search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரவு"

    • குற்ற சம்பவங்கள் நடக்கும் முக்கியமான வீதி பகுதி மற்றும் தெருக்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும்.
    • காவலர்களை கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பொன்னேரி:

    ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர். இவர் மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர் பஜார் வீதி, அத்திப்பட்டு, அத்திப்பட்டு புது நகர் பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள புறக்காவல் நிலையத்தை பார்வையிட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அதிக குற்ற சம்பவங்கள் நடக்கும் இடங்களை கமிஷனர் சங்கர் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குற்ற சம்பவங்கள் நடக்கும் முக்கியமான வீதி பகுதி மற்றும் தெருக்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பழுதான கேமராக்களை அகற்றி புதிய கேமராக்கள் பொருத்த வேண்டும். போக்கு வரத்திற்கு இடையூறாக சாலையில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும். காவலர்களை கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கவும் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழவேற்காடு மீஞ்சூர் நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் மாடுகள் காணப்படுவதால் அதிகமாக விபத்துக்கள் உயிரிழப்புகள் ஏற்படுவதால் முதலாவதாக மாட்டின் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு பின்னர் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், உதவி கமிஷனர் ராஜராபர்ட், போக்குவரத்து துணை கமிஷனர் ஜெயலட்சுமி, உதவி ஆணையர் மலைச்சாமி, இன்ஸ்பெக்டர் சோபிதாஸ்,மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் முத்துக்குமார் உடன் இருந்தனர்.

    • வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.
    • 24 மணி நேரமும் செயல்படும் வகையில் போதிய ஊழியர்களுடன் கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க வேண்டும்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பாக, அதிகாரிகள் உடனான ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா மற்றும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலெக்டர் கிராந்திகுமார் கூட்டத்தில் பேசுகையில் கூறியதாவது:-

    கோவையில் வடகிழக்கு பருவமழை வெகுவிரைவில் தொடங்க உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள சப்-கலெக்டர், கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் போதிய ஊழியர்களுடன் கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க வேண்டும்.

    மேலும் வெள்ளம், இயற்கை இடர்பாடுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 0422-1077 டோல்பிரீ எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும்.

    நீர்வழித்த டங்களில் ஆக்கிரப்புகள் இருந்தால் அவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும். பேரூர் நொய்யல் மற்றும் மேட்டுப்பா ளையம் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, தகுந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அணை களிலும் அதிகாரிகள் ஆய்வுசெய்து தண்ணீர் கொள்ளளவு, அணையின் உறுதித்தன்மை ஆகிய வற்றை உறுதிப்படுத்த வேண்டும்.

    வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொது மக்களை தங்க வைப்பதற்கான பணிகளில் அதிகாரிகள் முன்கூட்டியே ஈடுபட வேண்டும். இதற்காக அந்தந்த பகுதிகளில் திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு கூட்டங்களை தேர்வு செய்து அங்கு தங்க வைக்க வேண்டும். அப்போது அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தரும் வகையில் அதிகாரிகள் தனித்தனி குழுக்களை அமைத்து செயல்பட வேண்டும்.

    இதன்ஒருபகுதியாக அந்தந்த பகுதிகளில் உள்ள தாசில்தார்கள் தலைமையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பி.டி.ஓ ஆகியோர் அடங்கிய குழு அமைக்க வேண்டும். வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் போலீசார், தீயணைப்பு படை, ஊரக வளர்ச்சி, கால்நடை, வேளாண்-தோட்டக்கலை மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    கிராம நிர்வாக அதிகாரிகள் தலைமையில் ஊராட்சி செயலர், அங்க ன்வாடி-சத்துணவு அமைப்பாளர்கள், வனக்காவலர்கள் ஆகியோர் குழுவாக ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டது.
    • நீதிபதி, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்த ரவிட்டார்.

    மதுரை

    கேரள மாநிலம் கொல் லத்தைச் சேர்ந்த இந்தியன் டிரைவர்ஸ் சொசைட்டி பொதுச்செயலாளர் நாக ராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கேரளா மற்றும் தமிழ்நாடு முழுமைக்கும் வாகனங் களை இயக்குகிறோம். கேர ளாவின் பெரும்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள் ளதால், பெரும்பாலான பகுதி சுற்றுச்சூழல் உணர்தி றன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இத னால், குவாரி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் நடக்கும் கட்டுமானப் பணிகள் சாலைப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிக ளுக்குத் தேவையான கிரா வல் ஜல்லிகற்கள், எம். சாண்ட், குவாரி தூசி மற்றும் மணலுக்கு தமிழ்நாட்டின் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தையே சார்ந்துள் ளோம். தமிழ்நாட் டின் உத வியின்றி கேரளாவின் உள் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது.

