search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுபோதையில் காவல் அதிகாரியை தாக்கும் அளவுக்கு தமிழ்நாடு மாறி உள்ளது: ராமதாஸ் வேதனை
    X

    மதுபோதையில் காவல் அதிகாரியை தாக்கும் அளவுக்கு தமிழ்நாடு மாறி உள்ளது: ராமதாஸ் வேதனை

    • பதின்வயதில் இப்போது தான் அடியெடுத்து வைத்திருக்கும் அவர்கள் அனைவரும் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர்.
    • மது மற்றும் கஞ்சா போதை தான் காவல் அதிகாரியையே தாக்கும் குருட்டுத்தனமான துணிச்சலை அவர்களுக்கு தந்திருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

    சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் ஐயத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த சிறுவர்களை விசாரித்த ராதாகிருஷ்ணன் நகர் காவல்நிலைய சார் ஆய்வாளர் பாலமுருகன், அந்த சிறுவர்களால் கொடூரமான வகையில் தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல் சார் ஆய்வாளர் பாலமுருகன், விரைவில் முழுமையான நலம் பெற்று பணிக்கு திரும்ப எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    காவல் சார் ஆய்வாளரே தாக்கப்பட்டிருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கும் முதல் செய்தி என்றால், இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் ஐந்து பேரும் பத்தாம் வகுப்பு பயிலும் சிறுவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் இரண்டாவது செய்தி ஆகும்.

    பதின்வயதில் இப்போது தான் அடியெடுத்து வைத்திருக்கும் அவர்கள் அனைவரும் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர் என்பது தான் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கும் மூன்றாவது செய்தி ஆகும். மது மற்றும் கஞ்சா போதை தான் காவல் அதிகாரியையே தாக்கும் குருட்டுத்தனமான துணிச்சலை அவர்களுக்கு தந்திருக்கிறது.

    கஞ்சா மற்றும் மதுவின் போதையிலிருந்து இளைஞர் சமுதாயத்தைக் காப்பதற்காக உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×