என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கொடைக்கானலில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்திய கல்லூரி மாணவர்
- சோதனைச்சாவடியில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது கஞ்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தனர்.
கம்பம்:
கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக போதை காளான், கஞ்சா எண்ணை போன்றவற்றை பயன்படுத்த கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வந்து செல்கின்றனர்.
போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக-கேரள எல்லைப்பகுதியான குமுளியில் உள்ள சோதனைச்சாவடியில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் செண்ட் பாட்டில் வடிவத்தில் கஞ்சா எண்ணெய் இருந்தது தெரியவந்தது. காரை ஓட்டிவந்த கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த பிரசன்னா(21) என்பவரிடம் விசாரணை செய்தனர்.
அப்போது அவர் கல்லூரி மாணவர் என்பதும், நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது கஞ்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தனர். போலீசார் கல்லூரி மாணவர் பிரசன்னாவை கைது செய்து கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்தனர். அவருடன் வந்த மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.