திருப்புவனம் ஆதிகோரக்கநாதர் கோவில் கும்பாபிஷேக பணி தொடரலாம்

திருப்புவனம் ஆதிகோரக்கநாதர் கோவில் கும்பாபிஷேக பணியை தொடரலாம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கு விசா ரணை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
திருப்புவனம் ஆதிகோரக்கநாதர் கோவில் கும்பாபிஷேக பணி தொடரலாம்
Published on

மதுரை

மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆதி கோரக்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை யான நூற்றாண்டுகள் கடந்த கோவிலாகும். இந்தக் கோவில் 2 சமூகத்திற்கு சார்ந்த கோவில். இந்த சமூகத்தை சார்ந்த இரு பிரிவினர் தொடர்ந்து கோவில் அறங்காவலராக இருந்து வந்த சூழலில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட நிர்வாக பிரச்சினை காரணமாக தற்போது சிவகங்கை மாவட்ட இந்து அறநிலை யத்துறை இணை ஆணையர் மேற்பார்வையில் கோவில் நிர்வாகம் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த கோவிலில் 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வது நடைமுறை. அதன் அடிப்படையில் இந்த வருடம் வரும் செப்டம்பர் 3-ந்தேதி நடத்துவதற்கு அமைக்கப் பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் திருப்பணி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என மற்றொரு தரப்பை சேர்ந்த முத்து கணேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்து தனி நீதிபதியிடம் தடை உத்தரவு பெற்றார்.

இதனால் கும்பாபிஷேக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து அனைத்து தரப்பு மக்களும் நாங்களும் வழிபாடு செய்வதற்கு ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட அதிகாரி களால் கும்பாபிஷேக பணியை தொடர அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகி யோர் அமர்வில் விசார ணைக்கு வந்தது. விசா ரணை செய்த நீதிபதிகள் தற்போது கோவில் நிர்வாகம் இந்து சமய அறநிலைத்துறை கீழ் உள்ளது. இதனை எதிர்த்து எதிர்மனுதாரர் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை.

மேலும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்ப ணிகள் செய்ய தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது.

கோவில் கும்பாபிஷேக திருகுழுபணிகளை அதிகாரிகள் தொடர்ந்து செய்யலாம். திட்டமிட்டபடி கோவில் கும்பாபிஷேகத்தை 3.9.2023 நடத்திக் கொள்ள லாம் என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் கும்பாபிஷேக பணிக்கு யாரேனும் தடையாக இருந்தால் எந்த நேரத்திலும் நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கு விசா ரணை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com