search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா"

    • கஞ்சா புழக்கத்தை தடுக்க பள்ளிகள் அருகே போலீசார் ரோந்து தீவிரமாக நடந்து வருகிறது.
    • கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பாண்டியன்நகர் போலீசார் அவரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களிடம் கஞ்சா புழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பள்ளிகளின் அருகே கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த வாரத்தில் பள்ளிகளின் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சேத்தூரில் உள்ள ஒரு பள்ளியின் அருகில் வாலிபர் ஒருவர் சந்தேகத்தி ற்கிடமாக நின்றிருந்தார். போலீசார் அவரிடம் சோதனை செய்தபோது 60 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் சேத்தூர் மந்தை தெருவை சேர்ந்த சிவ கணேசன் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். விருதுநகர் ஆவுடையாபுரம் பள்ளி அருகில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும் படி நின்றிருந்த வாலிபர்க ளிடம் போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் 100 கிராம் கஞ்சா பொட்ட லங்கள் இருந்தது. விசார ணையில் அவர்கள் ஆர்.ஆர்.நகரை சேர்ந்த தமிழ ரசன்(33), துலுக்கப்பட்டியை சேர்ந்த குணசேகரன்(32) என்பது தெரியவந்தது. கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இருசக்கர வாக னத்தை பறிமுதல் செய்து வச்சகாரப்பட்டி போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த மூதாட்டியை சோதனை செய்தபோது 150 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம் பட்டி தேவர் சந்து பகுதியை சேர்ந்த இந்திரா(60) என்பது தெரியவந்தது. டவுன் போலீசார் அவரை கைது செய்தனர்.

    விருதுநகர் கருப்பசாமி கோவில் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது சின்னபேராலியை சேர்ந்த வினோத் குருநாதன் (23), 30 கிராம் கஞ்சாவுடன் சிக்கினார். கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பாண்டியன்நகர் போலீசார் அவரை கைது செய்தனர்.

    • சோதனைச்சாவடியில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது கஞ்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தனர்.

    கம்பம்:

    கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக போதை காளான், கஞ்சா எண்ணை போன்றவற்றை பயன்படுத்த கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வந்து செல்கின்றனர்.

    போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக-கேரள எல்லைப்பகுதியான குமுளியில் உள்ள சோதனைச்சாவடியில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் செண்ட் பாட்டில் வடிவத்தில் கஞ்சா எண்ணெய் இருந்தது தெரியவந்தது. காரை ஓட்டிவந்த கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த பிரசன்னா(21) என்பவரிடம் விசாரணை செய்தனர்.

    அப்போது அவர் கல்லூரி மாணவர் என்பதும், நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது கஞ்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தனர். போலீசார் கல்லூரி மாணவர் பிரசன்னாவை கைது செய்து கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்தனர். அவருடன் வந்த மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    • போலீசார் அதிரடி வேட்டை
    • கஞ்சா, லாட்டரி விற்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர்

    திருச்சி:

    திருச்சி மாநகரில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் வந்தன. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் திருச்சி எடமலைப்பட்டி புதூர், திருவரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் அப்பகுதிகளில் கஞ்சா விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன .

    இதே போல் திருச்சி கண்டோன்மெண்ட், உறையூர் பகுதிகளில் லாட்டரி விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருச்சி விமான நிலையம், தில்லை நகர் பகுதிகளில் சூதாட்டம் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களிடமிருந்து பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் போலீசாரின் அதிரடி வேட்டையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
    • 1.6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மேற்கு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சசிரேகா மற்றும் போலீசார் வடக்கு வாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது அங்குள்ள ஒரு வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டி ருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் வடக்கு வாசலை சேர்ந்த சூர்யா (வயது 23 ) என்பதும் கஞ்சா விற்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது. மேலும் சூர்யா மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் ரவுடி என்பதும் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து சூர்யாவிடம் இருந்து 1.6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    • கருர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூரில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்
    • ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது

    கரூர்,

    கருர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூரை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த பகுதியில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்த தேவா (வயது 35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, அவரிடம் இருந்து அரிவாள் ஒன்றையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பதின்வயதில் இப்போது தான் அடியெடுத்து வைத்திருக்கும் அவர்கள் அனைவரும் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர்.
    • மது மற்றும் கஞ்சா போதை தான் காவல் அதிகாரியையே தாக்கும் குருட்டுத்தனமான துணிச்சலை அவர்களுக்கு தந்திருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

    சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் ஐயத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த சிறுவர்களை விசாரித்த ராதாகிருஷ்ணன் நகர் காவல்நிலைய சார் ஆய்வாளர் பாலமுருகன், அந்த சிறுவர்களால் கொடூரமான வகையில் தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல் சார் ஆய்வாளர் பாலமுருகன், விரைவில் முழுமையான நலம் பெற்று பணிக்கு திரும்ப எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    காவல் சார் ஆய்வாளரே தாக்கப்பட்டிருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கும் முதல் செய்தி என்றால், இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் ஐந்து பேரும் பத்தாம் வகுப்பு பயிலும் சிறுவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் இரண்டாவது செய்தி ஆகும்.

