search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா புழக்கத்தை தடுக்க பள்ளிகள் அருகே போலீசார் ரோந்து தீவிரம்
    X

    கஞ்சா புழக்கத்தை தடுக்க பள்ளிகள் அருகே போலீசார் ரோந்து தீவிரம்

    • கஞ்சா புழக்கத்தை தடுக்க பள்ளிகள் அருகே போலீசார் ரோந்து தீவிரமாக நடந்து வருகிறது.
    • கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பாண்டியன்நகர் போலீசார் அவரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களிடம் கஞ்சா புழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பள்ளிகளின் அருகே கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த வாரத்தில் பள்ளிகளின் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சேத்தூரில் உள்ள ஒரு பள்ளியின் அருகில் வாலிபர் ஒருவர் சந்தேகத்தி ற்கிடமாக நின்றிருந்தார். போலீசார் அவரிடம் சோதனை செய்தபோது 60 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் சேத்தூர் மந்தை தெருவை சேர்ந்த சிவ கணேசன் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். விருதுநகர் ஆவுடையாபுரம் பள்ளி அருகில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும் படி நின்றிருந்த வாலிபர்க ளிடம் போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் 100 கிராம் கஞ்சா பொட்ட லங்கள் இருந்தது. விசார ணையில் அவர்கள் ஆர்.ஆர்.நகரை சேர்ந்த தமிழ ரசன்(33), துலுக்கப்பட்டியை சேர்ந்த குணசேகரன்(32) என்பது தெரியவந்தது. கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இருசக்கர வாக னத்தை பறிமுதல் செய்து வச்சகாரப்பட்டி போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த மூதாட்டியை சோதனை செய்தபோது 150 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம் பட்டி தேவர் சந்து பகுதியை சேர்ந்த இந்திரா(60) என்பது தெரியவந்தது. டவுன் போலீசார் அவரை கைது செய்தனர்.

    விருதுநகர் கருப்பசாமி கோவில் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது சின்னபேராலியை சேர்ந்த வினோத் குருநாதன் (23), 30 கிராம் கஞ்சாவுடன் சிக்கினார். கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பாண்டியன்நகர் போலீசார் அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×