search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்கு அபராதம்
    X

    விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்கு அபராதம்

    • விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.
    • போதையில் இருந்ததாக கூறி 2002-ம் ஆண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் சுமதி. இவர் கடந்த 2016-ம் ஆண்டில் மதுரை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:-

    எனது கணவர் தலைமை காவலராக பணிபுரிந்தார். பணியின்போது போதையில் இருந்ததாக கூறி 2002-ம் ஆண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டார். மீண்டும் பணியில் சேர்க்குமாறு கோரி பலமுறை மனு அளித்தும் ஏற்கப்படவில்லை.

    இந்த நிலையில் 2009-ல் அவர் உயிரிழந்தார். இதையடுத்து என் கணவருக்கு கிடைக்க வேண்டிய கருணை தொகையை கேட்டு வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் கருணை தொகை வழங்கும்படி 2016-ல் தீர்ப்பளிக்கப்பட்து. ஆனால் கருணை தொகை வழங்கப்படவில்லை. எனவே எனக்கு கருணை தொகை வழங்கும்படி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி பட்டுதேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில், கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இப்போதும் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்படு கிறது. இதனால் விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த பணத்தை தமிழ்நாடு புதுச்சேரி சேமநல நிதிக்கு வழங்கி அதற்கான ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். வழக்கை தாமதப்ப டுத்திய போலீஸ் சூப்பிரண்டு பணியில் இருந்தாலும், ஓய்வு பெற்றிருந்தாலும் அவரிடம் இருந்து பெற்று கொள்ள வேண்டும் என கூறி வழக்கை வருகிற 9-ந்தேதிக்கு தள்ள வைத்தார்.

    Next Story
    ×