search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் விளையாட்டு"

    • ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அக்டோபர் 18-ந்தேதி நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 138 நாட்களாகியும் இன்னும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.
    • தமிழ்நாட்டிற்கு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ஏன் தேவை? என்பதை புள்ளிவிவரங்களுடன் தமிழக அரசு விளக்கியுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்ற மருந்து நிறுவன அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு இரங்கல், அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வினோத்குமார் அவரிடம் இருந்த பணம் முழுவதையும் ஆன்லைனில் சூதாடி இழந்துள்ளார். கடன் வழங்கும் செயலிகள் மூலமாகவும் கடன் வாங்கி சூதாடியுள்ளார். சூதாடுவதற்காக எந்த எல்லைக்கும் சென்றிருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. அந்த அளவுக்கு ஆன்லைன் சூதாட்டம் கொடுமையானது.

    ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 44-வது தற்கொலை இது. ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 15-வது தற்கொலை. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாவிட்டால் தற்கொலைகள் தொடரும்.

    ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அக்டோபர் 18-ந்தேதி நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 138 நாட்களாகியும் இன்னும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

    தமிழ்நாட்டிற்கு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ஏன் தேவை? என்பதை புள்ளிவிவரங்களுடன் தமிழக அரசு விளக்கியுள்ளது. இனியும் தாமதிக்காமல் கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்காக அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எந்த தடையும் இல்லை என ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
    • சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ந் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தீர்ப்பளித்தது.

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை முறையாக பரிசீலிக்காமல் சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. இதுபோன்ற சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • தொடர்ந்து விளையாடி கொண்டே இருந்ததால் மதன்குமாருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.
    • கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலி மற்றும் பார்வை குறைபாடு உண்டானது. இதனால் மதன்குமார் கடும் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

    குனியமுத்தூர்:

    கோவை வெள்ளலூர் கருப்புராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணியம் (வயது 55). தொழிலாளி.

    இவரது மனைவி நாகலட்சுமி(50). இவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மதன்குமார்(25) என்ற மகன் உள்ளார்.

    இவர் பி.எஸ்(ஐ.டி) முடித்து விட்டு உரிய வேலை கிடைக்காததால் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    வீட்டிலேயே இருந்ததால் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி கிடந்தார். அப்போது அவர் செல்போனில் ஆன்லைன் ரம்மி ஆப்பை டவுன்லோடு செய்து விளையாடி வந்துள்ளார்.

    முதலில் சாதாரணமாக விளையாடிய அவர், அதன் பின்னர் எந்த நேரமும் ஆன்லைன் ரம்மி விளையாட்டிலேயே மூழ்கி அதற்கு அடிமையாகி விட்டார்.

    தொடர்ந்து விளையாடி கொண்டே இருந்ததால் மதன்குமாருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலி மற்றும் பார்வை குறைபாடு உண்டானது. இதனால் அவர் கடும் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

    இதன் காரணமாக மதன்குமார் மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று சுப்பிரமணியம் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி நாகலட்சுமியும் வழக்கம் போல ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றார்.

    அப்போது வீட்டில் மதன்குமார் மட்டும் தனியாக இருந்தார்.

    வாழ்க்கையில் விரக்தி அடைந்த மதன்குமார் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாலையில் வேலைக்கு சென்ற நாகலட்சுமி வீட்டிற்கு வந்தார். அப்போது மகன் மதன்குமார் வீட்டிற்குள் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது உடலை பார்த்து கதறி அழுதார்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தற்போது வருமான வரிச் சட்டங்களின்படி 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
    • ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத வரிகள் கழிக்கப்படவில்லை என்பது வருமானவரித்துறை ஆய்வில் தெரியவந்தது.

    புதுடெல்லி:

    ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:-

    ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தற்போது வருமான வரிச் சட்டங்களின்படி 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் வெற்றி பெற்றால், கேமிங் நிறுவனம் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கு வரியை கழிக்க வேண்டும்.

    வருமானவரி சட்டம் 1961-பிரிவு 194 பி-ன் படி லாட்டரிகள் அல்லது குறுக்கெழுத்து புதிர்களில் வெற்றி பெற்ற வருமானத்திற்காக செலுத்துவதற்கு வரி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத வரிகள் கழிக்கப்படவில்லை என்பது வருமானவரித்துறை ஆய்வில் தெரியவந்தது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கேமிங் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற் பட்டோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    • ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ 2.50 லட்சம் கடன் வாங்கினார்.
    • வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த லோன் ஆப் ஊழியர்கள் ரோஹித் குமாரை மிரட்ட தொடங்கினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பாபுல பாடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டன். இவரது மகன் ரோகித் குமார் (வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனது தந்தை வியாபாரத்திற்கு உதவியாக இருந்து வந்தார்.

