search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IMPLEMENT"

    • திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
    • மாவட்ட செயலாளா் ஆா்.சித்ரா, மாவட்ட பொருளாளா் சத்தியசீலன் மற்றும் மாவட்ட துணை செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:- 1999-ம் ஆண்டு வழங்கப்பட்டு, கடந்த 23 ஆண்டுகளாக பெற்று வந்த கருணை அடிப்படையிலான வாரிசுக்கு வேலை கடந்த மாா்ச் 8-ந்தேதி நிறுத்தப்பட்டதை திரும்ப வழங்க வேண்டும். 7-வது ஊதிய குழு மாற்றுத் திறனாளி கிராம உதவியாளா்களுக்கு வழங்கிய எரிபொருள் படி ரூ. 2 ஆயிரத்து 500-ஐ நிறுத்தம் செய்ததை திரும்ப வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு என்பதை 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும். ஓட்டுநா் உரிமம் வைத்திருக்கும் கிராம ஊழியா்களுக்கு ஊா்தி ஓட்டுநா் பதவி உயா்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள கிராம ஊழியா்கள் பணியிடத்தை தோ்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும். அதில் குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு என நிா்ணயம் செய்ய வேண்டும். கடந்த ஜனவரியில் 2 ஆயிரத்து 748 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு, புதிதாக பணிக்கு வந்தவா்களுக்கு முறையாக சிபிஎஸ்., கணக்கு எண் வழங்கி ஊதியம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா். அப்போது வருவாய் கிராம ஊழியா் சங்க மாவட்ட தலைவா் கே.நடராஜன், மாவட்ட செயலாளா் ஆா்.சித்ரா, மாவட்ட பொருளாளா் சத்தியசீலன் மற்றும் மாவட்ட துணை செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
    • தண்ணீர் திருட்டை ஒழிக்க ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

    உடுமலை:

    4-வது மண்டல பாசனத்துக்கு பாலாறு உபவடி நில பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்த திருமூர்த்தி நீர்த்தேக்க குழுவின் பகிர்மான குழு (எண்:7) கூட்டம், பொங்கலூர் செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார்.பி.ஏ.பி., தொகுப்பு அணைகளின் நீர் இருப்பு மற்றும் எதிர்பார்ப்பு நீர்வரத்து மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.

    நாளை 20ந் தேதி முதல், 4வது மண்டல பாசனத்துக்கு நிலுவையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்யவும், உயிர் நீராக ஒரு சுற்று தண்ணீர் திறக்க வேண்டும்.மழை பெய்து கூடுதல் நீர் கிடைத்தால் அதற்கு ஏற்ப தண்ணீர் வழங்கலாம். கால்வாயில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது கோவை - திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

    தண்ணீர் திருட்டை ஒழிக்க ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும். கிளை கால்வாய்களில் பாசன சங்கங்கள் வாயிலாக சுத்தம் செய்து கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய வேலை உறுதி திட்டத்தில் கால்வாய்களை சுத்தம் செய்ய ஆவண செய்ய வேண்டும்.

    உட்பிரிவு செய்யாத உபகிளை வாய்க்கால்கள் மற்றும் பகிர்வு வாய்க்கால்களை உட் பிரிவு செய்ய மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா பயணத்தை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது.
    • அலுவலர் சங்க விழா வெங்கடேசபுரத்தில் நடந்தது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க விழா வெங்கடேசபுரத்தில் நடந்தது. விழாவிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் மணி வரவேற்றார். செயலாளர் மருதமுத்து சங்கத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில செயலாளர் முத்துக்குமரவேலு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரின் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் மேன்மேலும் வளர சங்கத்தின் சார்பில் பாராட்டப்படுகிறது. தமிழ்நாடு அரசு 2017-ல் அறிவிக்கப்பட்ட ஊதியக்குழுவின் நிலுவை தொகையை அனுமதித்து வழங்க வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சமாகவும், மருத்துவப்படியை ரூ.ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். அகவிலைப்படியை மத்திய அரசு வழங்கும் நாள் முதலே நிலுவையின்றி வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் அனைவருக்கும் அரசு பஸ்களில் கட்டணமில்லா பயணத்தை அமல்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும். பொங்கல் பரிசு தொகையாக ஓய்வூதியர்களுக்கு ரூ.ஆயிரமாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கண்புரை சிகிச்சைக்கு அரசாணைப்படி ரூ.30 ஆயிரம் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன."

    • பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்த ஊரக வளர்ச்சித்துறை சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
    • மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதுப்போல 3 சதவீத அகவிலைப்படி அறிவித்து ரொக்கமாக வழங்கவேண்டும்

    கரூர்:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க 6-வது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் ஆ.மனோகரன் தலைமையில் கரூர் தனியார் ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் எம்.பழனியப்பன், மாநில செயலாளர் எஸ்.ராஜசேகர், தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் மு.மகாவிஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    மாவட்ட துணைத்தலைவர் மா.பரமேஸ்வரன், முன்னாள் மாவட்டத்தலைவர் தி.திருஞானசம்பந்தம், மாவட்ட செயலாளர் மா.சரவணன், மாவட்ட பொருளாளர் ம.தமிழ்வாணன், மாவ ட்ட தணிக்கையாளர்கள் டி.சுரேஷ், வெ.சஞ்சய்காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் எஸ்.ரமேஷ் நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் நா.வெங்கடாசலம் வரவேற்றார். மாவட்ட இணைச்செயலாளர் சு.சரிதா நன்றி கூறினார்.

    கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதுப்போல 3 சதவீத அகவிலைப்படி அறிவித்து ரொக்கமாக வழங்கவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய் வூதியத் திட்டத்தை அமல்படு த்தப்படவேண்டும். பணி மேற்பார்வையாளர்களுக்கு பட்டியல் மதிப்பீ ட்டு வரம்பு தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசு ஆணை வழங்கவேண்டும்.

    பணி மேற்பார்வையாளர், சாலை ஆய்வாளர், ஊராட்சி ஒன்றிய அளவில் ஜீப் ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், பதிவறை எழுத்தர், இரவு காவலர்கள் பணியிடங்கள், ஊராட்சி செயலர்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் மு.சுப்பிரமணியன் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்கவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×