    பதின்வயதில் இப்போது தான் அடியெடுத்து வைத்திருக்கும் அவர்கள் அனைவரும் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர் என்பது தான் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கும் மூன்றாவது செய்தி ஆகும். மது மற்றும் கஞ்சா போதை தான் காவல் அதிகாரியையே தாக்கும் குருட்டுத்தனமான துணிச்சலை அவர்களுக்கு தந்திருக்கிறது.

    கஞ்சா மற்றும் மதுவின் போதையிலிருந்து இளைஞர் சமுதாயத்தைக் காப்பதற்காக உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சுமார் 4.5 கி.மீ தொலைவில் கரை ஓரத்தில் 20 கஞ்சா பொட்டலங்கள் இன்று கரை ஒதுங்கி கிடந்தது.
    • மீனவர்கள் உடனடியாக சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை எனும் மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மீன்பிடி தொழில் பிரதான தொழில் ஆகும். இவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம்.

    இந்நிலையில், வழக்கம்போல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடற்கரைக்கு கிழக்கே சுமார் 4.5 கி.மீ தொலைவில் கரை ஓரத்தில் 20 கஞ்சா பொட்டலங்கள் இன்று கரை ஒதுங்கி கிடந்தது.

    இதனை கண்ட மீனவர்கள் உடனடியாக சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சுங்கத்துறை ஊழியர் ராமசுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 40 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தும்போது கஞ்சா பொட்டலங்கள் தவறி கடலில் விழுந்திருக்கலாம் எனவும், அவை கடலில் விழுந்து சுமார் 1 மாதம் ஆகி இருக்கலாம் எனவும், கஞ்சா பொட்டலங்களில் பாசி பிடித்துள்ளது எனவும் சுங்கத்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

    • கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செயத்னர்.
    • 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.5 ஆயிரம், இரண்டு செல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கவுண்டன்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் கவுண்டன்பட்டி மயானம் அருகில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் பிடிபட்டனர். அவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கார்த்திகேயன் (வயது 25), தேனியை சேர்ந்த சஞ்சய் குமார் (19), முத்து (24) மற்றும் மதுரை மாவட் டம் எம்.கல்லுப்பட் டியை புதியவன் (24) என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.5 ஆயிரம், இரண்டு செல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • நடுரோட்டில் போலீஸ்காரரை கத்தியை காட்டி மிரட்டினர்.
    • காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சபரி, சூர்யா, சந்தோஷ் ஆகிய 3 பேரை பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் திருமாவளவன் என்பவர் கோவில் திருவிழாவிற்கு வந்து இருந்தார். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த 3 வாலிபர்கள் திருமாவளவனிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டினர். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் கத்தியால் வெட்டி பணத்தை பறித்தனர்.

    இதில் காயம் அடைந்த திருமாவளவன் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்து போலீஸ்காரர் சரவணன் சம்பவம் நடந்த இடத்திற்கு விசாரிக்க வந்தார்.

    அவர் கஞ்சா போதையில் நின்ற வாலிபர்களிடம் வழிப்பறி செய்தது குறித்து விசாரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் நடுரோட்டில் போலீஸ்காரரை கத்தியை காட்டி மிரட்டினர். மேலும் அவரை குத்துவது போல் விரட்டினர்.

    கையில் லத்தி இருந்தும் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் சரவணன் அவர்களிடம் இருந்து பின்வாங்கினார். உடனே அவரை கத்தியை காட்டி மிரட்டியபடியே போதை வாலிபர்கள் ஓட ஓட விரட்டினர். பின்னர் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இந்த சம்பவம் நடந்ததுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கஞ்சா போதை வாலிபர்கள் போலீஸ்காரரை நடுரோட்டில் கத்தியை காட்டி மிரட்டி விரட்டும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்தவீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதற்கிடையே போலீஸ்காரரை மிரட்டியது தொடர்பாக காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சபரி, சூர்யா, சந்தோஷ் ஆகிய 3 பேரை பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • 2 மர்ம பொட்டலங்கள் கரை ஒதுங்கியதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • படகில் கடத்தி சென்றபோது தவறி விழுந்து கரை ஒதுங்கியதா?

