுபாண்டி, உதவி பொது மேலாளர் (ஆவின்) லிடியா, ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி, கால்நடை மருத்துவர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காலை 8 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • முகாமில் அனைத்து கால்நடை விவசாயிகளும் கலந்து கொண்டு பயனடையலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவிடைமருதூர் தாலுக்கா நாகரசம்பேட்டை

    கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நாளை ( சனிக்கிழமை ) காலை 8 மணிமுதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்), பால்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பல்கலைகழகம் ஆகியன இணைந்து நடத்தும் இச்சிறப்பு மருத்துவ முகாமில் கால்நடை மருத்துவ வல்லுநர்களால் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல், சினைப்பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல், சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை அளித்தல் ஆகியன இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளன.

    மேலும், முகாம் வளாகத்தில் கண்காட்சிகள், பால் உற்பத்தி மற்றும் தரம் அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்க கூட்டம் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு முகாமில் அனைத்து கால்நடை விவசாயிகளும், கலந்துக்கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மண்டபத்தில் 26-ந்தேதி சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
    • குடற்புழு நீக்க மருந்துகள், புற ஒட்டுண்ணிகள் நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    ராமநாதபுரம்

    கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கலைஞ ன் நூற்றாண்டு விழா வினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவிலான 3 கால்நடை மருத்துவ முகாம்கள், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி மாவட்டத்தில் 2-வது முகாமானது வருகிற 26-ந்தேதி ராமநாதபுரம் கோட்டம் மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி கிராமத்தில் நடத்தப்பட உள்ளது.

    இம்முகாமில் கால்நடை களுக்கு தேவையான தடுப்பூசிகள், குடற்புழு நீக்க மருந்துகள், செயற்கை முறை கருவூட்டல், சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள், புற ஒட்டுண்ணி கள் நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேலும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் மூலம் கால்நடைகளுக்கான தோல் நோய்கள் கண்டறிதல், ரத்தம், சளி, பால் ஆகிய மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, இதன் தொடர்பான நோய் தாக்குதல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து கால்நடை வளர்ப்போர்களுக்கு விளக்கப்பட உள்ளது. கிடேரி கன்றுகளுக்கான கருச்சிதைவு நோய் தடுப்பூசி மேற்கொள்ளப்பட உள்ளது. அத்துடன் சிறந்த கறவைப் பசு மற்றும் கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    விவசாயிகள் தங்கள் கால்நடைகளை சிறப்பு முகாம்களுக்கு அழைத்து வந்து இத்திட்டத்தின் மூலம் பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.

    • கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் கண்டறியப்படுகிறது.
    • கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, குடற்புழு நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர்அருகே பெரு ந்தரக்குடி ஊராட்சியில் கால்நடை மருந்தக கட்டடத்தினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் மற்றும் மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு கால்நடை மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

    இச்சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, மலட்டுதன்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடுதல், செயற்கைமுறை கருவூட்டல் உள்ளிட்ட வைகள் மேற்கொள்ளப்படு கிறது. மேலும், ஸ்கேன் மூலம் கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை கோளா றுகள் கண்டறியப்படுகிறது. இம்முகாமினை கால்நடை வளர்ப்போர்கள் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    அதனைதொடர்ந்து, கால்நடைகளுக்கான தாது உப்பு, தீவனங்கள், புல் கரணைகள் உள்ளிட்ட வைகளை கால்நடை வளர்ப்போரிடம் மாவட்ட கலெக்டர் வழங்கினார். வெள்ளாடு, நாய், ஆடு, மாடு உள்ளிட்ட 500 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பால் உற்பத்தியாளர் 3 நபர்க ளுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்போர்களை ஊக்குவிக்கும் விதமாக 3 நபர்களுக்கும் மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்கினார்.

    இந்நிகழ்வில், கொரடாச்சேரி ஒன்றி யக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், கால்நடை பராமரிப்பு துறையின் இணை இயக்குநர் ஹமீது அலி, ஊராட்சி மன்றத்தலைவர் மதிவாணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவி யாளர்கள் உடனிருந்தனர்.

    ×