    ரோகித் குமார் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஆன்லைன் விளையாட்டில் பந்தயம் கட்டி விளையாடி வந்தார்.

    இந்த நிலையில் ரோகித்குமார் ஆன்லைன் விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கி கடனை கட்டினார்.

    மேலும் ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ 2.50 லட்சம் கடன் வாங்கினார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த லோன் ஆப் ஊழியர்கள் ரோஹித் குமாரை மிரட்ட தொடங்கினர்.

    இதனால் விரத்தி அடைந்த ரோகித் குமார் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். ரோகித் குமாரை மீட்ட அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கன்னவரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அனுமன் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாச ராவ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பந்தயம் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
    • வரைவு விதிமுறைகள் பற்றி பொதுமக்கள் மற்றும் உரிய அமைப்பினர் வரும் ஜனவரி 17ம் தேதிக்குள் கருத்துக்களை வழங்கலாம்.

    புதுடெல்லி:

    ஆன்லைன் விளையாட்டுகள் மீதான மோகமும் அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமான ஆன்லைன் தொடர்பான குற்றங்களும் பிரச்சனைகளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் இவற்றை முறைப்படுத்த வேண்டும், இவற்றிற்காக விதிகளை வகுக்க வேண்டும் என்ற தேவை நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே இருந்தது.

    இந்நிலையில் மத்திய அரசு இவற்றை ஒழுங்குமுறைப் படுத்துவதற்கான ஒரு வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்கள் சுயஒழுங்குமுறை அமைப்பிடம் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என தெரிவித்துள்ளது.

    இந்த சுயஒழுங்குமுறை அமைப்பானது இந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பொறுப்பு ஏற்க கூடிய ஒரு அமைப்பாக இருக்கும். ஏதேனும் குறைகள் ஏற்பட்டாலும் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் இந்த அமைப்பு உரிய வழிமுறைகளை கொண்டு இதை தீர்க்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பந்தயம் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல அதில் விளையாடுபவர்களின் விவரங்களை சரிபார்ப்பது, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் முகவரியை பதிவு செய்வது போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த வரைவு அறிக்கையின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இது வரைவு விதிமுறைகள் மீது, பொதுமக்கள் மற்றும் உரிய அமைப்பினர் வரும் ஜனவரி 17ம் தேதிக்குள் கருத்துக்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கருத்துகளுக்கு பின்னர் வரும் பிப்ரிவரி மாத இறுதிக்குள்ளாக இந்த விதிகள் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

    • சல்மான் வழக்கம் போல வேலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பினார்.
    • வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மேட்டுப்பாளையம் வி.ஜி.பி. கார்டனை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் சல்மான் (வயது 22). இவர் சந்தேகவுண்டன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சல்மான் பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி தனது செல்போன் மூலமாக ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்தார். ஆரம்பத்தில் சூதாட்டம் மூலமாக இவருக்கு வருமானம் வந்தது. அந்த ஆர்வத்தில் சல்மான் தொடர்ந்து ஆன்லைனின் சூதாட்டம் ஆடினார். அதில் அவர் தனது சம்பள பணத்தை இழந்தார். மேலும் தெரிந்தவர்களிடமும் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக சல்மான் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நடந்த சம்பவத்தையும் தனது பெற்றோரிடம் சொல்லாமல் அவர் மறைத்தார். சம்பவத்தன்று சல்மான் வழக்கம் போல வேலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அவரது பெற்றோர் மகன் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இது குறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சல்மான் தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் நான் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆன்லைனில் சூதாட்டம் ஆடினேன். அதில் சம்பள பணம் முழுவதையும் இழந்து விட்டேன். எனக்கு வாழ்வதற்கு அச்சமாக உள்ளது. எனவே என்னை மன்னித்து விடுங்கள் என எழுதி இருந்தார்.

    பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட சல்மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆன்லைன் ர​ம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநருடனான சந்திப்பில் பேசியதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
    • ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

    சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்தித்து பேசினார்.

