search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகரசம்பேட்டையில் நாளை, கால்நடை மருத்துவ முகாம்
    X

    கலெக்டர் தீபக்ஜேக்கப்.

    நாகரசம்பேட்டையில் நாளை, கால்நடை மருத்துவ முகாம்

    • காலை 8 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • முகாமில் அனைத்து கால்நடை விவசாயிகளும் கலந்து கொண்டு பயனடையலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவிடைமருதூர் தாலுக்கா நாகரசம்பேட்டை

    கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நாளை ( சனிக்கிழமை ) காலை 8 மணிமுதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்), பால்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பல்கலைகழகம் ஆகியன இணைந்து நடத்தும் இச்சிறப்பு மருத்துவ முகாமில் கால்நடை மருத்துவ வல்லுநர்களால் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல், சினைப்பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல், சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை அளித்தல் ஆகியன இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளன.

    மேலும், முகாம் வளாகத்தில் கண்காட்சிகள், பால் உற்பத்தி மற்றும் தரம் அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்க கூட்டம் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு முகாமில் அனைத்து கால்நடை விவசாயிகளும், கலந்துக்கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×