search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயர் தற்கொலை"

    • கடந்த சில மாதங்களாக அஜித்குமார் மணப்பாக்கம் பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
    • வீட்டில் தனியாக இருந்த அஜித்குமார் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    போரூர்:

    நெசப்பாக்கம், மஞ்சு கார்டனில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மணிகண்டன், வேன் டிரைவர். இவரது மகன் அஜித்குமார் (வயது 23), என்ஜினீயர்.

    கடந்த சில மாதங்களாக அஜித்குமார் மணப்பாக்கம் பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அவர் வேலைக்கு செல்லவில்லை. படிப்புக்கு ஏற்ற வேலையை தேடிவந்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

    இதனால் அஜித்குமார் கடந்த 3 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த அஜித்குமார் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரெயில் அருகில் வந்தபோது திடீரென முருகேசன் ரெயில் முன்பு பாய்ந்தார்.
    • ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் லதா. அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சேதுராமன், ஏற்கனவே இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு முருகேசன், முத்தழகு ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகன் முருகேசன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகேசன் மதுரை வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் வெளியில் சென்றுவிட்டு வருவதாக தனது தாயிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட முருகேசன், மோட்டார் சைக்கிளில் திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலையில் வந்தார்.

    பின்னர் அங்குள்ள வெயில் உகந்த அம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ரெயில் அருகிலுள்ள தண்டவாளத்தின் ஓரமாக நின்றிருந்தார்.

    அப்போது நெல்லையில் இருந்து சென்னை நோக்கி சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. ரெயில் அருகில் வந்தபோது திடீரென முருகேசன் ரெயில் முன்பு பாய்ந்தார்.

    இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். ஆனால் நள்ளிரவு நேரமாக இருந்ததால் ஒருசில விநாடிகளில் காப்பாற்றக்கூட யாரும் இல்லாத நிலையில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட முருகேசன், சென்னையில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

    இந்த விபத்து குறித்து மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கணவரை இழந்த லதா, தற்கொலை செய்துகொண்டு இறந்த மூத்த மகன் முருகேசன் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    • 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, ஜெயா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
    • ஜெயா மற்றும் 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பெரம்பலூர்:

    கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஜெயா (வயது 25). என்ஜினீயரிங் படித்துள்ள இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் பென்னகோணத்தை சேர்ந்த கண்ணனின் மகன் விஜயகுமாருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந் தேதி திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிக்கு 2 வயதில் நிகிதா, நிகிசா என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர். என்ஜினீயரான விஜயகுமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஜெயா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி விஜயகுமாரின் தாய் தமிழ்ச்செல்வி அழைத்ததன்பேரில் ஜெயா குழந்தைகளுடன் கணவர் வீட்டிற்கு வந்தார்.

    அங்கு முதல் தளத்தில் உள்ள அறையில் ஜெயா குழந்தைகளுடன் தங்கியிருந்தார். நேற்று காலை வெகுநேரமாகியும் ஜெயா தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த தமிழ்ச்செல்வி காலை 9 மணியளவில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது அறையின் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் ஜெயா தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அருகே 2 பெண் குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். இதுபற்றி தகவல் அறிந்தமங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, ஜெயா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தகவல் அறிந்த ஜெயாவின் பெற்றோர், சகோதரர், உறவினர்கள் உள்ளிட்டோர் அங்கு வந்து ஜெயா மற்றும் குழந்தைகளின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    இதையடுத்து ஜெயா மற்றும் 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தங்களது மகள், பேத்திகள் சாவில் மர்மம் உள்ளதாகவும், விஜயகுமாரின் தாய் தமிழ்ச்செல்வி மற்றும் விஜயகுமாரின் அண்ணன் வினோத்குமாரின் மனைவி பிரியா ஆகியோர் ஜெயாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், மேலும் கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு ஜெயாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும் ஜெயாவின் பெற்றோர் தரப்பில் புகார் கூறப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என்று மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தைகளை கொன்று ஜெயா தற்கொலை செய்திருந்தால், அதற்கான காரணம் என்ன?, அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டினார்களா?, அல்லது அவரும், குழந்தைகளும் கொலை செய்யப்பட்டனரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • என்ஜினீயரான பாலன் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாா்.
    • எனது தந்தையின் வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டிய ரூ.50 ஆயிரத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்று விட்டேன்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தட்டப்பாறை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவருடைய மகன் பாலன் (வயது 30). என்ஜினீயரான இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாா். கடந்த சில நாட்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார். மேலும் அவருக்கு ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று பாலன் வீட்டில் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தட்டப்பாறை போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் பாலனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் பாலன் தனது நண்பர் ஒருவருக்கு அதிகாலை 5.30 மணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். ஆனால், அந்த குறுஞ்செய்தி செல்லாத நிலையில் இருந்து உள்ளது. அதனை போலீசார் பார்த்தனர். அதில், எனது தந்தையின் வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டிய ரூ.50 ஆயிரத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்று விட்டேன். என் முடிவை நானே தேடிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதையடுத்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாலனிடம் நேற்று முன்தினம் அவரது தந்தை ரூ.50 ஆயிரம் கொடுத்து தனது வங்கி கணக்கில் செலுத்த கூறி உள்ளார். ஆனால் பாலன், அந்த பணத்தை தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்தி நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி உள்ளார். இவ்வாறு கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் ரூ.3½ லட்சம் வரை இழந்து உள்ளார். இதனால் விரக்தி அடைந்த பாலன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ 2.50 லட்சம் கடன் வாங்கினார்.
    • வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த லோன் ஆப் ஊழியர்கள் ரோஹித் குமாரை மிரட்ட தொடங்கினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பாபுல பாடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டன். இவரது மகன் ரோகித் குமார் (வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனது தந்தை வியாபாரத்திற்கு உதவியாக இருந்து வந்தார்.