    ஆளுநருடனான சந்திப்பில் ஆன்லைன் ர​ம்மி தடை சட்டம் தொடர்பாக பேசியதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

    ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் தொடர்பாக ஆளுநர் ரவியிடம் நேரிலும் விளக்கம் தந்தோம். ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

    ஆளுநர் ரவி ஒப்புதல் தந்தால் உடனடியாக ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை.
    • வழக்கு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலர் மற்றும் மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை:

    நெல்லையை சேர்ந்த ஐயா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது:-

    ஆன்லைன் லாட்டரி விளையாட்டுக்களுக்கு இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆன்லைன் லாட்டரி விளையாட்டுகளுக்கான சந்தையும் தற்போது காளான்கள் போல அதிகரித்து வருகின்றது.

    ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் மன அழுத்தம், கடன், வறுமை, விவாகரத்து, தற்கொலை மற்றும் குற்றவியல் நிகழ்வுகள் என தீங்குகளே அதிகம் நிகழ்கின்றன. இதனால் ஏராளமான குடும்பங்களும் சிதைந்துள்ளன. பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் ஆன்லைன் லாட்டரி, சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை விளையாடி, அதனால் குற்றவாளிகளாக மாறும் சூழல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க 18 வயதுக்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதை தடுக்க நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    ஆகவே 18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றை விளையாடுவதை தவிர்க்கும் வகையில், அதற்கான இணையதளம் மற்றும் செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதார் அல்லது பான் கார்டு சான்றிதழை பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    அவரது மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவிக்கும்போது, "18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுக்கள் தெரியவந்தது எப்படி? அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.

    பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. அதன் விளைவாகவே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. சிறுவர்கள் ஆன்லைனில் சூதாட பெற்றோரே காரணம்" என கருத்து தெரிவித்தனர்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலர் மற்றும் மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

    • ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது.
    • கவர்னர் கேட்கும் கேள்விகளுக்கு தான் நாங்கள் பதில் கூற முடியும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இணைய வழி சூதாட்டம், ஆன்லைன் ரம்மி, போகோ இவற்றை தடை செய்தல் ஒழுங்குமுறைபடுத்துதல் அவசரகால சட்டத்தின் கால வரையறை நேற்றோடு முடிந்து விட்டது. அவசர சட்டத்திற்கு கவர்னர் ஏற்கனவே ஒப்புதல் தந்தார். அதன் அடிப்படையில் சட்டம் திருத்தப்பட்டு சட்டசபையில் வைக்கப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    கவர்னர் இந்த சட்டத்தில் சில சந்தேகங்களை கேட்டு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்திற்கு 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளித்து தமிழக அரசு மீண்டும் கவர்னருக்கு அனுப்பியது. நேற்று மாலைக்குள் கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதை தெளிவுபடுத்த தான் தற்போது இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

    ஆளுநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் முதல் உரையிலேயே மிகத்தெளிவாக தமிழக அரசு விளக்கியுள்ளது. 99 சதவீத மக்கள் ஆன்லைன் ரம்மி, போகோ, இணைய வழி சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோன்று உலக சுகாதார நிறுவனமும் இவைகள் ஒரு நோய் என்றும் அறிவித்துள்ளது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நோயை ஒழிக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமை. அந்த கடமையை தான் தமிழக அரசு சட்டமாக இயற்றி கவர்னருக்கு அனுப்பியது. கவர்னர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அவருக்கே உண்டான வெளிச்சம். காலதாமதம் ஏற்படுத்துவதற்கான அவசியம் கிடையாது. ஏன் காலதாமதம் படுத்துகிறார் என்பது அவருக்கு தான் தெரியும்.

    சட்டம் காலாவதி ஆகிவிட்டதால், ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் தான் இனி தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். கவர்னர் ஒப்புதல் அளித்த உடன் சட்டசபையில் நிறைவேற்றிய சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த முடியும் அதற்கு நாங்களும் தயாராக உள்ளோம். கவர்னர் கையெழுத்து போட்டு விட்டால் இதற்கு உயிர் வந்துவிடும்.

    தற்போது உள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்கு செல்லக்கூடிய சூழ்நிலையில் இல்லை. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம்.

    தற்போது வரை கவர்னரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. தற்போது அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும். அசம்பாவிதம் போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என்பதை பொதுமக்களிடமே விட்டு விடுகிறோம்.

    கவர்னர் மீது வழக்கு போட முடியாது. கவர்னர் இந்த சட்டத்தில் கையொப்பம் இடவில்லை என்றால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அனைவருக்கும் தெரியும். ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது. கவர்னர் கேட்கும் கேள்விகளுக்கு தான் நாங்கள் பதில் கூற முடியும். தெளிவான பதில்களை நாங்கள் ஏற்கனவே கவர்னருக்கு கூறியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மன உளைச்சளில் இருந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி, சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் வசித்து வரும் ஒடிசாவை சேர்ந்த பந்தனமாஜி என்கிற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.70 ஆயிரம் இழந்ததாகவும், மன உளைச்சளில் இருந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன.
    • சிறுவர், சிறுமிகள் இணையத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.

    வெளிவிளையாட்டுகளைவிட இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் விளையாட்டுகள் போன்றவை குழந்தைகள், வளர்இளம் பருவத்தினரை அதிகமாக ஈர்க்கின்றன. தனிநபர் ஆதிக்கம் செலுத்துவதற்கு உள்ள சாத்தியம், தனிமை மற்றும் மனச்சோர்வின்போது அதைத் தணியச்செய்வது போன்ற காரணங்களால், அதற்கு அடிமையாகும் அளவுக்குப் பலரும் மாறிவிடுகின்றனர். அது மட்டுமல்லாமல் துப்பாக்கியால் சுடுவது போன்ற ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகள் நிஜ வாழ்க்கையிலும் அவர்களுடைய நடவடிக்கைகளில் மூர்க்கக் குணத்தை உண்டாக்கும். பெரும்பாலான நேரம் இத்தகைய விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மனச் சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுகின்றன.

    மேலும் தனக்கு பிடிக்காதவர்களை பற்றி தவறான தகவல்களை பரப்புவது, ஆபாச படங்களை வெளியிடுவது, பிறரை புண்படுத்தும் வகையில் கேலியான அல்லது மிரட்டும் வகையில் பதிவுகளை அனுப்புவது போன்ற பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் மிகச் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதைத்தான் 'சைபர் புல்லியிங்' என்கிறார்கள்.

    நமக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் 40 சதவீத இளைஞர்களை பாதிக்கும் முக்கியப் பிரச்சினையாக இது கருதப்படுகிறது. அதேபோல, வளர்இளம் பருவத்தில் ஏற்படும் பாலியல் நாட்டம் மற்றும் அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றும் ஒரு வடிகாலாக வலைதளம் பயன்படுத்தப்படுவது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    ஆபாச வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திப் பரிமாற்றங்களில் ஈடுபடும் வளர்இளம் பருவத்தினரை அவர்களுடைய நடவடிக்கை மாற்றங்கள் காட்டிக்கொடுத்துவிடும். இரவில் வெகுநேரம் அல்லது அதிகாலைவரை இணையத்தைப் பயன்படுத்துவது, கணினி, மடிகணினி பயன்படுத்தும்போது அதிகம் தனிமையை நாடுவது, யாராவது குறுக்கிட்டால் எரிச்சல்படுவது, மொபைல்போன் பயன்பாடுகளுக்குப் பாஸ்வேர்ட் வைத்துக்கொள்வது, குடும்ப நபர்களிடம் கலந்துரையாடும் நேரம் குறைவது, வலைதள வரலாற்றை முற்றிலும் அழித்துவிடுவது உள்பட பல மாற்றங்கள் ஒருவரிடம் காணப்படும்.

    'முள்ளை முள்ளால் எடுப்பது' போல வளர்இளம் பருவத்தினரின் வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றைக் கணினியிலோ, ஸ்மார்ட் போனிலோ பதிவேற்றிவிட்டால் குறிப்பிட்ட ஆபாச, விளையாட்டு வலைதளங்களை பயன்படுத்தும்பட்சத்தில் வலைதளம் தானாகவே தடுத்துவிடும். தடை செய்யப்பட்ட வலைதளத்தை ஒருவர் அணுகினால், அது குறித்த விவரம் பெற்றோரின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் மென்பொருள்கள் உள்ளன. தாங்கள் இந்த விஷயத்தில் கண்காணிக்கப்படுகிறோம் என்று ஆரம்பத்தில் தெரிந்துவிட்டாலே, சிறுவர், சிறுமிகள் இணையத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.

    ×