search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமல்"

    • வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கிறது.
    • இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக மீன்விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.

    ராயபுரம்:

    தமிழக கடல் பகுதியில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்படும். இந்த காலகட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். விசை படகுகள், மீன்வலைகள் மற்றும் மீன் பிடி உபகரணங் களை சீரமைக்கும் பணியில மீனவர்கள் ஈடுபடுவார்கள்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. இது வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கிறது.

    மீன்பிடி தடைகாலம் தொடங்கும் நிலையில் இன்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற அனைத்து விசைப்படகுகளும் கரைக்கு திரும்பின.

    இதனால் கடந்த வாரத்தை விட வஞ்சிரம், வவ்வால் போன்ற மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக மீன்விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.

    கடந்த வாரத்தில் ரூ.1300 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.800-க்கு விற்கப்பட்டது. கடமா எப்போதும் விற்கப்படும் விலையை விட ரூ.200 வரை குறைத்து விற்கப்பட்டும் அதனை வாங்க ஆட்கள் இல்லை.

    இதனால் வார இறுதி நாட்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காசிமேடு மார்க்கெட் இன்று வழக்கமான உற்சாகம் இன்றி காணப்பட்டது. இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்குவதால் இன்னும் 2 மாதத்திற்கு இதே நிலைதான் இருக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.


    காசிமேடு மார்க்கெட்டில் மீன்விலை(கிலோவில்)வருமாறு:-

    வஞ்சிரம் - ரூ.800, வவ்வால் - ரூ.700, வெள்ளை வவ்வால் - ரூ.1200, சங்கரா - ரூ.300, கடமா - ரூ.100, நெத்திலி - ரூ.300, நண்டு - ரூ.300, இறால் பெரியது (டைகர்) - ரூ.1200, இறால் சிறியது - ரூ.600. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, மீன்பிடி தடைகால் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பிவிட்டனர். மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய பின்னர் இங்குள்ள மீன் விற்பனை கூடம் இனி 1 ½ மாதத்திற்கு வெறிச்சோடி கிடக்கும். அதே நேரம் கடலுக்கு செல்ல கட்டுமரங்கள், பைபர் படகுகளுக்கு தடை இல்லை என்பதால் அவர்கள் கடற் கரை யோரத்தில் மீன் பிடித்து திரும்பி விடுவார்கள். இதனால் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விலை அதிகமாகும் என்றனர்.

    • 2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.
    • இன்று திறக்கப்படும் அரசு பள்ளிகள் வருகிற 30-ந் தேதி வரை இயங்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரில் நடப்பு கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகிறது.

    கடந்த 23-ந் தேதியுடன் முழு ஆண்டு தேர்வு முடிந்து, சி.பி.எஸ்.இ. வழிகாட்டுதலின்படி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.

    இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பெங்களூருவில் இருந்து என்.சி.ஆர்.டி. பாடபுத்தகம் வாங்கப்பட்டது. இந்த பாடபுத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் வாகனம் மூலம் தங்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று வருகின்றனர். மிக குறைவாகவும், ஒரு சில பாடங்களுக்கு பாடபுத்தகம் வராமலும் உள்ளது. 3,4,6-ம் வகுப்புகளுக்கு ஒரு பாடங்களுக்கு கூட புத்தகங்கள் வரவில்லை.

    இவற்றையும் உடனடியாக வாங்கி பள்ளி மாணவர்களுக்கு வழங்க கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. இன்று திறக்கப்படும் அரசு பள்ளிகள் வருகிற 30-ந் தேதி வரை இயங்கும். மே 1-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் 3-ந் தேதிமுதல் மீண்டும் பள்ளிகள் திறந்து செயல்படும்.

    • திட்டம் முதற்கட்டமாக உதகையில் நாளை தொடங்குகிறது.
    • மலை கிராமங்களிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக தகவல்.

    2024- 25ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டு பட்ஜெட்டில் மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இந்த திட்டம் நாளை முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார்.

    இந்த திட்டம் முதற்கட்டமாக உதகையில் நாளை தொடங்குகிறது.

    இது படிப்படியாக மற்ற மலை கிராமங்களிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    • மசோதாக்கள் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
    • குடியரசுத் தலைவர் திரெவுபதி முர்மு கடந்த டிசம்பர் 25ம் தேதி ஒப்புதல்.

