search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் வலியுறுத்தல்

    • திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
    • மாவட்ட செயலாளா் ஆா்.சித்ரா, மாவட்ட பொருளாளா் சத்தியசீலன் மற்றும் மாவட்ட துணை செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:- 1999-ம் ஆண்டு வழங்கப்பட்டு, கடந்த 23 ஆண்டுகளாக பெற்று வந்த கருணை அடிப்படையிலான வாரிசுக்கு வேலை கடந்த மாா்ச் 8-ந்தேதி நிறுத்தப்பட்டதை திரும்ப வழங்க வேண்டும். 7-வது ஊதிய குழு மாற்றுத் திறனாளி கிராம உதவியாளா்களுக்கு வழங்கிய எரிபொருள் படி ரூ. 2 ஆயிரத்து 500-ஐ நிறுத்தம் செய்ததை திரும்ப வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு என்பதை 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும். ஓட்டுநா் உரிமம் வைத்திருக்கும் கிராம ஊழியா்களுக்கு ஊா்தி ஓட்டுநா் பதவி உயா்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள கிராம ஊழியா்கள் பணியிடத்தை தோ்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும். அதில் குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு என நிா்ணயம் செய்ய வேண்டும். கடந்த ஜனவரியில் 2 ஆயிரத்து 748 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு, புதிதாக பணிக்கு வந்தவா்களுக்கு முறையாக சிபிஎஸ்., கணக்கு எண் வழங்கி ஊதியம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா். அப்போது வருவாய் கிராம ஊழியா் சங்க மாவட்ட தலைவா் கே.நடராஜன், மாவட்ட செயலாளா் ஆா்.சித்ரா, மாவட்ட பொருளாளா் சத்தியசீலன் மற்றும் மாவட்ட துணை செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    Next Story
    ×