பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்த ஊரக வளர்ச்சித்துறை சங்கம் தீர்மானம்

பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்த ஊரக வளர்ச்சித்துறை சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதுப்போல 3 சதவீத அகவிலைப்படி அறிவித்து ரொக்கமாக வழங்கவேண்டும்
பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்த ஊரக வளர்ச்சித்துறை சங்கம் தீர்மானம்
Published on

கரூர்:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க 6-வது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் ஆ.மனோகரன் தலைமையில் கரூர் தனியார் ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் எம்.பழனியப்பன், மாநில செயலாளர் எஸ்.ராஜசேகர், தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் மு.மகாவிஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்ட துணைத்தலைவர் மா.பரமேஸ்வரன், முன்னாள் மாவட்டத்தலைவர் தி.திருஞானசம்பந்தம், மாவட்ட செயலாளர் மா.சரவணன், மாவட்ட பொருளாளர் ம.தமிழ்வாணன், மாவ ட்ட தணிக்கையாளர்கள் டி.சுரேஷ், வெ.சஞ்சய்காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் எஸ்.ரமேஷ் நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் நா.வெங்கடாசலம் வரவேற்றார். மாவட்ட இணைச்செயலாளர் சு.சரிதா நன்றி கூறினார்.

கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதுப்போல 3 சதவீத அகவிலைப்படி அறிவித்து ரொக்கமாக வழங்கவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய் வூதியத் திட்டத்தை அமல்படு த்தப்படவேண்டும். பணி மேற்பார்வையாளர்களுக்கு பட்டியல் மதிப்பீ ட்டு வரம்பு தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசு ஆணை வழங்கவேண்டும்.

பணி மேற்பார்வையாளர், சாலை ஆய்வாளர், ஊராட்சி ஒன்றிய அளவில் ஜீப் ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், பதிவறை எழுத்தர், இரவு காவலர்கள் பணியிடங்கள், ஊராட்சி செயலர்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் மு.சுப்பிரமணியன் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்கவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com