search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிதிலமடைந்த  கட்டிடத்தை  இடித்து அப்புறப்படுத்த உத்தரவு
    X

    கோப்பு படம்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிதிலமடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த உத்தரவு

    • 30 படுக்கைகள், அறுவை சிகிச்சை மையத்துடன் செயல்பட்டு வந்த 1989 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டடம் உள்ளது.
    • நூற்றுக்கணக்கானோா் காத்திருக்கும் சமயத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது

    வெள்ளக்கோவில்:

    வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் 30 படுக்கைகள், அறுவை சிகிச்சை மையத்துடன் செயல்பட்டு வந்த 1989 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டடம் உள்ளது. இது மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால் கடந்த 7 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.

    இதன் அருகில் தற்போது வெளி நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கானோா் காத்திருக்கும் சமயத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சிதிலமடைந்த கட்டடத்தை இடித்து தருமாறு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு சுகாதார நிலையம் சாா்பில் பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை.

    இது குறித்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதைத் தொடா்ந்து தாராபுரம் கோட்டாட்சியா் செந்தில் அரசன் உத்தரவின்பேரில்,பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) உதவிப் பொறியாளா் ராமராஜ் ஆய்வு செய்து அந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளாா்.

    Next Story
    ×