    புதிதாக இயற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களும் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா அதிநியம், பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன.

    இதற்கான மசோதாக்கள் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் திரெவுபதி முர்மு கடந்த டிசம்பர் 25ம் தேதி ஒப்புதல் அளித்தார்.

    • திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
    • மாவட்ட செயலாளா் ஆா்.சித்ரா, மாவட்ட பொருளாளா் சத்தியசீலன் மற்றும் மாவட்ட துணை செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:- 1999-ம் ஆண்டு வழங்கப்பட்டு, கடந்த 23 ஆண்டுகளாக பெற்று வந்த கருணை அடிப்படையிலான வாரிசுக்கு வேலை கடந்த மாா்ச் 8-ந்தேதி நிறுத்தப்பட்டதை திரும்ப வழங்க வேண்டும். 7-வது ஊதிய குழு மாற்றுத் திறனாளி கிராம உதவியாளா்களுக்கு வழங்கிய எரிபொருள் படி ரூ. 2 ஆயிரத்து 500-ஐ நிறுத்தம் செய்ததை திரும்ப வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு என்பதை 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும். ஓட்டுநா் உரிமம் வைத்திருக்கும் கிராம ஊழியா்களுக்கு ஊா்தி ஓட்டுநா் பதவி உயா்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள கிராம ஊழியா்கள் பணியிடத்தை தோ்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும். அதில் குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு என நிா்ணயம் செய்ய வேண்டும். கடந்த ஜனவரியில் 2 ஆயிரத்து 748 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு, புதிதாக பணிக்கு வந்தவா்களுக்கு முறையாக சிபிஎஸ்., கணக்கு எண் வழங்கி ஊதியம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா். அப்போது வருவாய் கிராம ஊழியா் சங்க மாவட்ட தலைவா் கே.நடராஜன், மாவட்ட செயலாளா் ஆா்.சித்ரா, மாவட்ட பொருளாளா் சத்தியசீலன் மற்றும் மாவட்ட துணை செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்
    • வாகனங்கள் மாற்று பாதை வழியாக இயக்கம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்கான புதிய குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து சாலையின் நடுவே பைப் லைன்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது குடிநீர்திட்ட பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அந்த பணி களை துரிதமாக முடிக்க மேயர் மகேஷ் உத்தரவிட்டு உள்ளார். இதனால் குடிநீர் பைப் லைன்கள் பதிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    வடசேரி அண்ணா சிலை சந்திப்பிலிருந்து புத்தேரி சிபிஎச் மருத்துவமனை வரை குடிநீர் குழாய் பதிக் கும் பணிகளை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதையடுத்து பஸ் போக்குவரத்தை மாற்றி விட போக்குவரத்து போலீ சார் நடவடிக்கை மேற் கொண்டனர். இன்று காலை முதல் அந்தச் சாலையில் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. வடசேரியில் இருந்து புத்தேரி வழியாக செல்லும் அனைத்து பஸ் களும் வடசேரி சந்திப்பில் இருந்து ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் வழியாக நாற்கர சாலை சென்று புத்தேரி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    வடசேரி அண்ணா சிலை பகுதியில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து சாலை மூடப்பட்டிருந்தது. போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடு பட்டு இருந்தனர். இருப்பி னும் காலை நேரத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இதே போல் பூதப் பாண்டி, திட்டுவிளை, துவரங்காடு வழியாக வடசேரி பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள், வாகனங்கள் புத்தேரி நான்கு வழி சாலை வழியாக அப்டா மார்க்கெட் வந்து வடசேரிக்கு சென்றது. இந்த போக்குவரத்து மாற்றம் குடிநீர் பைப் லைன்கள் அமைக்கும் பணி முடியும் வரை அமலில் இருக்கும் என்று போக்கு வரத்து போலீசார் தெரி வித்துள்ளனர்.

    போக்குவரத்து மாற்றப்பட்டதையடுத்து சாலை நடுவே குடிநீர் பைப் லைன் அமைப்பதற்கு பள்ளங்கள் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. ஜே.சி.பி. எந்திரம் மூலமாக சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைப்பதற்கான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ×