search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏல விற்பனை சொத்துகளை பதிவு செய்ய தடை நீட்டிப்பு
    X

    ஏல விற்பனை சொத்துகளை பதிவு செய்ய தடை நீட்டிப்பு

    • ஏல விற்பனை சொத்துகளை பதிவு செய்ய 11 சதவீத கட்டணம் வசூலிக்க தடை நீட்டிக்கப்பட்டது.
    • இந்த வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பு வக்கீல் கால அவகாசம் கோரினார்.

    மதுரை

    மதுரையை சேர்ந்த வக்கீல் செந்தில் குமாரையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    பல்வேறு சூழ்நிலைகளால் ஒரு நபரின் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டு அந்த சொத்துக்கள் கடன் வசூல் தீர்ப்பாயம் மற்றும் கோர்ட்டு, வருவாய்துறை மூலம் ஏலம் விடப்படுகிறது.

    அவ்வாறு, ஏலம் விடப் படும் போது ஏலத்தில் கலந்து கொண்டு சொத்துக் களை வாங்கும் நபர், ஏலத் தில் வாங்கிய விற்பனை சான்றிதழை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    தற்போது விற்பனைச் சான்றிதழை பதிவு செய்யும் போது சொத்தின் சந்தை மதிப்பில் 11 சதவீதத்தை பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும் என பதிவுத்துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் அரசானை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதி ரானது.

    இதனால், ஏலத்தில் சொத்து வாங்கியவர் கூடு தல் நிதி சுமை ஏற்படும். எனவே, இந்த அரசாணை யை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தர விட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந் தது.

    அப்போது இந்த வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பு வக்கீல் கால அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கில் பிறப் பித்த இடைக்கால தடையை நீடித்து, வழக்கை 4 வாரங் களுக்கு ஒத்திவைத்தனர்.

    Next Story
    ×