    தரங்கம்பாடி:

    தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சின்னூர்பேட்டை மீனவ கிராமத்தில் கடற்கரையோரத்தில் 2 மர்ம பொட்டலங்கள் கரை ஒதுக்கி இருப்பதாக மீனவர்கள் கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தரங்கம்பாடி கடற்கரையோர காவல்நிலைய போலீசார் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    இந்நிலையில் சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடற்கரையோரம் ஒருபொட்டலம் கரை ஓதுங்கியதாக தகவல் கிடைத்து கடலோர காவல்படை போலீசார் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில், சம்பவ இடத்திற்கு சென்று அந்த பொட்டலங்களை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது. தரங்கம்பாடி கடற்கரையை ஒட்டிய கிராமங்களில் அடுத்தடுத்து கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கியதால் யாராவது படகில் கடத்திவந்தபோது வீசி சென்றார்களா அல்லது படகில் கடத்தி சென்றபோது தவறிவிழுந்து கரை ஒதுங்கியதா என்ற கோணத்தில் கடலோர காவல்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • திருச்சியில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

    திருச்சி,

    திருச்சி மாநகர பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கவும்,தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.அதன்படி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ரவிக்குமார் (வயது 61) என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உள்ளனர்.இதே போன்று பாலக்கரை பகுதி பீமநகர் பொது கழிப்பிடம் அருகில் கஞ்சா விற்று கொண்டிருந்த கோரிமேடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (24)என்ற வாலிபரை பாலக்கரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.திருச்சி கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பட்டவரத் ரோடு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மேல சிந்தாமணி பகுதியில் சேர்ந்த சிவகுரு (22) என்ற வாலிபரை கோட்டை போலீஸ் கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உள்ளனர்.தில்லைநகர் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சிவா ( 22)என்பவரை தில்லைநகர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். உறையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட புத்தூர் நால்ரோடு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பிரபாகரன் (43) என்பவரை ஒரே ஒரு போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

    • குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
    • போதை தலைக்கேறிய நிலையில் இருந்த நாங்கள் அரிவாளுடன் கவுன்சிலர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தோம்

    கோவை:

    கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அவ்வை நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது 44). தி.மு.க.வை சேர்ந்த இவர் மலுமச்சம்பட்டி ஊராட்சியில் கவுன்சிலராக உள்ளார்.

    இவர்களது மகன் மோகன் (24). நேற்று முன்தினம் இரவு இவர்களது வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த ரவிக்குமார், கவுன்சிலர் சித்ரா, மோகன் ஆகியோரை தலை மற்றும் உடலில் அரிவாளால் வெட்டி விட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தி.மு.க. கவுன்சிலரை வீடு புகுந்து வெட்டிய மலுமிச்சம்பட்டியை சேர்ந்த ராஜன் என்ற ராஜா (23), பிச்சைபாண்டி (23), வைசியாள் வீதியை சேர்ந்த முத்துப்பாண்டி (24), அம்மா நகரை சேர்ந்த மகேஷ் கண்ணன் (22), தெற்கு உக்கடத்தை சேர்ந்த ஸ்ரீரக்சித் (18) ஆகியோரை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட ராஜன், பிச்சைபாண்டி, முத்துப்பாண்டி ஆகியோர் மீது ஏற்கனவே கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

    5 பேரிடம் தி.மு.க. கவுன்சிலர் மற்றும் அவரது கணவர், மகனை வீடு புகுந்து வெட்டியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நாங்கள் 5 பேரும் கவுன்சிலர் வீட்டின் பின் புறத்தில் உள்ள காலி இடத்தில் இரவு நேரத்தில் மது அருந்துவோம். அப்போது கஞ்சாவும் பிடிப்போம். இதனை பார்த்த சித்ரா எங்களை போலீசில் பிடித்து கொடுத்து விடுவதாக மிரட்டி வந்தார். மேலும் இங்கு வைத்து கஞ்சா மது அடிக்க கூடாது என எச்சரித்து வந்தார். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை வீடு புகுந்து கொலை செய்வது என முடிவு செய்தோம்.

    சம்பவத்தன்று இரவு நாங்கள் 5 பேரும் ஒன்றாக சேர்ந்து கஞ்சா குடித்தோம். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த நாங்கள் அரிவாளுடன் கவுன்சிலர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தோம். எங்களை பார்த்த கவுன்சிலரின் கணவர் ரவிக்குமார் சத்தம் போட்டார். அப்போது அவரை நாங்கள் வெட்டினோம். கணவரின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த கவுன்சிலர் சித்ராவையும் வெட்டினோம். இதனை தடுக்க வந்த அவரது மகனையும் வெட்டி விட்டு தலைமறைவாக இருந்தோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

    பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×