    ஜிஎஸ்டி, நடைசீட்டு உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகளின் உரிய அனு மதியுடன் தான் தமிழ்நாட்டில் இருந்து கனிமங்கள் கேரளா விற்கு கொண்டு செல்லப்ப டுகிறது. இந்நிலையில் தென் காசி மாவட்டம் புளியரை செக்போஸ்ட் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் புளியரை இன்ஸ்பெக்டர் மற்றும் கனிமவன அதிகாரி கள் உள்ளிட்டோர் 10 சக்க ரங்களுக்கு மேல் உள்ள லாரிகளில் கனிமங்கனை கொண்டு செல்ல மறுக்கின்ற னர்.

    கன்னியாகுமரி மாவட் டம் புளியரை களியக்கா விளை, தேனி மாவட்டம் கம்பம் மெட்டு மற்றும் கோவை மாவட்டம் வாலை யார் செக்போஸ்ட்டுகளில் இந்த வாகனங்களுக்கு அனு மதி மறுக்கப்படுகிறது. புளியரை செக் போஸ்ட்டை மட்டும் நம்பி தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள பல்லாயிரம் குடும்பத்தினர் வாழ்வாதாரம் பாதித்துள்ள னர்.

    எனவே தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங் களில் இருந்து 10 சக்கரங்க ளுக்கு மேற்பட்ட வாகனங்க ளில் புளியரை சோதனை சாவடி வழியாக கனிமங்கள் கொண்டு செல்ல அனு மதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த தமிழக அர சுக்கு அதிகாரம் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது

    இதனை தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவ காசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, தென் காசி புளியரை பகுதியில் 10 சக்கரத்திற்கு மேற்பட்ட லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லக் கூடாது என்ற தமிழக அரசின் உத்த ரவிற்கு இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தர விட்ட நீதிபதி, வழக்கு விசா ரணையை நான்கு வாரங்க ளுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    • தஞ்சை மாநகராட்சி ஆணையர் கரூர் மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • மாநகராட்சி நிர்வாக இயக்குனரக முதன்மை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல் ஆகிய 3 மாநக ராட்சிகளின் ஆணையர்கள் நிர்வாக காரணத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டு ள்ளனர். அதன்படி தஞ்சை மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார் கரூர் மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோல் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், திண்டுக்கல் மாநகராட்சிக்கும், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, தஞ்சை மாநகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகராட்சி நிர்வாக இயக்குனரக முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்தார்.

    • குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
    • தண்ணீர் திருட்டை ஒழிக்க ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

    உடுமலை:

    4-வது மண்டல பாசனத்துக்கு பாலாறு உபவடி நில பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்த திருமூர்த்தி நீர்த்தேக்க குழுவின் பகிர்மான குழு (எண்:7) கூட்டம், பொங்கலூர் செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார்.பி.ஏ.பி., தொகுப்பு அணைகளின் நீர் இருப்பு மற்றும் எதிர்பார்ப்பு நீர்வரத்து மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.

    நாளை 20ந் தேதி முதல், 4வது மண்டல பாசனத்துக்கு நிலுவையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்யவும், உயிர் நீராக ஒரு சுற்று தண்ணீர் திறக்க வேண்டும்.மழை பெய்து கூடுதல் நீர் கிடைத்தால் அதற்கு ஏற்ப தண்ணீர் வழங்கலாம். கால்வாயில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது கோவை - திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

    தண்ணீர் திருட்டை ஒழிக்க ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும். கிளை கால்வாய்களில் பாசன சங்கங்கள் வாயிலாக சுத்தம் செய்து கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய வேலை உறுதி திட்டத்தில் கால்வாய்களை சுத்தம் செய்ய ஆவண செய்ய வேண்டும்.

