search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கரை ஒதுங்கிய 40 கிலோ கஞ்சா பொட்டலங்கள்- சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரணை
    X

    கரை ஒதுங்கிய 40 கிலோ கஞ்சா பொட்டலங்கள்- சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரணை

    • சுமார் 4.5 கி.மீ தொலைவில் கரை ஓரத்தில் 20 கஞ்சா பொட்டலங்கள் இன்று கரை ஒதுங்கி கிடந்தது.
    • மீனவர்கள் உடனடியாக சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை எனும் மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மீன்பிடி தொழில் பிரதான தொழில் ஆகும். இவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம்.

    இந்நிலையில், வழக்கம்போல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடற்கரைக்கு கிழக்கே சுமார் 4.5 கி.மீ தொலைவில் கரை ஓரத்தில் 20 கஞ்சா பொட்டலங்கள் இன்று கரை ஒதுங்கி கிடந்தது.

    இதனை கண்ட மீனவர்கள் உடனடியாக சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சுங்கத்துறை ஊழியர் ராமசுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 40 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தும்போது கஞ்சா பொட்டலங்கள் தவறி கடலில் விழுந்திருக்கலாம் எனவும், அவை கடலில் விழுந்து சுமார் 1 மாதம் ஆகி இருக்கலாம் எனவும், கஞ்சா பொட்டலங்களில் பாசி பிடித்துள்ளது எனவும் சுங்கத்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×