    ரோகித் குமார் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஆன்லைன் விளையாட்டில் பந்தயம் கட்டி விளையாடி வந்தார்.

    இந்த நிலையில் ரோகித்குமார் ஆன்லைன் விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கி கடனை கட்டினார்.

    மேலும் ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ 2.50 லட்சம் கடன் வாங்கினார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த லோன் ஆப் ஊழியர்கள் ரோஹித் குமாரை மிரட்ட தொடங்கினர்.

    இதனால் விரத்தி அடைந்த ரோகித் குமார் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். ரோகித் குமாரை மீட்ட அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கன்னவரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அனுமன் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாச ராவ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சின்னதுரை தனது மனைவியுடன் வியாபாரம் தொடர்பாக திருப்பூருக்கு சென்று விட்டார்
    • வீட்டின் அருகில் இருந்த ஒரு குடிசையில் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள வீரப்பம் பாளையம் பாறை கிணறு பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது 2-வது மகன் நீத்தீஷ்குமார் (22). இவர் சிவில் என்ஜினீயரிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று சின்னதுரை தனது மனைவியுடன் வியாபாரம் தொடர்பாக திருப்பூருக்கு சென்று விட்டார்.

    அப்போது வீட்டில் தனியாக இருந்த நீத்தீஷ்குமார் நான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டின் அருகில் இருந்த ஒரு குடிசையில் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.

    இது குறித்து அரச்சலுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நண்பர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கியதும், அந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து விட்டதும் தெரியவந்தது.
    • கடிதத்தில் ஆன்லைனில் விளையாடுவதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்தேன். ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. நண்பர்கள் என்னை மன்னிக்கவும் என்று எழுதியிருந்தார்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் ஆர்.எல்.வி.நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 29). என்ஜினீயர்.

    இவர் ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்தார். ஆரம்பத்தில் வருமானம் வந்ததால், தொடர்ந்து ஆன்லைன் விளையாடினார். ஆனால் பணத்தை இழந்துவிட்டார். தனது நண்பர்களிடம் கடன் வாங்கி விளையாடிய பணத்தையும் இழந்தார்.

    இந்த நிலையில், கோவை ராம்நகரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த சங்கர் வாழ்க்கையில் விரக்தியடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அறிந்த காட்டூர் போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் அறையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

    கடிதத்தில் ஆன்லைனில் விளையாடுவதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்தேன். ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. நண்பர்கள் என்னை மன்னிக்கவும். இவ்வாறு அதில் எழுதி இருந்தார்.

    அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் சங்கர் எவ்வளவு பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தார் என்று விசாரித்தனர்.

    விசாரணையில், சங்கர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தான் அவர் ஆன்லைன் சூதாட்டம் விளையாட தொடங்கி உள்ளார்.

    முதலில் விளையாடியபோது அவருக்கு வருமானம் வந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் மேற்கொண்டு தான் கையில் வைத்திருந்த பணம் மற்றும் வெற்றி பெற்றதில் வந்த பணத்தையும் செலுத்தி விளையாட தொடங்கினார். ஆனால் முதலில் வந்த மாதிரி இந்த முறை வருமானம் வரவில்லை.

    இதனால் தான் இழந்த பணத்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என நினைத்தார். இதற்காக தனது நண்பர்களிடம் கடன் வாங்கி விளையாடினார். இதுவரை தனது நண்பர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கியதும், அந்த பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து விட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து சென்னையில் இருந்து அவர் கோவைக்கு வந்தார். இங்கும் இழந்த பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டும், தோல்வியே மிஞ்சியதால் வேதனை அடைந்தார்.