    உட்பிரிவு செய்யாத உபகிளை வாய்க்கால்கள் மற்றும் பகிர்வு வாய்க்கால்களை உட் பிரிவு செய்ய மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 30 படுக்கைகள், அறுவை சிகிச்சை மையத்துடன் செயல்பட்டு வந்த 1989 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டடம் உள்ளது.
    • நூற்றுக்கணக்கானோா் காத்திருக்கும் சமயத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது

    வெள்ளக்கோவில்:

    வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் 30 படுக்கைகள், அறுவை சிகிச்சை மையத்துடன் செயல்பட்டு வந்த 1989 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டடம் உள்ளது. இது மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால் கடந்த 7 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.

    இதன் அருகில் தற்போது வெளி நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கானோா் காத்திருக்கும் சமயத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சிதிலமடைந்த கட்டடத்தை இடித்து தருமாறு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு சுகாதார நிலையம் சாா்பில் பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை.

    இது குறித்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதைத் தொடா்ந்து தாராபுரம் கோட்டாட்சியா் செந்தில் அரசன் உத்தரவின்பேரில்,பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) உதவிப் பொறியாளா் ராமராஜ் ஆய்வு செய்து அந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளாா்.

    • மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 19 மனுக்களும், இதர மனுக்கள் 225 ஆக மொத்தம் 622 மனுக்கள் பெறப்பட்டன.
    • ரமா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கடலூர், செப்.12-

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவல ர்களுடன் மாவட்ட கலெ க்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவி த்தொகை, மாற்றுதிறனாளி கள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.

    நேற்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில், பட்டா தொடர்பாக 142 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 44 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 59 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 63 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 38 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 32 மனுக்களும், மாற்றுத்தி றனாளி நல அலுவலகம் தொடர்பாக 19 மனுக்களும், இதர மனுக்கள் 225 ஆக மொத்தம் 622 மனுக்கள் பெறப்பட்டன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதா ரருக்கு தீர்வு வழங்க வேண்டும். மேலும் உதவி த்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடி ப்படை வசதிகள் குறி த்தான மனு க்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறை களுக்கு உட்பட்டு விரைந்து நடவ டிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ சேகரன், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) ரமா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏல விற்பனை சொத்துகளை பதிவு செய்ய 11 சதவீத கட்டணம் வசூலிக்க தடை நீட்டிக்கப்பட்டது.
    • இந்த வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பு வக்கீல் கால அவகாசம் கோரினார்.

    மதுரை

    மதுரையை சேர்ந்த வக்கீல் செந்தில் குமாரையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    பல்வேறு சூழ்நிலைகளால் ஒரு நபரின் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டு அந்த சொத்துக்கள் கடன் வசூல் தீர்ப்பாயம் மற்றும் கோர்ட்டு, வருவாய்துறை மூலம் ஏலம் விடப்படுகிறது.

    அவ்வாறு, ஏலம் விடப் படும் போது ஏலத்தில் கலந்து கொண்டு சொத்துக் களை வாங்கும் நபர், ஏலத் தில் வாங்கிய விற்பனை சான்றிதழை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    தற்போது விற்பனைச் சான்றிதழை பதிவு செய்யும் போது சொத்தின் சந்தை மதிப்பில் 11 சதவீதத்தை பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும் என பதிவுத்துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் அரசானை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதி ரானது.

    இதனால், ஏலத்தில் சொத்து வாங்கியவர் கூடு தல் நிதி சுமை ஏற்படும். எனவே, இந்த அரசாணை யை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தர விட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந் தது.

    அப்போது இந்த வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பு வக்கீல் கால அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கில் பிறப் பித்த இடைக்கால தடையை நீடித்து, வழக்கை 4 வாரங் களுக்கு ஒத்திவைத்தனர்.

    • திருப்புவனம் ஆதிகோரக்கநாதர் கோவில் கும்பாபிஷேக பணியை தொடரலாம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கு விசா ரணை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

    மதுரை

    மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆதி கோரக்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை யான நூற்றாண்டுகள் கடந்த கோவிலாகும். இந்தக் கோவில் 2 சமூகத்திற்கு சார்ந்த கோவில். இந்த சமூகத்தை சார்ந்த இரு பிரிவினர் தொடர்ந்து கோவில் அறங்காவலராக இருந்து வந்த சூழலில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட நிர்வாக பிரச்சினை காரணமாக தற்போது சிவகங்கை மாவட்ட இந்து அறநிலை யத்துறை இணை ஆணையர் மேற்பார்வையில் கோவில் நிர்வாகம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த கோவிலில் 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வது நடைமுறை. அதன் அடிப்படையில் இந்த வருடம் வரும் செப்டம்பர் 3-ந்தேதி நடத்துவதற்கு அமைக்கப் பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் திருப்பணி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என மற்றொரு தரப்பை சேர்ந்த முத்து கணேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்து தனி நீதிபதியிடம் தடை உத்தரவு பெற்றார்.

    இதனால் கும்பாபிஷேக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து அனைத்து தரப்பு மக்களும் நாங்களும் வழிபாடு செய்வதற்கு ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட அதிகாரி களால் கும்பாபிஷேக பணியை தொடர அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகி யோர் அமர்வில் விசார ணைக்கு வந்தது. விசா ரணை செய்த நீதிபதிகள் தற்போது கோவில் நிர்வாகம் இந்து சமய அறநிலைத்துறை கீழ் உள்ளது. இதனை எதிர்த்து எதிர்மனுதாரர் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை.

    மேலும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்ப ணிகள் செய்ய தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது.

    கோவில் கும்பாபிஷேக திருகுழுபணிகளை அதிகாரிகள் தொடர்ந்து செய்யலாம். திட்டமிட்டபடி கோவில் கும்பாபிஷேகத்தை 3.9.2023 நடத்திக் கொள்ள லாம் என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் கும்பாபிஷேக பணிக்கு யாரேனும் தடையாக இருந்தால் எந்த நேரத்திலும் நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கு விசா ரணை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

    • விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.
    • போதையில் இருந்ததாக கூறி 2002-ம் ஆண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் சுமதி. இவர் கடந்த 2016-ம் ஆண்டில் மதுரை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:-

    எனது கணவர் தலைமை காவலராக பணிபுரிந்தார். பணியின்போது போதையில் இருந்ததாக கூறி 2002-ம் ஆண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டார். மீண்டும் பணியில் சேர்க்குமாறு கோரி பலமுறை மனு அளித்தும் ஏற்கப்படவில்லை.

    இந்த நிலையில் 2009-ல் அவர் உயிரிழந்தார். இதையடுத்து என் கணவருக்கு கிடைக்க வேண்டிய கருணை தொகையை கேட்டு வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் கருணை தொகை வழங்கும்படி 2016-ல் தீர்ப்பளிக்கப்பட்து. ஆனால் கருணை தொகை வழங்கப்படவில்லை. எனவே எனக்கு கருணை தொகை வழங்கும்படி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி பட்டுதேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில், கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இப்போதும் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்படு கிறது. இதனால் விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த பணத்தை தமிழ்நாடு புதுச்சேரி சேமநல நிதிக்கு வழங்கி அதற்கான ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். வழக்கை தாமதப்ப டுத்திய போலீஸ் சூப்பிரண்டு பணியில் இருந்தாலும், ஓய்வு பெற்றிருந்தாலும் அவரிடம் இருந்து பெற்று கொள்ள வேண்டும் என கூறி வழக்கை வருகிற 9-ந்தேதிக்கு தள்ள வைத்தார்.

    • பள்ளிகளில் 15 நாட்களுக்கு மேல் விடுப்பில் உள்ளவர்களை பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
    • வீட்டிற்கே சென்று பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ந்து பள்ளிக்கு வரவழைக்க முடிவு.

    தாராபுரம்:

    பள்ளிகளில் 15 நாட்களுக்கு மேல் விடுப்பில் உள்ளவர்களை இடைநிற்றல் தழுவ வாய்ப்புள்ளவர்களாக கருதி பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் இடைநிற்றல் தழுவியோருக்கான சிறப்பு கணக்கெடுப்பு இம்மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது.வழக்கமாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 1ந் தேதி வரை நடத்த வேண்டும்.

    இதற்கு பிறகும் பள்ளிகளில் சேராதவர்களை கண்டறிந்து, அவர்கள் தொடர்ந்து கல்வி பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.சமீபத்தில் சுதந்திர தினத்தன்று நடந்த கிராமசபை கூட்டத்திலும், இடைநிற்றல் இன்றி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில் பள்ளிக்கு தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தவர்களின் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவர்கள் இடைநிற்றல் தழுவ வாய்ப்புள்ளதால் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான சிறப்பு கணக்கெடுப்பு திட்டத்தின் வாயிலாக உரிய மாணவர்களின் வீட்டிற்கே சென்று பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ந்து பள்ளிக்கு வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:- வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஓட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை அன்று மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    ×