    தொடர்ந்து பணத்தை இழந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் கடந்த 3 மாதத்துக்கு முன்பு கேரளாவுக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் கோவைக்கு வந்தார்.

    சில வாரங்களுக்கு முன்பு கூட ஊட்டிக்கு சென்ற அவர் அங்கும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பின்னர் அதனை கைவிட்டதும் தெரியவந்தது. 2 முறை தற்கொலைக்கு முயன்ற அவர், 3-வது முயற்சியில் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இருப்பினும் பணம் கொடுத்தவர்கள் யாராவது மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டரா? என்ற கோணத்திலும் காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 12-ந்தேதி சங்கர் தனது பெற்றோரிடம் வேலை விஷயமாக வெளியூருக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார்.
    • சங்கர் வெளியூருக்கு செல்லாமல் ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் ஆர்.எல்.வி. நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சங்கர் (வயது 29). என்ஜினீயர்.

    இவர் ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்தார். ஆரம்பத்தில் இதன் மூலமாக அவருக்கு வருமானம் கிடைத்தது. நாளடைவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையானார். அதன் மூலம் தான் சேர்த்து வைத்து இருந்த பணத்தை இழந்தார்.

    எப்படியாவது சூதாட்டத்தில் விட்ட பணத்தை திருப்பி வென்றுவிடலாம் என்ற முயற்சியில் தனது நண்பர்களிடம் கடன் வாங்கி ஆன்லைனில் சூதாடினார். கடன் வாங்கி விளையாடிய பணத்தையும் சங்கர் இழந்தார். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    கடந்த 12-ந்தேதி சங்கர் தனது பெற்றோரிடம் வேலை விஷயமாக வெளியூருக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் அவர் வெளியூருக்கு செல்லாமல் ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.

    அறையில் இருந்த சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து ஓட்டல் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இது குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அறையில் இருந்து சங்கர் தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் ஆன்லைனில் விளையாடுவதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்தேன். ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. நண்பர்கள் என்னை மன்னிக்கவும்.

    இவ்வாறு அதில் எழுதி இருந்தார்.

    ஆனால் அவர் ஆன்லைனில் எவ்வளவு பணத்தை இழந்தார் என்பதையும் நண்பர்களிடம் எவ்வளவு கடன் வாங்கினார் என்பதையும் குறிப்பிடவில்லை. பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண ஏற்பாடுகள் குறித்து மகனிடம் கோவில் பிச்சை பேசியுள்ளார்.
    • மன வேதனையில் தவித்த உதயகுமார் இனிமேல் வாழ்வதற்கு விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் டி.காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் கோவில் பிச்சை (வயது 51). இவரது மகன் தேவகுமார் (24). என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண ஏற்பாடுகள் குறித்து மகனிடம் கோவில் பிச்சை பேசியுள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், திருமணம் செய்து கொண்டால் அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாக கூறியுள்ளார். இதற்கு கோவில்பிச்சையும் சம்மதித்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தேவகுமாருடன் அந்த பெண் பேசவில்லை. இதுகுறித்து தனது கவலையை அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளார். மேலும் ஊருக்கு வருவதாகவும் தேவகுமார் கூறியுள்ளார்.

    அதன்படி சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த தேவகுமார் சம்பவத்தன்று காதலியை சந்தித்து பேசியதாக தெரிகிறது. அப்போது அவர் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததோடு இனிமேல் தன்னிடம் பேச வேண்டாம் என கண்டிப்புடன் கூறியதாக தெரிகிறது. இதனால் மன வேதனையில் தவித்த உதயகுமார் இனிமேல் வாழ்வதற்கு விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் பெட்ரோல் கேனுடன் நேற்று காதலியின் வீட்டிற்கு சென்றார். மகன் தற்கொலை செய்து கொள்ள செல்வதை அறிந்த அவரது பெற்றோர் உடனே அவரை தடுக்க சென்றனர். ஆனால் அதற்குள் தேவகுமார் காதலி வீட்டின் முன்பு பெற்றோரை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    உடல் கருகிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தேவகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியில் என்ஜினீயர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
    • வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஐ.டி. என்ஜினீயர் மதுமொழி அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருப்போரூர்:

    சென்னையை அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). இவர் போரூர் சி.எல்.எப். பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர், அதே நிறுவனத்தில் உடன் பணிபுரிந்த மதுமொழி (33) என்ற பெண்ணை 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    இந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவர் வெங்கடேசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்த மதுமொழி செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் ஊராட்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த அவரது தங்கை வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று தங்கை குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்று இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஐ.டி. என்ஜினீயர் மதுமொழி அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்தவெள்ளத்தில் இறந்து கிடைந்த மதுமொழி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் ஐ.டி. பெண் என்ஜினீயர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×